Sunday, December 30, 2007

ஒரு பாகிஸ்தானியருடன் சந்திப்பும் அதன் விளைவாக சில எண்ணங்களும்

ஒரு பாகிஸ்தானியருடன் சந்திப்பும் அதன் விளைவாக சில எண்ணங்களும்

மத அடிப்படை வாதிகளைத தவிர்த்து பொதுவாக பாகிஸ்தான் தேசத்தவர் நட்பு பாராட்டுபர்களே.
அதுவும் இந்தியாவோ,பாகிஸ்தானோ அல்லாத வெளிநாட்டில்,இரு நாட்டவரும் பொதுவில் ஆசியர்கள்,எனவே எளிதாக ஒத்துப் போவார்கள்...
நானும் பாகிஸ்தானியர்களுடன் பழகியிருக்கிறேன் - இந்தியா அல்லாத நாட்டில் - சாதாரணமாக நட்புறவுடந்தான் இருக்கிறார்கள்.

ஆயினும் பெனாசிர் லண்டன் டைம்ஸ் ஷ்யாமுக்கு அளித்த ஒரு பேட்டியில்,'பொதுவாக பாகிஸ்தானிகள்,இந்தியர்களை விரும்பவதில்லை;யுத்தம் வரும் போன்ற காலங்களில் அது இந்திய ஹிந்துக்கள் மேல் அதீத வெறுப்பாகவும்,இந்திய முஸ்லீம்களின் மேல் சற்றே குறைந்த வெறுப்பாகவும் இருக்கும்' என்று சொல்லியிருந்தார்.
எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை.

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

சைவ உணவின் தாத்பரியம் மதரீதியானதோ,சமய ரீதியானதோ அல்ல;அது அன்பின் வழி வந்தது.
தன் இருப்புக்காக,வாழ்வுக்காக இன்னொரு உயிரைக் கொல்லக் கூடாது என்ற என்ற உலகலாவிய அன்பின் வழி வரும் நெறியே,சைவநெறி.சாதாரணமாக தன் உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,எனவேதான் வள்ளுவர்
தன்னூன் தான்பெருக்க மற்றுயிரைக் கொல்வானை எங்ஙணம் ஆளும் அருள்? எனக் கேட்டார்.
மற்ற உயிரைக் கொல்லும் ஒரு மனிதனிடம் அருள் இருக்கமுடியாது என்ற பொருள்.
/////////
அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர்
///////////
எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே ஒழிய மனத்தின் பாற்பட்ட வாதமல்ல.
நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.
அவற்றின் வாழ்க்கை முறையும் மனித உயிரின் வாழ்க்கை முறையை ஒத்தது;அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;அவற்றின் வாழ்வும் அன்பும்,துயரும் மனித உயிரைப் போலவே வெளிப்படையானவை.
ஒரு நெற்பயிர் இன்னொரு நெற்பயிருடன் காதல் புரிந்து,குழந்தை நெற்பயிரை உருவாக்குவதில்லை;மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,எனவே இயற்கையின் அமைப்பில் அவை 'உண்மையான' உயிர்களின் - ஆடு,மாடு மற்றும் மனிதன் போன்ற உயிர்கள் உட்பட- உணவுக்காகப் படைக்கப்பட்டவை.
அவையும் உயிர்தான்,அவற்றைக் கொன்றுதான் நீ தின்கிறாய் என்பது,புலால் உண்பவர்களின் நொண்டிச் சாக்கு.
/////////
எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும்
/////////
புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.
தெருவில் வண்டியில் அடிபட்டு, ரத்தமும் சதையுமாக அரைந்து கிடக்கும் ஒரு உயிரியின் பால் வரும் அருவருப்பே,சைவ உண்வாளி புலாலைப் பார்த்தால் வரும் அருவருப்பு...அது புரிந்து கொள்ளப் பட வேண்டியதே...
//////////
இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது.
////////////

இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.
90 களின் கடைசியில் நான் சவூதி அரேபியாவில் இருந்தபோது கூட நான் சைவ உணவாளியாக வாழ முடிந்தது;சவூதியிலேயே வாழ முடியும் போது லண்டன் போன்ற நகரில் முடியாது எனச் சொல்வதும் நொண்டிச் சாக்கின் பாற்பட்டதே.

மற்ற செரிமானம் தொடர்பான வாதங்கள் கவைக்குதவாதவை.

**************

டிஸ்கி:
///////////
அவன் அப்படி செய்வது தான் ஆச்சாரமானவன் (பார்ப்பனன் அல்லன்) என்ற சுய திருப்திக்காக செய்து கொள்வதுதான்
///////////

பிராமணர்கள் தான் சைவ உணவாளிகள்,ஆசாரமானவர்கள் எனச் சொல்வதும் ஒரு மாயையே..
சாம,அதர்வண வேதங்களில் யாக முறைகளில் கன்றீன்ற பசுவின் மடியை(பால் காம்புகளை) அரிந்து வேள்வி செய்யும் முறைகளை விவரிக்கும் கொலைகாரப் போக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது..

/////////
சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன்..
/////////

அதில் பெருமை இருந்தால் புரிந்துகொள்ளப் பட வேண்டியதே அன்றி,இகழ்ந்து பேசப்பட வேண்டிய ஒன்றல்ல.

*****************************************

>>>>>>>>>>>>
//உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,//

இப்படி எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உலகில் புலால் உண்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அவர்கள் அனைவரும் அன்பில்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா?

>>>>>>>>>>>>>

மற்றொரு உயிரின் மேல் அன்பிருக்கும் போது அதைக் தன் உணவுக்காக கொல்லத் துணிந்தால்,'உன் மேல் எனக்கு மிக அன்பு அதனால்தான் உன்னைக் கொல்கிறேன்' என கருதச் சொல்வீர்களா????

>>>>>>>>>>>>>
//எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே//

இது விதண்டாவாதமா? இல்லை

//நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.//

இது விதண்டாவாதமா? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
>>>>>>>>>>>>>>

நீங்களே அமைதியாக சிந்தியுங்கள் !!!

>>>>>>>>>>>
//அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;//

நான் அடிக்கடி வேடிக்கையாக சொல்வதுண்டு. மான், மயில் போன்ற உயிரினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மனிதன் அவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டுமென்று. நீங்கள் பார்த்தீர்களானால் ஆடும், கோழியும் மானையும் மயிலையும் போன்றவைதான். இந்த புவியில் மனிதன் இருக்குமட்டும் அவற்றுக்கு அழிவென்பது இருக்க வாய்ப்பில்லை.
>>>>>>>>>>>>>>

நான் சொல்வது அவற்றின் வாழ்க்கை முறை பற்றி...
அவற்றை கொன்று தின்பதால் அந்த இனங்கள் பூமியில் இல்லாமல் போய்விடக் கூடும் என்பது என் வாதமல்ல...மீண்டும் நான் எழுதியதைப் படியுங்கள்....

>>>>>>>>>>>>>
//மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,//

இயற்கையாக நெற்பயிர் வளரமுடியாது என்கிறீர்களா?
>>>>>>>>>>>>>>

யாராவது விவசாயம் செய்பவரை அறிந்திருந்தால் கேளுங்கள்,சொல்லுவார்..
அதற்கு முன் நாற்றுக்கும் நெற்பயிருக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்...

>>>>>>>>>>>
//புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.//

இதிலென்ன ஈகோ இருக்கிறது. அருவருப்பாக இருக்கிறது, வாந்தி வருகிறது என்று சொல்லப்படும்போது அது மனதைத் தைத்தாலும் புலால் உண்பவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள். அதற்காக சில விட்டுக்கொடுத்தல்களையும் செய்கிறார்கள். அருவருப்பாகப் பார்ப்பது அநாகரிகமானது என்று சொல்கிற ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :))
>>>>>>>>>>>>

நீங்கள் மனதைத் தைக்கிறது என்கிறீர்கள்,நான் ஈகோ என்கிறேன்.

>>>>>>>>>>>>
//இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.//

ஒத்துக்கொள்கிறேன். காந்தியால் இதே இலண்டனில் அதுவும் அந்த காலத்திலேயே முடிந்திருக்கிறது.
>>>>>>>>>>>>>>

That's the Spirit...

2007 நான்கு வரி மட்டும்.

2007 நான்கு வரி மட்டும்.

