Tuesday, September 30, 2008

என்றே அண்ணா அன்றே சொன்னார்

என்றே அண்ணா அன்றே சொன்னார்
ஒரு சீரியஸ் விதயம் தொட்டிருக்கிறீர்கள்.

இதற்கான வேர்கள் சுதந்திர இந்தியாவின் தொழிற்கொள்கையிலிருந்து தொடங்குவதாக எனக்குப் படுகிறது.குரு சரன் தாஸின் இந்தியா அன்பவுன்ட் ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்...

எல்லாமே அரசு சார்ந்த தொழில்களாக மாறும் போது பெரும்பான்மை மக்கள் சம்பளக் காரர்களாக மட்டுமே மாறும் நிலை வருகிறது.

மக்கள்தொகை விகிதம் இந்த வேலையளிக்கும் விகிதத்தை மீறும் போது இல்லாமை அதிகரிக்கிறது.

வேலைகள் குறையும் போது அது சார்ந்த போட்டிகள்,பாகுபாடுகள்,இந்தப் பாகுபாடுகளை தங்களுக்குச் சாதகமாக வளைக்கும் சில கட்சிகள் என எல்லாமே ஒரு விஷ வட்டத்திற்குள் போகிறது.

இதன் விளைவே எதிர்மறை சிந்தனைகள் பலம் பெறுவதும்,கொண்டாடப்படுவதும்..

பரவலான சுயதொழிலாளர்கள் பெருகினால் இந்த நிலை இருக்காது என்பது ஒரு சிந்தனை.இதனோடு கிராமம் சார்ந்த தொழில்கள் நசிந்து போனது...

நகரங்கள் வளர்ந்த வேகத்தில் நான்கில் ஒரு பங்கு கிராமங்கள் வளர்ந்திருந்தால் இத்தகைய அவலங்கள் இல்லாதிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியவில்லை.

Wednesday, September 17, 2008

தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை

தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை

அறிவன்#11802717200764379909 said...
நண்பரே..உங்கள் வாதம் சரியானதுதானா?

அக்காலத் தமிழகம் கற்புமனம்,களவுமனம் இரண்டும் நிகழ்ந்த களம்.

சீதை ராமனைப் பார்க்கிறாள்;விரும்புகிறாள்..

வில் ஒடிக்கப்படுகிறது.

வில் ஒடித்தவன் யாரென்று நீலமாலை கூறுகிறாள்,கோமுனி உடன் வரு கொண்டல்' என...

சீதையும் ‘தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,ஆம் அவனே கொல்' என் ஐயம் நீங்கினாள்..

பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.

யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..

ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.

காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?

மனித மனத்தின்,எண்ணத்தின் வீச்சு அது;எண்ணுகின்ற எண்ணம் எல்லாம் செயல்படுத்தி விடுகிறோமா?

அதை பண்பாட்டுடன் முடிச்சிடுவது சற்று அதிகமோ எனத் தோன்றுகிறது.

ராமனின் நிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை;அவனும் மருகுகிறான்..

ஆனாலும் சமாதானமடைகிறான்,எப்படி?

நம் மனதில் தோன்றும் எண்ணம் கெட்டதாக இருக்க முடியாது என..ஆகும் நல்வழி,அல்வழி ஆகுமோ என் மனம் ...பைந்தொடி கன்னியே ஆகும்..எனவும் தனக்கே நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறான்.எனவே இருவர் நிலையும் மருகும் நிலைதானே??

******************************************************************************

அறிவன் சார்,

ராகவன் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.

நான் இலக்கியம் தொடர்பான பதிவுகள் போடுவது பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து அல்ல; முடிவுக்கு வருவதற்காக.

நீங்கள், குமரன், ராகவன், ரவிஷங்கர் போன்று சிலர் இருக்கிறீர்கள், திருத்த, கூடுதல் தகவல் சொல்ல, புதிய கோணம் காட்ட என்று.

//பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.

யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..

ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.

காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?//

இது எனக்குப் புதிய கோணமாகப் படுகிறது. நன்றி.

Thursday, September 11, 2008

"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"

"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"




ரத்னேஷ்,
நாளாக ஆக கலக்குகிறீர்கள்.

நீங்கள் தொட்டிருப்பது ஒரு முக்கியமான குறிப்பு.

இதற்கான சான்று/பண்பு தமிழ் மொழி/பண்பாட்டிலிருந்து வந்தது.

ஹிந்து மதம் என்ற ஒன்று பிற்காலத்தில் 'சமைக்கப்பட்டது' சமச்கிருதம் போல.

என்னுடைய தமிழும்,சிவமும்-இன்னபிறவும் தொடரில் இவற்றை முழுதாக அலசும் உத்தேசம் இருக்கிறது.

நேரமேலாண்மை பிரச்னைகளால் இத்தொடர் முடிவு படுவது தள்ளிப் போகிறது.

But,in all,an excellent posting.

Keep up your reading,than writing..you will turn to be an excellent writer & human in total.

kudos.

Tuesday, September 9, 2008

"ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்"

"ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்"

வால்பையன்,சரியான ஒரு நோக்கில் எழுதப்பட்ட ஒரு பதிவு.

நமது அரசியலில் அது திமுக வானாலும் சரி,அதிமுக வானாலும் தனி மனிதத் துதிதான் விஞ்சுகிறது.

கருணாநிதியோ,ஜெயலலிதாவோ ஒரு ஆட்சியின் தலைவர்கள்,அவர்கள் சறுக்கும் போது சுட்டவும்,குட்டவும் பத்திரிக்கையாளர் இருப்பார்,இருக்க வேண்டும்-அதுதான் ஜனநாயகம்.

ஏன் கருணாநிதியையே பற்றி எழுதுகிறார் என்றால்,அது தவிர்க்க இயலாதது-அவர்தான் ஆட்சியின் தலைவர்.

இதே ஞாநி ஜெ.ஆட்சியிலும் அவரை விமர்சித்து எழுதி இருக்கிறார்.

நீங்கள் சுட்டியபடி ஞானியின் கேள்விகளுக்கு மறுப்புகள் தான் வந்தனவே யொழிய பதில்கள் இல்லை.

இதே கதை தேசிய அளவிலும் அருண்ஷௌரியின் கேள்விகளுக்கும் ஏற்படுகிறது;நமது நிதி அமைச்சரிலிருந்து,பிரதமர் வரை யாரும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.

இவற்றை சுட்டினால் பார்ப்பனீயம்,பூணூல் நெளியும் என்று பிதற்றவே பெரும்பாண்மைக் கூட்டம் தயாராக இருக்கிறது.

60 களில் இருந்து தமிழக அரசியலின் சாபம்தான் இது !

தேட...