Sunday, December 23, 2007

மரணதண்டனை தேவையா ?

மரணதண்டனை தேவையா ?

நீங்கள் மனிதநேயக் கூற்றில் இதைக் கூறலாம்.ஆனால் கொடும் குற்றங்கள் நிகழ்த்துவோரும் மனித நேயத்தைக் கொன்று விட்டுத்தான் குற்றங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஆயினும் கொடும் குற்றங்கள் செய்தவர்களுக்கு,மரணதண்டனையன்றி நீங்கள் கூறுவது போல வாழ்நாள் தனிமைச் சிறை கொடுத்தாலும்,குற்றவாளி தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்துவான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அவன்,ஆகா,நாம் கொடிய குற்றம் செய்தாலும்,நமது உயிர் தப்பித்தது என்று உள்ளூர மகிழ்ந்து வாழ்க்கையைக் கழிக்கலாம் இல்லையா?
அவனது குடும்பத்தினரும் சரி,எப்படி இருந்தாலும் அவன் உயிருடன் இருக்கிறான்,தேவைப் பட்டால் சிறை அனுமதி வாங்கி அவ்னைப் பார்த்துவிட்டு வரலாம் என்ற சூழலும் இருக்கிறதல்லவா?
மேலும் இவ்வுலக வாழ்வில் எவ்வளவு சம்பாதித்தாலும்,எவ்வளவு சக்தி கொண்ட பொறுப்பில் இருந்தாலும்,உயிரை இழந்துவிட்டால் உலகில் இருக்கும் எந்த செல்வத்தாலும்,அதிகாரத்தாலும் பயன் இல்லை அல்லவா?

ஆக ஒரு உடைக்க முடியாத தடையாக-deterent- ஆக இருப்பது மரண தண்டனை ஒன்றுதான்.எனவே மரணதண்டனை ஒரு நிச்சயத்தேவை என்பதோடு,அது தயவு தாட்சணியம் இன்றி,ஓட்டுப் பொறுக்கித் தனம் இல்லாமல் நிறைவேற்றப்படவேண்டும்.
ஏனெனில்,

1.அது கொடும் குற்றங்கள் நிகழ்த்துபவர்களுக்கு நிச்சயம் ஒரு deterrent ஆக இருக்கிறது.

2.குற்றவாளியின் குடும்பத்தவரும்,இக்குற்றச் செயலில் ஈடுபட்டால் நாங்கள் உன்னை நிரந்தரமாக பிரியவேண்டிவரும்,எனவே இதைச் செய்யாதே என்ற கூறில் குற்றத்தைத் தடுக்கும் முகாந்திரம் வரும்

3.தயவுதாட்சணியம் இல்லாத த்ண்டனை நிறைவேற்றம் சமூக அளவில் குற்றச் செயல்களுக்கு ஒரு deterrent ஆக இருக்கும்.

4.குற்றத்தை நிகழ்த்திவிட்டு குற்றவாளியைத் திருத்த வேண்டும் எனச் சொல்வதை விட,குற்றம் நிகழ வாய்ப்பில்லாத சமூகச் சூழலே ஆரோக்கியமானது.

இன்று உலக அளவில் குற்றங்கள் குறைந்திருக்கிற நாடுகள்,தயவு தாட்சணியம் இல்லாமல் தண்டனைகளை நிறைவேற்றுகின்ற நாடுகளே.

மும்பையிம் மாறி மாறி எத்தனைமுறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன,எத்தனை அப்பாவிகள் பலியானார்கள்? பயங்கரவாதிகள்தான் அதை நிகழ்த்தினார்கள் எனத் தெரிந்தும் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது?இந்தியா டுடே இதழ் Indian state became soft targets என அழகாகச் சொன்னது !

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொடும் குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணம் என்ன ? குற்றம் இழைத்தால் நம் உயிர் நமக்கு இல்லை என்ற உறுதியான சூழல்தான் !

நமது மனோபாவத்தில் ஆரோக்கியமான மாறுதல்களோடு நல்ல சமூகத்திற்கு சரியான குற்றவியல் நடைமுறைகளும் சட்டங்களும் தேவை,அதுவே சாதாரண மனிதனின் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வை உறுதி செய்யும் !!!!!1

*********************

கண்ணன்,நீங்கள் சீனியர் லீ'யின் தி சிங்கப்பூர் ஸ்டோரியை'ப் படித்திருக்கிறீர்களா?
He says that He learnt to deal with crime makers only from happenings from japanese invation.He says,he learnt the lesson of punishing heavily on the heinous crimes from Japanese and also during their period of invation,singapore was relatively crime free.லீ'யின் அந்த உறுதியான அணுகுமுறைதான் இன்றைய பாதுகாப்பான சிங்கப்பூரின் அடித்தளம்.கிட்டத்திட்ட அதே நேரத்தில் விடுதலை பெற்ற இந்தியா,உறுதியான அணுகுமுறை இருந்திருந்தால் எங்கோ போயிருக்கும்,நமது விளக்கெண்ணெய் ஜனநாயகக் கொள்கைகளால் நமக்கு நேர்ந்த அழிவுகள் அதிகம்.மேலும் நான் ஐரோப்பா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து பார்த்திருக்கிறேன்.எனது பார்வையில் எந்த நாடுகளில் கொடும் குற்றங்கள் கடுமையாக அணுகப்படுகின்றனவோ,அங்கெல்லாம் சமூக அமைதி இருக்கிறது.கொடும் குற்றங்களைக் கடுமையாக அணுகுவதற்கும்,சர்வாதிகாரப் போக்கிற்கும் உள்ள வேற்றுமையை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மேலும் தண்டனைகளை நீக்கிவிட்டு மக்கள் நேர்மையாக கொடும் குற்றம் இழைக்காமல் வாழ்கிறார்களா எனப் பார்ப்பதை விட,கொடுங்குற்றத்திற்கு மரணதண்டனை உண்டு என்ற பயத்திலாவது குற்றச்செயல்கள் இல்லாதநிலை எவ்வளவோ மேல் !
தண்டனைகளை மீறி கொடும் குற்றங்கள் இழைப்பவர்கள் தனிமனிதர்கள்தான்,அவர்களுக்கு சமுதாயம் கொடுக்கும் deterrent-பயங்கள் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள் சொன்னாலும்,சமூகத்தின் வியாதி போன்ற அத்தகையவர்கள் நீக்கப்படுவது சமூகத்தை சுத்தப்படுத்தும் !

No comments:

தேட...