///////////
பாகிஸ்தானில் ஜனநாயகம் மலருமா ? பலரது கேள்விக்கும், பெரிய அண்ணனின் தயவால் (?) சென்ற ஆண்டின் ஈராக்கில் ஜனநாயகம், அதன் அவசர நிகழ்வாக சாதமின் தூக்குதண்டனை, இந்த ஆண்டு பெரியயாண்ணனின் பாகிஸ்தான் மீதுள்ள ஜெனநாயக பரிவின் காரணாமாக, அவர்தம் அன்பு வேண்டுகளை தட்ட முடியாமல் பெனாசிர் பாகிஸ்தான் சென்றதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்,
////////////////
அமெரிக்காவிற்கு பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர வேண்டிய பரிவெல்லாம் ஒன்றுமில்லை.
அவர்களுக்கு ஆசியாவில் கேந்திரமான் இடங்களில் காலூன்ற,கண்காணிக்க இடங்கள் தேவை;அதற்கு பாகிஸ்தான் நல்ல இடம்,இந்தியா,சீனா இரண்டையும் ஒரு கண் தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் முஷாரஃப் புஷ் நினைத்ததை விட கெட்டிக்காரராக,பாம்புக்குத் தலை கீரிக்கு வால்,என அமெரிக்கா கொட்டிய பணத்தையும் வாங்கிக் கொண்டு திரைமறைவில் தீவிர வாதிகளையும் ஊக்குவித்தார்.இது பாகிஸ்தானில் எளிதான அமெரிக்க படைகளின் நடமாட்டத்தை முடக்கியது(தீவிரவாத மத அடிப்படைவாதிகள் அதை விரும்பாததால்!).
அமெரிக்கா பெனாசிருக்கு நம்பிக்கை அளித்து,முஷாரஃபுக்கும்,பெனாசிருக்கும் பஞ்சாயத்து செய்து,பெனாசிரை களத்தில் இறக்கியது.
பெனாசிர் பலம் பெரும் பட்சத்தில் முஷாரஃப் கொல்லப்பட்டோ நீக்கப்பட்டோ,அமெரிக்காவின் சிரமங்கள் அற்ற இருப்புக்கு பாகிஸ்தான் அரசு உதவிகள் செய்திருக்கக் கூடிய நிலை வந்திருக்கக் கூடும்.அமெரிக்காவிற்கும் அப்படி ஒரு நிலைப்பாட்டை கருத்தில் கொண்டுதான் பெனாசிரைக் களத்தில் இறக்கியது.
பெனாசிரைப் பொறுத்த அளவில் இளமைக்காலத்தில் அவ்ர் மனத்தில் பதிந்த மேற்கத்திய ஜனநாயக வழிமுறைகள் பதிந்து போனதால்,பாகிஸ்தானில் அவற்றை நிறுவ முடிந்தால் நல்லது என நம்பினார்.அமெரிக்கா அவருக்கு முஷாரஃபால் ஆபத்தில்லை என நம்பிக்கையூட்டி அனுப்பியிருந்திருக்கும்.
பெனாசிர் எச்சரிக்கையுடன் இல்லை,முஷாரஃப் அதீத விழிப்புடன் இருந்திருக்கிறார்.
அதுதான் இந்த விளைவு

Friday, December 28, 2007

தி ..யாகம்

தி ..யாகம்
உண்மைதான்.
தாய்மையில் இருப்பது முதலில் அன்புதான்.
ஆனால் ஒரு தாய்தான் வாழும் சூழ்நிலையை மீறி தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி பல்வேறு இன்னல்களை வீரும்பி ஏற்றுக் கொள்ளும்போதுஅந்த அன்பில் தியாகத்தின் சாயல் படர்கிறது.
பெரும்பாலான குடும்பங்களில் இந்த இன்னல்களைப் பெண் விரும்பி ஏற்கிறாள்,எனவே தாய்மை இயல்பாகப் போற்றப்படுகிறது..ஆனால் சில குடும்பங்களில் சில அப்பாக்களும் இந்த இன்னல்களை விரும்பி ஏற்கிறார்கள்...
ஆனால் உண்மையான,முழுமையான தியாகம் என்னவெனில் கேட்டால்,ஒரு பகத்சிங்கின் வாழ்க்கை ஒரு தியாகம்,ஒரு வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு தியாகம்..

Sunday, December 23, 2007

மலர் மாலை*

மலர் மாலை*

//
பலரின் பார்வையில் சில சந்தர்ப்பங்களின் பிரியமான உரையாடல்கள் எப்போது எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே காலம் கடந்த பிறகே அறிந்து கொள்ளும் ஞான சூன்யமாகவே இருந்திருக்கிறேன்.
//
இவ்வகையில் பெண்களுக்கு இயல்பான நுண்ணுணர்வு உண்டு.வேண்டாத வேளைகளில் மொழி படம் போல மூளைக்குள் விளக்கெரியும்,எனவே எப்போதும் போல பிரியமாய் இருங்கள்.

//
இந்த ஒருவார காலம் அளித்த படிப்பினைகள், உணர்வுப்பிழம்பான மனமாற்றங்கள் காலத்துக்கும் போதும்
//
"பாதகஞ் செய்பவரைக் கண்டால்,
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா-
மோதி மிதித்து விடு பாப்பா-
அவர்முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..."


இறுதியாக ஒன்று...

உலகில் நம்மிடம் இருக்கும் பொருளைக் பிறருக்குக் கொடுக்க,கொடுக்க,நம்மிடம் அப்பொருள் வேகவேகமாக வளரும்,அது என்ன தெரியுமா...அன்புதான் !!!!!!!

"உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர் "

தேர்தல் ஆணையமும் நடுநிலைமையும்

தேர்தல் ஆணையமும் நடுநிலைமையும்

ராகவன்,இந்தியாவின் எந்த அமைப்பும் சமீப காலங்களில் ஆளும் தரப்பை எதிர்த்து உறுதியாக செயல்பட்டதாக என எனக்கு நினைவில்லை.சேஷன் கூட அவ்வளவு உறுமிவிட்டு கடைசியில் ஆளும் கட்சிக்குப் பணிந்து போனதாகத்தான் நினைவு.இது இன்றைய நாட்களில் சாதாரணம் என்று ஒத்துக் கொள்ளும் அளவிற்கு மக்களும் வந்து விட்டார்கள்...மற்றபடி சோனியா,மோடி பற்றிக் கூறுகையில் மோடி பல மேடைப் பேச்சுக்களில் சவால் விடும் வகையில்தான் பேசினார்;மோடி குஜராத்தில் பல முன்னேற்றமான காரியங்கள் செய்திருந்தாலும்,அவரின் விமர்சனத்துக்குள்ளான செயல்களுக்கு அவர் பொறுப்பான பதிலை இதுவரை சொல்லவில்லை.ஒருவர் திறமையாளராக இருக்கிறார் என்பதற்காக அவரின் குற்றச் செயல்களையும் ஆதரிக்கலாம் என்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை.

மரணதண்டனை தேவையா ?

மரணதண்டனை தேவையா ?

நீங்கள் மனிதநேயக் கூற்றில் இதைக் கூறலாம்.ஆனால் கொடும் குற்றங்கள் நிகழ்த்துவோரும் மனித நேயத்தைக் கொன்று விட்டுத்தான் குற்றங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஆயினும் கொடும் குற்றங்கள் செய்தவர்களுக்கு,மரணதண்டனையன்றி நீங்கள் கூறுவது போல வாழ்நாள் தனிமைச் சிறை கொடுத்தாலும்,குற்றவாளி தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்துவான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அவன்,ஆகா,நாம் கொடிய குற்றம் செய்தாலும்,நமது உயிர் தப்பித்தது என்று உள்ளூர மகிழ்ந்து வாழ்க்கையைக் கழிக்கலாம் இல்லையா?
அவனது குடும்பத்தினரும் சரி,எப்படி இருந்தாலும் அவன் உயிருடன் இருக்கிறான்,தேவைப் பட்டால் சிறை அனுமதி வாங்கி அவ்னைப் பார்த்துவிட்டு வரலாம் என்ற சூழலும் இருக்கிறதல்லவா?
மேலும் இவ்வுலக வாழ்வில் எவ்வளவு சம்பாதித்தாலும்,எவ்வளவு சக்தி கொண்ட பொறுப்பில் இருந்தாலும்,உயிரை இழந்துவிட்டால் உலகில் இருக்கும் எந்த செல்வத்தாலும்,அதிகாரத்தாலும் பயன் இல்லை அல்லவா?

ஆக ஒரு உடைக்க முடியாத தடையாக-deterent- ஆக இருப்பது மரண தண்டனை ஒன்றுதான்.எனவே மரணதண்டனை ஒரு நிச்சயத்தேவை என்பதோடு,அது தயவு தாட்சணியம் இன்றி,ஓட்டுப் பொறுக்கித் தனம் இல்லாமல் நிறைவேற்றப்படவேண்டும்.
ஏனெனில்,

1.அது கொடும் குற்றங்கள் நிகழ்த்துபவர்களுக்கு நிச்சயம் ஒரு deterrent ஆக இருக்கிறது.

2.குற்றவாளியின் குடும்பத்தவரும்,இக்குற்றச் செயலில் ஈடுபட்டால் நாங்கள் உன்னை நிரந்தரமாக பிரியவேண்டிவரும்,எனவே இதைச் செய்யாதே என்ற கூறில் குற்றத்தைத் தடுக்கும் முகாந்திரம் வரும்

3.தயவுதாட்சணியம் இல்லாத த்ண்டனை நிறைவேற்றம் சமூக அளவில் குற்றச் செயல்களுக்கு ஒரு deterrent ஆக இருக்கும்.

4.குற்றத்தை நிகழ்த்திவிட்டு குற்றவாளியைத் திருத்த வேண்டும் எனச் சொல்வதை விட,குற்றம் நிகழ வாய்ப்பில்லாத சமூகச் சூழலே ஆரோக்கியமானது.

இன்று உலக அளவில் குற்றங்கள் குறைந்திருக்கிற நாடுகள்,தயவு தாட்சணியம் இல்லாமல் தண்டனைகளை நிறைவேற்றுகின்ற நாடுகளே.

மும்பையிம் மாறி மாறி எத்தனைமுறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன,எத்தனை அப்பாவிகள் பலியானார்கள்? பயங்கரவாதிகள்தான் அதை நிகழ்த்தினார்கள் எனத் தெரிந்தும் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது?இந்தியா டுடே இதழ் Indian state became soft targets என அழகாகச் சொன்னது !

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொடும் குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணம் என்ன ? குற்றம் இழைத்தால் நம் உயிர் நமக்கு இல்லை என்ற உறுதியான சூழல்தான் !

நமது மனோபாவத்தில் ஆரோக்கியமான மாறுதல்களோடு நல்ல சமூகத்திற்கு சரியான குற்றவியல் நடைமுறைகளும் சட்டங்களும் தேவை,அதுவே சாதாரண மனிதனின் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வை உறுதி செய்யும் !!!!!1

*********************

கண்ணன்,நீங்கள் சீனியர் லீ'யின் தி சிங்கப்பூர் ஸ்டோரியை'ப் படித்திருக்கிறீர்களா?
He says that He learnt to deal with crime makers only from happenings from japanese invation.He says,he learnt the lesson of punishing heavily on the heinous crimes from Japanese and also during their period of invation,singapore was relatively crime free.லீ'யின் அந்த உறுதியான அணுகுமுறைதான் இன்றைய பாதுகாப்பான சிங்கப்பூரின் அடித்தளம்.கிட்டத்திட்ட அதே நேரத்தில் விடுதலை பெற்ற இந்தியா,உறுதியான அணுகுமுறை இருந்திருந்தால் எங்கோ போயிருக்கும்,நமது விளக்கெண்ணெய் ஜனநாயகக் கொள்கைகளால் நமக்கு நேர்ந்த அழிவுகள் அதிகம்.மேலும் நான் ஐரோப்பா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து பார்த்திருக்கிறேன்.எனது பார்வையில் எந்த நாடுகளில் கொடும் குற்றங்கள் கடுமையாக அணுகப்படுகின்றனவோ,அங்கெல்லாம் சமூக அமைதி இருக்கிறது.கொடும் குற்றங்களைக் கடுமையாக அணுகுவதற்கும்,சர்வாதிகாரப் போக்கிற்கும் உள்ள வேற்றுமையை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மேலும் தண்டனைகளை நீக்கிவிட்டு மக்கள் நேர்மையாக கொடும் குற்றம் இழைக்காமல் வாழ்கிறார்களா எனப் பார்ப்பதை விட,கொடுங்குற்றத்திற்கு மரணதண்டனை உண்டு என்ற பயத்திலாவது குற்றச்செயல்கள் இல்லாதநிலை எவ்வளவோ மேல் !
தண்டனைகளை மீறி கொடும் குற்றங்கள் இழைப்பவர்கள் தனிமனிதர்கள்தான்,அவர்களுக்கு சமுதாயம் கொடுக்கும் deterrent-பயங்கள் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள் சொன்னாலும்,சமூகத்தின் வியாதி போன்ற அத்தகையவர்கள் நீக்கப்படுவது சமூகத்தை சுத்தப்படுத்தும் !

Saturday, December 22, 2007

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!
ஏதேனும் ஒரு புதிய விதயத்தை கற்கத்துவங்குங்கள்,காலாற எங்கேனும் நடவுங்கள் அல்லது ஒரு முறை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்குச் சென்று அங்கு வரும் தன்னார்வலர்களின் தகுதிகள்,படிப்பு மற்றும் வேலைகள் சம்பந்தமாக விசாரித்துப் பாருங்கள்,அல்லது தமிழிலக்கியங்களின் தேர்ந்த புத்தகங்களைத் தெரிவு செய்து கொண்டு படிக்கத் துவங்குங்கள்...வாழ்க்கை எண்ணில்லா கிளைகளைக் கொண்ட மரம்.நாம்தான் ஏறிய கிளையை விடாது தொங்கும் குரங்காய் வாழ்வைத் தேய்க்கிறோம்..

Thursday, December 20, 2007

சிதம்பர ரகசியம் - ஒரு இடைவேளை!

சிதம்பர ரகசியம் - ஒரு இடைவேளை!
என்னுடைய பின்னூட்டங்களை விவரங்கள் சேகரிப்பதற்காகவே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஆயினும்,உறுதிபட நான் சொல்லும் விதயம் பொன்னம்பல சபை எனும் மேடை இருக்கும் சன்னிதி வட்டாரத்தில் திருமுறைகள் பாடப்படுவதை தீட்சிதர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்(என்ன காரணம் என்பதுதான் புரியவில்லை???????)திருமுறைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய ஒரு கூட்டத்தவர்களின் ஆதார செயல்பாட்டு இடமாக ஒரு காலத்தில் சிதம்பரம் கோவில் இருந்திருக்கிறது என்பதும் ஆதாரபூர்வமான உண்மை.எனினும் உண்மைகளைத் தேடி முன்வைக்க விழையும் எண்ணத்தை நான் வரவேற்கிறேன்.
*****************************
//
சைவ ஆகம முறைப்படிதான் முன்னர் இருந்ததாயும், பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றிவிட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும், வேதத்தின் ஒரு பகுதியே எனவும், ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும், ஒருமுறை படிச்சேன்.
//
சைவ ஆகமங்கள் கிரந்தத்தில்-நீங்கள் வடமொழியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் - ஒரு நாளும் இல்லை;அவை தீந்தமிழ் மொழியிலேயே ஆதிமுதல் இருக்கின்றன;வேதங்கள் எனச் சொல்லப்படுகின்ற ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் தவிர ஏனைய கிரந்த,வேத,ஆகமக் கருத்துக்கள் கடத்தப்பட்ட கருத்துக்கள்,எனவேதான் தமிழ் நூல்கள் மறைக்கப்பட்டதும்,நான்கு வேதங்களின் content'ம் இவ்வகை பிற்கால ஆகமங்களின் content'ம் முற்றிலும் வேறுவேறாக இருப்பதின் காரணங்கள்-என்பதுதான் செய்தி..

Wednesday, December 19, 2007

எம்.எஸ்.வி. துப்பிய எச்சில்தான் இன்றைய இசை!

எம்.எஸ்.வி. துப்பிய எச்சில்தான் இன்றைய இசை!
யோகன்,SPB வாய்ப்பு குறைந்த்தால் அப்படிப் பேசினார் என்று சொல்ல வாய்ப்பில்லை(அடடா,என்ன மோனை?????),ஏனெனில் காபி வி அனுவில்(சுமார் 3 மாதங்களுக்கு முன் ஒளிபரப்பானது) வந்த அவரின் தங்கை சைலஜா,அண்ணன் இனிமேலும் இளமைக்கால்ம் போலவே நினைத்துக்கொண்டு மிகவும் உழைக்கிறார்,அவர் வேலை செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.எந்தஒரு துறையிலும் சிகரம் தொட்டவர்கள் அவரவர் துறைகளில் தரம் நீர்த்துப் போகும்போது இவ்வகையான கோப வெளிப்பாடுகள் வருவது இயற்கைதான்.யோசித்துப் பாருங்கள்,ஒரே ட்ராக்கில் அவர்கள் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள் எனில்,எத்தனைவித பிண்ணணி இசைக்கருவிகள் இருக்கிறதோ,அத்தனையுடன் பாடும் மக்களும் இணைந்து ஒரே சமயத்தில் quality இசை கொடுக்கவேண்டும்;இன்று 200 டிராக் இருந்தும் தரம் இல்லையெனும் போது,அவரின் கோபம் தார்மீகமானது,உண்மையானது.

பரிபாக்ஷை - ரசிகனின் விமர்சனத்திற்கு பதில்

பரிபாக்ஷை - ரசிகனின் விமர்சனத்திற்கு பதில்

நண்பரே,கலந்து கட்டி அடிச்சுருக்கீங்க..பரிபாஷை என்பது தமிழ்ச்சொல்லா என்ன?எனில் அதன் வேர்ச்சொல் என்ன?அப்புறம் கண் + நாக்கு = கணக்கு என்பது தமிழின் எந்த புணர்ச்சி விதி இலக்கணத்தில் வருகிறது?நல்ல விதயங்களைச் சொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் போற்றுதலுக்குரியது,ஆனால் ரொம்ப உணர்வின் வயப்பட்டு எழுதியதில் தவறி இருப்பது போல் தோன்றுகிறது..அப்புறம் புதுக்கோட்டையில்(திருச்சி- புதுக்கோட்டைதானே????) என்ன செய்கிறீர்கள்? புதுகை அடியார் திருக்கூட்டத்துடன் தொடர்பு உண்டா?

Tuesday, December 18, 2007

சுஜாதா மீது ஏன் இந்த கோபம்????

சுஜாதா மீது ஏன் இந்த கோபம்????
உலகில் எந்த மனிதனும் முழுக்க 100 சதம் முழுமையானவர்களில்லை,இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.எழுத்தாளர்களில் பொதுவாக இருவகை உண்டு,தங்கள் வாழ்க்கை,சூழல் சார்ந்த எழுத்திகளால் பெயர் அடைந்தவர்கள்,அவர்களால் வேறு பாணியில் எழுதவே முடியாது.(எ-டு)கி.ரா.மற்று சிலர் புரியாத மொழியில் பின்,புண் நவீனத்துவங்கள் எழுதி மண்டையை உடைக்கும் ஒரு வகை.இரண்டிலும் சாராத அவரவர் பாணிக்குள்ளேயே எழுதும் லாசரா போன்றோரும் உண்டு.ஆனால் அறிவியல்,பொழுதுபோக்கு,சிறுகதை,நாவல்,கட்டுரை,விஞ்ஞானம்,இணையம்,இலக்கியம்,திரைஉலகம் என கை வைத்த எல்லாத்துறையிலும் முத்திரை பதித்த எழுத்தாளர் எவரும் உண்டா?மற்றபடி பெண்ணையும்,காமத்தையும் பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் அனைவருமே எழுதியிருக்கிறார்கள்.இன்று இணையப் பதிவுகளில் எழுதுபவரில் 100 க்கு 90 பேரிடம் சுஜாதாவின் எழுத்தின் படிமமோ,பாதிப்போ இல்லாதிருக்காது.இதை நேர்மையுடன் ஒத்துக்கொள்ள அவர் பிறந்தகுலம் பலரின் மனதில் நெளிந்து தடுக்கிறது.இப்படி எழுதுவதால் என்னை பிராமண விசுவாசி என் முத்திரை குத்த பல நண்பர்கள் துடிப்புடன் வருவார்கள் என அறிந்தே இதை எழுதுகிறேன்.

Monday, December 17, 2007

இந்திய தேசியம்: தாய் மண்ணே வணக்கம்

இந்திய தேசியம்: தாய் மண்ணே வணக்கம்*

காஷ்மீர் என்பது இந்தியாவின் தொண்டையில் பதிந்த முள்.நமது மைய அரசாங்கங்களில் நரசிம்மராவ்,வாஜ்பாய் தவிர்த்த அனைவரின் அரசுகளும் காஷ்மீர் விதயத்தை முட்டாள்தன்மாகவோ அல்லது முதுகெலும்பில்லாமலோதான் கையாண்டார்கள்.துரதிருஷ்டவசமாக இருவருக்குமே அடுத்த ஐந்தாண்டுகள் கிடைக்கவில்லை.காஷ்மீர் மூன்று முனைகளில் கையாளப்படவேண்டும்,காஷ்மீரிகளுக்கு வெட்டிப்பொழுது கழித்து தீவிரவாதம் வளர்க்காமல் உருப்படியாக செய்ய ஏதாவது ஒரு வேலை,எல்லை தாண்டிவரும் கூலிப் போராட்டத்தவரை தயவின்றி நசுக்குதல்,எல்லாவற்றிற்கும் மேலாக பாக் அரசுடன் சுமுகநிலை.வாஜ்பாய் மூன்று நிலைகளிலும் சரியான திசையில் சென்றார்,ஆயினும் முஷாரப்,நவாசின் முதுகில் குத்தி,முகத்தில் கரிபூசி அந்த வகை சமாதானம் தொடராமல் பார்த்துக்கொண்டார்.இன்றையநிலையில் எல்லாமே மீண்டும் தொடங்கப் படவேண்டும்..

Sunday, December 16, 2007

உவமைகளில் பொய்யும் மெய்யும்

உவமைகளில் பொய்யும் மெய்யும்
அழகிய கவிதை.
சானட்ஸ்கள் ஷேக்ஸ்பியரின் அழகோவியங்கள்.
Love is not love which alters when it alteration finds என்ற வரிகளடங்கிய சானட்ஸின் கவிதை படித்திருக்கிறீர்களா?
உலகெங்கும் காதலோ,அழகோ நிரம்பிய நெஞ்சர்கள் வர்ணிப்பில் இறங்குவது கண்கூடு.
இதில் அடங்கிய என்னுடைய கவிதை-கல்லூரிக் காலத்தில் எழுதியது-வானம் அவளுக்கு நிலமாக
தூவும் பனித்துளி இதழாக
மேவும் தென்றல் காற்றதுவும்
எனை மேயும்பார்வை அதுவாக
வஞ்சிப் பூவின் மணமதுவும்
வஞ்சியவளின் மணமாக,
சிதறும் பவழ சிகப்பழகும்
அதரம் கண்டு வெட்கியழ..
எனத் தொடரும் ஒரு கவிதை...

Wednesday, December 12, 2007

இயற்பியலில் உண்மையும் அழகும்

இயற்பியலில் உண்மையும் அழகும்

I have visited occationally ted.com ,following a note from writer sujatha in one of his columns in katrathum petrathum.Being a science graduate,especially physics, I think you guys enjoy this verymuch.I am a maths graduate & a chartered accountant by profession & qualification,but on hearing Murray,I do appreciate that Scientific inventions & new breakthroughs have lot of symmetry and similarity between one theory & other.I think it follows in any branch of knowledge based explanation that the explainer’s lucidity in explaining things are also based on this understanding.As he finishes,to explain something more,we need not need something more !

Tuesday, December 11, 2007

கோவில் ஒன்று சந்தேகங்கள் இரண்டு

கோவில் ஒன்று சந்தேகங்கள் இரண்டு
மற்ற உங்கள் செய்திகள் சுவாரசியமாய் இருந்தாலும்,இம்மையில் நன்மை தருவார் கோவில் என் கண்களில் சிக்காமல் போனது வியப்பு,இத்தனைக்கும் முருகன் இட்லிக்கடையில் பலமுறை வெளுத்து வாங்கியிருக்கிறேன்;என் மனைவி(அவளின்)அம்மா வீடே சுகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்,அவளை ஒருமுறை இக்கோவிலுக்கு அழைத்துப் போகிறேன்,உங்கள் trick பலிக்கிறதாவெனப் பார்க்கலாம்...
Jokes Apart,சங்கப் பாடல்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் இறையனார் என்ற பெயர் பலமுறை வருகிறது,எல்லாமே இறைவனதாக இருக்க சாத்தியமில்லை-ஔவையார் போல-எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட இறையனார்கள் இருந்திருப்பார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது,கொங்குதேர் வாழ்க்கை-இறைவனாலேயே பாடப்பட்டது என் எண்ணினாலும் கூட !

Monday, December 10, 2007

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்
ஞானி அவ்வாறு எப்படி எழுதப் போகும்,அவர் பார்பனராக இருப்பதால் எழுதுகிறார்,அதை விகடன் எப்படி வெளியிடப் போகும் என்றெல்லாம்(விதண்ட)வாதம் செய்யும் அன்பர்களுக்கு,
மு.க.அவர்கள் எவ்வளவு பெரியவரானாலும்,எவ்வளவு சிறந்தவரானாலும்(இதற்கான கருத்துக்களுக்குள் நான் நுழையவில்லை,அதில் என் தீர்மானங்கள் எப்படியிருப்பினும்) ஒரு மாநிலத்தின் மக்களுக்கு தங்கள் முதல்வர் எப்படி இருக்கிறார்,எவ்விதம் செயல்படுகிறார்,அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது,அவரின் பணிச்சுமைக்கு ஒத்துழைக்கும் ஆரோக்கியம் அவருக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் விமர்சிக்கவும்,அத்தகைய விமர்சனங்களை சந்திக்கவும் உரிமைக்கும்,கடமைக்கும் உள்ளானவர்கள்.
தமிழக அரசு ஒன்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனம் அல்ல;இவற்றை விமர்சனம் செய்ததாலேயே'நல்லவேளை,விகடன் அலுவலகம் மதுரையில் இல்லை' என்றெல்லாம் தெரிவிக்கும் கருத்துக்கள்,நாம் வாழும் சமூக,அரசியல் சூழலையே கேள்விக்குறிக்குள்ளாக்குவதோடு,அரசாண்மை(Governance) பற்றிய நம் மக்களின்,படித்த மக்களின் முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நாளை திமுக பதவியில் இல்லாத நிலை வரும்போது,முக அவர்கள் இதே நிலையில் முரசொலி அலுவலகத்துக்கோ,கலைஞர் டிவி அலுவலகத்துக்கோ தினமும் சென்று 10 மணி நேரம் உழைத்தால்,அதைப் பற்றி ஞானி கண்டிப்பாக எழுதமாட்டார்,அப்போது எழுதினால் இந்த வன்மையான கண்டனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையும்,புரிந்துகொள்ளப்பட வேண்டியவையும் !
It's about the healthy practices across the globe,on how a head of state should be,should function etc..
நம் மக்கள்(ஓரளவு படித்தவர்கள் கூட) இவ்வளவு அடிமை மனோபாவ கட்சிஅரசியலில் மூழ்கி இருப்பதுதான் நாட்டின் சாபக்கேடு !

காந்திஜி & கஸ்தூரி பா

காந்திஜி & கஸ்தூரி பா
காந்தி என்ற தனிமனிதர் மஹாத்மா ஆவதற்கு முற்றிலும் தகுதியானவரே;ஆயினும் காந்தி என்ற ஒரு அரசியல்/தேச சுதந்திரப் போர் தலைவர் சரியான வழியில் செயலாற்றியிருக்கிறாரா என்பது மிகவும் விவாதத்துக்குரிய விதயமே.ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார்,ஏன் நிறுத்தினார் போன்றவை அரசியல் தலைவராக அவர் ஒரு குழப்பவாதியாக இருந்தாரோ என்ற சந்தேகம் பலருக்கும்(எனக்கும்) உண்டு...ஆயினும் ஒரு நாடறிந்த மனிதர்,தலைவர் எவ்விதம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கு சத்தியசோதனை ஒரு சிறந்த உரைகல்.

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

பலூன் மாமா நையாண்டியாகச் சில சொற்கள் சொன்னாலும் சில உண்மைகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.சைவ ஆகமங்களுக்கும்,வைதீக முறைகளுக்கும் என்ன வேறுபாடு என்பது புரியவில்லை எனச் சொல்லியிருக்கிறீர்கள்(விநோதம்,நீங்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால்!).சைவ ஆகமங்கள் திருமுறைகள்-முக்கியமாகத் திருமந்திரம்,அதனைத் தொடர்ந்த சித்தாந்த ஆகமங்கள்-அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்தவை-ஆகியவை.திருமந்திரம் மொத்தம் 8000 பாடல்களால் பாடப்பெற்றது என்பதும்,திருமூலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்(திரூமூலர் வடிவில் இறைவனே வந்ததாகவும் சொல்வோர் உண்டு)யோகத்தின் மூலம் உலகில்,திருவாவடுதுறையில் வாழ்ந்ததாகவும் செய்து உண்டு.வைதீக முறைகளுக்கான ஆவணங்கள் வேதங்கள் என சொல்லப்படுகின்ற-ரிக்,சாம,யஜுர்,அதர்வண நூல்கள்,மற்றும் உபநிஷதங்கள் என சொல்லப்படுகின்ற நூல்கள்.பொதுவாகக் கேட்டால் ரிக்,யஜுர்,சாம,அதர்வண நூல்களின் சாரம் உபநிஷத்துகளில் உள்ளது என பிராமணர்கள் கூறுவார்கள்;ஆனால் ரிக்,யஜுர்,சாம,அதர்வண நூல்களில் சமயக் கருத்துக்கள் எதுவும் இல்லை எனவும்,அவை வெறும் விதிகள் பற்றிய விவரணங்கள் எனவும்(எவ்வாறு யாகங்கள் புரிவது,அவற்றில் என்ன,என்ன பலியிடப்பட வேண்டும்,போர்க்கலையின் விவரங்கள்,வித விதமான ஆயுதங்கள் பற்றிய விவரணங்கள்),உபநிஷத்துக்கள் உண்மையில் சைவ ஆகமங்களை மொழிமாற்றம் செய்தும் திரித்தும் வடமொழியில்-சமஸ்கிருதத்தில்-எழுதப்பட்டவை என்றும்,அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்பு சைவ ஆகமங்கள்,திருமுறைப் பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் நடராசர் கோவிலில் வைத்து தீட்சிதர்களின் முன்னோர்களால் மறைக்கப்பட்டன,அழிக்கப்பட்டன(திருமந்திரத்தில் இன்று கிடைத்திருக்கும் பாடல்கள் 3000 மட்டுமே)எனவும் ஒரு பார்வை உண்டு.இன்றளவும் திருமுறைகள் நடராசர் கோவிலில்-தமிழகத்தில் இருக்கின்ற ஒரு தமிழ் கோவிலில்,தமிழ் மறைகளான திருமுறைகள் கேட்கக்கூடாது-என்ற விநோதக் கோட்பாட்டை தீட்சிதர்கள் முன்னிருத்துகின்றனர்.பலூன் மாமா சொல்வது போல வரலாறு திரிபடக்கூடாது எனவே இத்தனையும் எழுதினேன்.

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

தில்லை கோவில் தீட்சிதர்களின் பொறுப்பிற்கு வந்ததற்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.சிதம்பரம் கோவிலும் சைவ ஆகம முறைப்படிதான் எல்லாம் நடந்தன;தீட்சிதர்கள் கோவிலில் நுழைந்தது சுந்தர சோழனுக்குப் பின் வந்த உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் தான் என்றும்;உத்தம சோழனுக்கு(ராஜராஜனையும்,ஆதித்தனையும் மீறி) ஆட்சிப்பொறுப்பு கிடைக்க அவனே வீரபாண்டியனின் ஆட்களுடன் கூட்டுச் சதி செய்ததாகவும்;ஆகையினாலேயே ஆதித்தன் சதியால் கொல்லப்பட்டதாகவும்;எதிரிகளில் சதியும் அரசியல் பலமும் அறிந்த ராஜராஜன் வீரநாராயணபுரத்தில் சுமார் 12 ஆண்டுகள் விலகி வாழ்ந்ததாகவும்;உத்தம சோழ்னுக்கு உதவ வந்த பாண்டியனின் சதிகாரர்களில் சேரத்தைச்(இப்போதைய கேரளம்) சேர்ந்த கொடும்போர் செய்யும் சேர ஆரியர்கள் வந்து சோழ நாட்டின் முக்கியப் பதவிகள் கேந்திரங்களில் அமர்ந்ததாகவும்;அக்கால கட்டத்திலேயே சிதம்பரம் கோவில் முழுமையாக சேர ஆரியர்கள்-தீட்சிதர்கள் பொறுப்புக்குப் போனதாகவும்,அவ்ர்களே தீட்சிதரின் முன்னோடிகள் என்றும்;அவர்கள் முழுமையாக சைவ ஆகமங்களையும் திருமுறைகளையும் அழிக்கமுயன்ற பொழுதில் ராஜராஜன் நம்பியாண்டார் நம்பி துணையோடு குறுக்கிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்த திருமுறைகளை வெளிப்படுதியதாகவும்;இன்றளவும் நடராஜர் கோவிலில் திருமுறைப் பாராயணம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கொலை,வழக்குமன்றம் வரைக்கும் சென்றுள்ளதும்;இன்னொரு கோணத்திலான வரலாற்றுச் செய்திகள்.
தங்களது பல குறிப்புகள் தவறான தகவல்களைத் தரக் கூடிய ஆபத்து இருக்கிறது;எனவே தகவல்களை உறுதி செய்து எழுதுங்கள்.

Friday, December 7, 2007

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

எனக்கும் பாலாஜிக்கு எழும் சந்தேகங்கள் எழுவதுண்டு.
1.உண்மையில் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புலிகள்தான் குரல் கொடுக்கிறார்களா?
2.புலிகள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் ஒன்று உருவாவதை எது தடுக்கிறது?
3.இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான,தன் குடிகளையே தன் ராணுவத்தைக் கொண்டு தாக்கும் வெறிச் செயலை தடுக்கவாவது,புலிகள் சிறிது காலம் அமைதி காத்து,அரசியல் தீர்வுக்கான பாதையை முன்னெடுத்துச் செல்வதை எது/என்ன/யார் தடுக்கிறார்கள்?
4.புலிகளை ஒடுக்குகிறேன் பேர்வழி என இலங்கை அரசு செய்யும் செயல்களை ஏன் அனைத்து நாடுகளும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருகின்றன??
கேள்விகள்,கேள்விகள் என அவைதான் மிஞ்சும் போலிருக்கிறது கடைசியில் !

Thursday, October 18, 2007

புதிர்கள் - எண் - 8

புதிர்கள் - எண் - 8

1.ஒரு கயிறை இரண்டாகவும்,இன்னொரு கயிறை நான்காகவும் மடித்து மடித்து ஒன்றுக்கு அப்புறம் மற்றொன்றாக கொளுத்தினால்,இரண்டும் எரிந்து முடிக்க 45 நிமிடங்கள் ஆகும் !
2.
(I)5 லிட் நிரப்பி,அதைக் கொண்டு 3 லிட் நிரப்பினால்- இருக்கும் அளவு முறையே 3 லிட்,2 லிட்,3 லிட்.
(II)இப்போது கடைசி 3 லிட் ஐ 8 லிட் க்கு மாற்றி விட்டு,5 லிட் ல் இருக்கும் 2 லிட் ஐ 3 லிட் க்கு மாற்றவும்.இப்போது முறையே 6 லிட்,காலி,2 லிட் இருக்கும்.
(III)மீண்டும் 5 லிட் ல் முழுதும் ஊற்றவும்,இப்பொது அளவு முறையே1 லிட்,5 லிட்,2 லிட்.
(IV)இப்போது இரண்டாவது 5 லிட் இருந்து மூன்றாவது 3 லிட் ஐ(ஏற்கனவே அதில் 2 லிட் இருக்கிறது) நிரப்பவும்.இப்போது முறையே 1 லிட்,4 லிட்,3 லிட்.முதலையும் கடைசியையும் சேர்த்தால் 4 லிட்,4 லிட்..டட்டடாங்ங்ங்!!!!!!!!!!!...........

சிங்கபூர் சிற்பி லீகுவான்யூ அவர்களின் இலங்கை பற்றிய கருத்து


சிங்கபூர் சிற்பி லீகுவான்யூ அவர்களின் இலங்கை பற்றிய கருத்து


நாடாண்மை-Governance-பற்றிய லீ சீனியரின் கருத்துக்கள் வேறெந்த ஆசிய தலைவர்களும் சொல்லாதவை.அவரின் ஆட்சியும் அவ்வாறே.Today's singapore is a classic example for his governing methods.

Wednesday, October 17, 2007

கட்டபொம்முவும் உண்மையும்

கட்டபொம்முவும் உண்மையும்

ஸ்ரீதர் வெங்கட் சொல்வது மெத்தச் சரி.
மோகன் தாஸ்,வரலாற்றுச் செய்திகளை பதியும் உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது.
உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிடும் முக்கிய இரண்டு செய்திகள்:
1.கல்கி பொ.செல்வனில் வரலாற்றை திரித்துவிட்டார்.சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் வரலாற்றில் கல்கி எழுதியதெல்லாம் இல்லை...

உண்மை:கல்கி தெளிவாகவே சொல்லி விட்டார்,பொ.செ,முடிவுரையில்.எந்தெந்த பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள்(பூங்குழலி,சேந்தன் அமுதன்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி)என்று.இன்னும் சின்னப் பழுவேட்டரையர் கூட கற்பனைப் பாத்திரம் என்ற ஒரு கூறு உண்டு.பழுவேட்டரையர் சகோதரர் இருந்திருக்கிறார்கள்,ஆனால் ராஜராஜன் காலத்திலேயே இரு சகோதரர்கள் இருந்தார்களா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.கல்கியின் வெற்றி சாதனை முக்கிய சம்பவங்களில் 'கை' வைக்காமல்,கதையை விறுவிறுப்பு குன்றாமல் கொண்டு சென்றது.(பொ.செ.ஆரம்பமானவுடன் 35000 இருந்த கல்கி இதழ் விற்பனை 72000 ஆயிற்றாம்-கல்கி நினைவலைகள்-பகீரதன்).ஒரு சரித்திரக் கதையை,பெருமளவு ஆபாசக் குப்பைகளையோ,குருட்டுக் கற்பனைகளையோ சேர்க்காமல் கொண்டு சென்றது ஒரு நிச்சய சாதனை.
2.கட்டபொம்மு ஒரு கொள்ளைக்காரன்,அவனை பெரும் வீரனாகவும் தியாகியாவும் சித்தரித்துபடம் எடுத்து விட்டார்கள்.
உண்மை:ஆங்கிலேயர் இந்தியாவில் பல பகுதிகளில் எவ்விதம் தமது ஆளுகைக்குள் கோண்டு வந்தார்கள் என்பது ஒரு மேலாண்மை தத்துவ ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்க்க வேண்டிய ஒன்று.அவர்கள் எந்த இந்தியப் பகுதியையும் ஆரம்பத்தில் தமது படைகளைக் கொண்டு மிரட்டிக் கைப் பற்றி விட வில்லை;அது வெளிப்படையாக செய்ய இயலாத ஒன்றும் கூட.வியாபார ஸ்தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள்;ஏதேனும் இரு ராஜ்ஜியங்களுக்குள்(அப்போது இந்தியாவில் 550 இராஜ்ஜியங்கள் இருந்தன) பிணக்கு வரும் போது மத்தியஸ்தம் அல்லது ஒரு சாரர் உதவியாக பிரச்னைகளுக்குள் நுழைவார்கள்.அல்லது ஏதேனும் ஒரு சமஸ்தானத்திற்கு வாரிசு இல்லாதிருந்தால்,அதற்கு அருகாமை சம்ஸ்தான மன்னரை கொம்பு சீவி,ஆட்டத்தில் நுழைவது;பின்னர் படை உதவிக்கு,பாதுகாப்புக்கு பிரதியாக வருடாந்திர கப்பம் அல்லது நிலப்பகுதிகளை வளைப்பது.இதுதான் அவர்கள் முறை. கட்டபொம்மு விடயத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்;இந்த தலையீட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக் காரர்கள் அனுமதிக்கவில்லை. கட்டபொம்மன் முரண்டு பிடிக்கிறான் என்ற நிலையில் அவனை எவ்வளவுசீக்கிரம் ஒழிக்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களின் agenda பழுதுபடாமல் நடக்கும்.
ஆங்கிலேயருக்கு ஆப்படிக்கத்தான்,ஒரு யுத்த தந்திரமாக,அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த பாளையத்தின் நெற்களஞ்சியங்களுக்கு நெருப்பு வைத்தழிக்கிறான் கட்டபொம்மு.இதை சாக்காகக் கொண்டு,அவன் கொள்ளையடிக்கிறான்,நான் நீதி செய்கிறேன் பேர்வழி என்றுதான் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதை எடுத்துக் காட்டத்தான் வீ.பா.க.பொ.படத்திலும் ஒரு கட்டத்தில் தளவாயின் கொள்ளைச் சம்பவத்தை கடிந்து கொள்ளும் கட்டபொம்மு'உங்கள் செயல்,எதிர்காலச் சமூகம் என்னை கொள்ளையன் என்று பழி சொல்ல வழி வகுத்துவிட்டது' என்று ஒரு வசனத்தில் வேதனைப் படுவதாகக் காட்டுவார்கள்...
விடுதலைப் போரில் தமிழகம்-இரு தொகுதிகளாக ம.பொ.சி எழுதிய நூலைப் படித்துப் பாருங்கள் !!!!

Monday, October 15, 2007

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?


இலக்குவன் கொல்வதாக செய்தி இல்லை.ஒட்டக் கூத்தர் எழுதியதாக உத்தரகாண்டம் ஒன்று உள்ளது.கம்பகாவியம் யுத்தகாண்டத்துடன் முடிகிறது.இராமன் அரசு செய்கிறான் என்பதோடும்,இராம காதையை சொல்பவர்கள்,கேட்பவர்கள் அனைவரும் நமனையும் வெல்லும் நற்கதி அடைவார்கள் என்பதோடு முடிகிறது.
பின்னர் நடைபெறும் செயல்கள் உத்தர காண்டத்தில் விரிகின்றன.சீதை காட்டுக்கு அனுப்பப்படுவது(இராமனால்),வஷிச்டர் கோபித்து சீதைக்கு துணையாக தன் மனைவியுடன் காட்டுக்கு செல்வது,லவ,குசர்கள் பிறப்பு,லவ குசர்களுக்கு ராமகாதையை வஷிச்டர் சொல்லிக் கொடுப்பது,அவர்கள் அதை அயோத்திலேயே சென்று அங்காங்கு மக்களுக்குச் சொல்வது,இலக்குவனும் இராமனை நிந்திப்பது,இருவரும் பிரிவது,இராமன் தன்னிரக்கத்தால் சரயு நதியில் மூழ்கி மாள்வது....எனச் செல்கிறது.
ஆனால் இக்கதையாக்கம் ஒட்டக் கூத்தரின் கவி இயலாமையையும்,கருத்து வெற்றிடத்தையுமே வெளிப்படுத்துவதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவார்கள்.
கம்பன் ஏன் இராமகாதையை பாடுபொருளாக எடுத்துக் கொண்டான்,ஏன் 6 காண்டங்களுடன்(யுத்தகாண்டம் ஈராக) நிறுத்திக் கொண்டான்,இராம காதையின் அரங்கேற்றம் ஆகியவை தனிப் பதிவு போடும் அளவுக்கு நீண்ட மற்றும் சுவையான செய்திகள்....
ஆக இலக்குவன் இராமனைக் கொல்லவில்லை என்பதுதான் செய்தி,இலக்குவன் நிந்தனையால் நொந்த இராமன்,தன் முடிவைத் தானே தேடிக் கொள்கிறான்..
*********************************************************************************
சர்வேசன்,
அக்னி பரீட்சையில் நீங்கள் சொல்லும் செய்தி,கம்பனில் யுத்தகாண்டத்தில்லேயே இருக்கிறது.இராவணன் மாண்ட பின் சீதை இராமனைப் பார்க்க வரும் போது இராமன் அவளை நிந்திக்க,அவள் தீப் பாய விரும்பி,இளையனை அக்னி மூட்டச் சொல்கிறாள்;இளையன் அக்னி வளர்க்க,சீதை தீப்பாய,அக்னிதேவன் சீதையின் கற்பின் வெம்மையினால் துயருற்று,சீதையை வெளிக் கொணர்ந்து,தன்னை(அக்னி) சீதையின் கற்பாம் வெம்மையிலிருந்து காக்குமாறு வேண்ட,கூட தயரதன் போன்றோரும்(ஆம்,தயரதன் வானுலகிலிருந்து வந்து சீதையை ஏற்று ஆட்சி புரிய வேண்டுகிறான் !) இராமன் சீதையை ஏற்று அயோத்தி திரும்ப ஆயத்தம் செய்கிறான்.
இந்தக் கட்டத்தில்தான் கம்பன் சீதைக்கு 'கற்பின் கனலி'-கற்பெனும் கனலால் அக்னியையே சுட்டவள்-எனும் அடைமொழி கொடுக்கிறான்.
நான் ஏற்கனவே சொன்ன சரயூவில் மூழ்கி மாள்வது-உத்தர காண்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்,இராம குமாரர்கள் லவ-குசர்கள் பிறந்த பின் நிகழ்வது..
வால்மீகத்தில் இந்த நிகழ்வுகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை..

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்

மிக உண்மை. நூற்றாண்டு பழமையான,அழகழகான,மதுரை மீனாட்சி கோவிலின் பொற்றாமரைக்குள பிரகார ஒவியங்களை,சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரே நாளில் வெள்ளைச் சுண்ணம் கொண்டு அழிக்க முடியும்; ஆட்சி நிலைக்க 100 கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எந்தப் பண்ணாடையோ சொன்னான் என்று,வேக வேக ஆயத்தங்களில்,சுத்தம் செய்ய,மணல் துகள்களை,மிகு அழுத்த கம்ப்ரெஸ்ஸரக்ளில் நுட்பச் சிற்பங்கள் மீது அடித்து,அவற்றின் பேரழகை,நுட்பங்களை அழித்தொழிக்க முடியும்;
எவன் என்ன சொன்னால் என்ன???????
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யப் படும் எந்தச் செயலும் அடுத்தவரை விக்கித்துப் பார்க்க வைக்க வைக்கும்;அதன் அர்த்தம் அவர்கள் அச் செயல்களை வியந்து பாராட்டிப் பார்க்கிறார்கள் என்பதல்ல...

Friday, October 12, 2007

பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?

பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?

I.உங்கள் பதிவு சார்ந்த கேள்விகள்:
1.ஐந்தினை எழுபதில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல்-விநாயகர் குறித்தது.
2.பிள்ளயார்பட்டியில் இருக்கும் விநாயகர்(நீங்கள் பார்த்திருக்கிறீர்களா,அது மலையில் வடிக்கப்பட்ட குடைவரை உருவம்)பீடத்தில் இருக்கும் எழுத்துருக்கள் 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.தேவார காலம் வெகு பின்னர்தான்.எனவே பிற்கால சிறுத்தொண்ட நாயனார்தான் விநாயகரை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார் என்பது ஏற்புடைய வாதமல்ல.
3.ஔவையாரின் வினாயகர் அகவல்-ஔவையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
4.பிரான்மலை என்னும் ஊரில்(புதுக்கோட்டை,காரைக்குடிப் பகுதி)உள்ள் குடைவரைக் கோயிலான மங்கைபாகரின்(இதுவும் பிள்ளையார்பட்டியைப் போலவே புடைப்புச் சிற்பம் வகையைச் சேர்ந்தது-சிவன் - உமை பிரதிமை) பீடத்தில் யானை வடிவம் கொண்ட ஒரு தெய்வ வடிவம் காணப்படுகிறது-இதுவும் 3-5 ம் நூற்றாண்டிலேயே காலப்படுத்தப் படுகிறது.
5.கிருத்துவின் காலத்திற்கு முன்பே சீனாவில் விநாயகர் வழிபாடு இருந்த சான்றுகள் உள்ளன.துன்ஹவாங்,குங்சியான் போன்ற இடங்களில் உள்ள குடைவரைக் கோயில்களில் விநாயகர் உருவம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இவைகளில் காலமும் கி.மு விலேயே உள்ளதாக துணிபு.
6.தொல்காப்பியத்தில் இரு பாக்களில் விநாயகர் பற்றிய குறிப்பு காணப்படுவதாகப் படித்த நினைவு,பாடலை உடனடி நினைவு கூர இயலவில்லை.

II ஜமாலன்,தாங்கள் சொன்ன்படி நான் சொன்னவை ஆய்வடிப்படையில் அமைந்தவை.தங்கள் குறிப்பிட்ட வேறு இரண்டு விடயங்களும் யூக அடிப்படையானவையே.(வினாயகார் அகவல் இடைச் செருகல்..அவ்வாறு இருக்க அடிப்படை இல்லை.ஏனெனில் விநாயகர் அகவலின் மொழிநடையைப் படிப்பவர்கள் ஆத்திசூடியைப் போன்றே எளிய தமிழ் நடையைக் காண்பார்கள்...மற்றபடி கோயில்களின் கட்டடக் கலை ப்ற்றி நீங்கள் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.கட்டடக் கலை அந்தந்த வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன(தகவல் தொடர்புகள் அவ்வளவு எளிதாக இல்லாத அக்காலத்தில்),எனவே அவற்றில் அவற்றில் வேறுபாடுகள் இயல்பாகவே இருந்திருக்கலாம்.. அவற்றிற்கு காரணம் ஆரியர்களில் யோசனையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல!அனானி அவர்களே,பிள்ளையார் பட்டி பற்றி நீங்கள் சொல்வதும் நடைமுறைக்கு ஒவ்வாதது..ஒரு சமண பிரதிமையை மறு பொலிவு செய்துதான் அவ்வளவு பிரமாண்டமான,கச்சிதமான-கூரைக்கும்,தளத்திற்குமான இடைவெளி மிகவும் குறைவு-(நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ,நான் பார்த்திருக்கிறேன்) சிலை அமைக்கப்பட்டது என்பது உங்கள் ஒருவரின் ஊகமாக மட்டுமே இருக்க முடியும்.மேலும் அந்த சிலையின் பீடத்தில் இருக்கின்ற சிற்பியின் குறிப்புகளின் மொழியாக்கம் 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையே என்பது மொழியியலாளர்கள் கருத்தும் கூட.நீங்கள் சொன்னபடி முற்கால சமணச் சிலையை பிற்கால பிள்ளையாராக்கி,அதன் பீடத்தில் மீண்டும் முற்கால எழுத்துருவைக் கொண்டு செய்தி எழுத மிகுந்த கற்பனை வளம் வேண்டும்(உங்களைப் போல!)எழுதியது சங்கப்பலகையே......

வாழ்வியல்

வாழ்வியல்


நண்பரே,நல்ல பாடல்.கொல்லான் என்ற சொல்லை மட்டும் ஏன் திருமூலர் போட்டார் என்பது கொஞ்சம் சிந்தனைக்குரியது.வள்ளுவர்,கொல்லான்,புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்றார்.நம் மக்களை புலால் உண்ணாதே என்றால்,நான் கொல்லவில்லை,எவனோ கொன்று விற்கிறான்;அதை வாங்கித்தான் தின்கிறேன் என்பான்.எனவேதான் வள்ளுவர் ஒரு கமாவை இடையில் போட்டு கொல்லான்,புலாலை மறுத்தானை என்றார்.

திருமூலர் சொல்கின்ற கொல்லான் என்பது உணவுப் பழக்கம் மட்டும் குறிப்பதன்று.

எந்தவகையிலும் கொல்வதை மறுக்க வேண்டும் என்றார்,

உயிரைக் கொல்வதை,

மனதைக் கொல்வதை,

எண்ணத்தைக் கொல்வதை,

அன்பைக் கொல்வதை,

பண்பைக் கொல்வதை,

இன்னும் எல்லா வகையினாலும் கொலையை மறுதளிப்பவன் வாழ்வாங்கு வாழ்வான் என்றார்.

மேலும் எண்குணத்தான் என்பது சைவசித்தாந்தத்தில் இறைவனின் குணங்களைக் குறிக்கும் சொல்.அந்த ஒரு சொல்லில் வாழ்வாங்கு வாழ்பவன் வாழவேண்டிய வாழ்வு இறைத்தண்மையுடைய வாழ்வு என்று ஒரு சொல்லில் சொல்லியது மூலனின் வாக்கு.

எனவேதான் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்றார் வள்ளுவர்.

நல்ல பாடல்....

வா வாத்யாரே ஸ்கூலாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்!

வா வாத்யாரே ஸ்கூலாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்!

செல்லா அவ்ர்களே,
இலதாய் என்பதன் அர்த்தம் அதுவல்ல என்று தோன்றுகிறது..
சிறிது உலகம்(பூமி) பற்றி யோசியுங்கள்,
பின்னர் சூரியக் குடும்பம் பற்றி..
பின்னர் பால்வெளி பற்றி..
பின்னும் பால்வெளிக்கப்பால்??????
அங்கு என்ன இருக்கிறது ? ஒன்றும் இலதாய்,இல்லாததாய் இருக்கிறது...
இலதாய் என்றால் எல்லாமாகவும்,எல்லாவற்றிற்கு அப்பாலும்.....தான்(கடவுளே) இல்லாமல் போவதல்ல.
அண்டப் பகுதியின் உண்டப்பெருக்கம்;அளப்பரும் காட்சி,வளப்பெரும் கருணை என்று மணிவாசகர் கூறுவதும் ஓரளவு இக்கருத்தே !
அனைத்திலும் மீறி கடவுளை எப்படித் தெரிந்து கொள்வது/எப்படிப் பார்ப்பது/எப்படி உணர்வது,நான் உணராதவற்றை ஏன் நம்பவேண்டும் என்று கேட்டாலும்,பதில்-'மரத்தை மறைத்தது மாமத யாணை;மரத்தில் மறைந்தது மாமத யாணை' தான் !(திருமூலன்)மரம்(சுயம்,சுயம்-'நான்' சார்ந்த செருக்கு) தெரியும் போது யாணை(கடவுள் தத்துவம்) மறைந்து விடுகிறது;யாணை தெரிகிற போது மரம் மறைந்து விடுகிறது.
மரம் வேண்டுபவர்கள் மரத்துடன் நிற்கலாம்,யாணை வேண்டுமெனில் மரத்தைப் பகுக்கலாம் !

பொன்னியின் செல்வனும் உடையாரும்

பொன்னியின் செல்வனும் உடையாரும்
பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பியல்புகள்:
-ஒரு அருமையான கதைக் கட்டு
-பாத்திர அறிமுகங்களில் ஒரு ஒழுங்கு,சீரான தன்மை
-மிகவும் அவசியம்மான திருப்பங்கள் இல்லாதபட்சத்தில்,கதை மாந்தர்களில் குணாதிசயம் மாறாத் தன்மை
-தெளிந்த நீரோடை போன்ற கதைப் போக்கு
-வரலாற்று நிகழ்வில் கூடியவரை கற்பனையைத் தவிர்த்தது(நந்தினி,ஆழ்வார்க்கடியான்,திருந்திய உத்தம சோழன்,பூங்குழலி பாத்திரங்கள் மட்டுமே கற்பனை என்றறிகிறேன்.
-அக்காலத் தமிழர் நிலையைப் பற்றிய தெளிந்த பார்வையை விரித்தது.
-காலத்தை வென்று நிற்கும் கல்கியின் நடை
இவை ஒன்றுமே உடையாரில் இல்லை !!!
பாலகுமாரனின் இயல்புக்கே உடைய தடுமாற்றங்கள் கதை நெடுகிலும் உள்ளன.
-கதை மாந்தர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி கதைப் போக்கில் மாறுவது
-தெளிவற்ற,படிப்பவற்கு ஆயாசம் தருகின்ற கூறியது கூறல் மிகுந்த குழப்ப நடை
-வரலாற்று சான்றுகள் பெரிதுமன்றி கதை தஞ்சையையே சுற்றி வருவது.(கல்கி பொ.செ. எழுதும் பொருட்டு ஈழம் போய் வந்தார்)
-ராஜராஜனுக்கும்,ராஜேந்திரனுக்கும் ஒயாப் பிணக்கு இருந்தது என சொல்ல முயலும் கருத்து
-எல்லா கதை மாந்தரும்,பா.குமாரனுக்கு விருப்ப subject ஆன, தேவரடியாரோ,விலைமாதரோடோ சம்பந்தப் பட்டிருப்பதுபோன்று பல குறைகள்.
ஒரே நிறை என்று சொல்லலாம் எனில் கதை சமூக நிகழ்வுகளையும் தழுவிச் செல்வது.
உண்மையில் தென்னாட்டு அரசர்களில் பெரிதும் உயர்ந்திருந்த இரு வேந்தர்கள் நரசிம்ம பல்லவனும்,ராஜேந்திர சோழனும் தான்.அதிலும் கடல் கடந்து சென்று தமிழக வீரமும் பண்பாடும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வ்ரை பரவியது ராஜேந்திரன் காலத்தில் தான்.அதற்கும் பெரிதும் கட்டமைப்பு வசதிகளை திறம்பட அமைத்தவன் ராஜராஜன்.
மற்றபடி பொ.செ. மலை என்றால் உடையார் மடு !!!!
பொ.செ.வனை நான் என்னுடைய 10 வயதிலும் ரசித்தேன்,20 வயதிலும் ரசித்தேன்,,இன்று 35 வயதிலும் ரசிக்கிறேன்.50 வயதிலும் கூட ரசிக்க முடியும்.

பாலகுமாரனின் எழுத்துக்கள் இன்னும் 30 வருடத்தில் எங்கிருக்கும் என எவரும் அறியார். கானமயிலாட கண்டிருந்த வான்கோழி...நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தேட...