Monday, April 14, 2008

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா

வந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா

நல்ல விமர்சனம்.இந்து'வின் வாசக வட்டம் சிறிதே கட்டமைப்பானது என எண்ணுகிறேன்,அதுவும் தரத்தில் நீர்த்தே வந்திருக்கிறது.இப்பொதைய சூழலில் இணையத்தில் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க முடிகிறது.

Saturday, April 12, 2008

டோண்டு பதில்கள் - 11.04.2008

டோண்டு பதில்கள் - 11.04.2008

///////சிங்கப்பூரும் நம் ஊர்களைப் போலத்தான் முதலில் அழுக்காக இருந்தது. ஆனால் லீ வான் கியூ வந்து எல்லோரையும் செருப்பால் அடித்து வழிக்கு கொண்டு வந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யாரையுமே தனக்கு வேண்டியவர்களாகக் கருதாது பாரபட்சமற்ற முறையில் நீதி அளித்தார். இம்மாதிரி விஷயங்களில் அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்.////////மிகச்சரியான பதில்.அவர் பெயர் லீ க்வான் யூ.அவரின் இரு புத்தகங்கள்- தி சிங்கப்பூர் ஸ்டோரி,ஃப்ரம் தேர்ட் வேர்ட்ல்ட் டு ஃப்ர்ஸ்ட்,இரண்டையும் படித்துப் பாருங்கள்,ஒரு அரசின் தலைவன் எப்படி செயலாற்ற முடியும் என்பதற்கான ப்ளூ பிரிண்ட் அவை.நமது அரசியல்வாதிகள் அவரிடம் 'மொரார்ஜி வைத்தியம்' பார்த்துக் கொண்டால் கூட புத்திவராது என நினைக்கிறேன்.

*******************************************************

dondu(#11168674346665545885) said...
அறிவன் அவர்களே,சிங்கப்பூரில் லீ க்வான் யூ என்றால் நம்ம தேசத்துக்கு மோடி இருக்கிறாரே. அதே செட்டப்பை வைத்து குஜராத்தை எங்கேயோ கொண்டு போயுள்ளாரே. அன்புடன்,டோண்டு ராகவன்

*******************************************************

அறிவன்#11802717200764379909 said...
மோதியை லீ சீனியருடன் ஒப்பிடுவது சிறிது அதீதம்.லீ சிங்கப்பூரின் மத,இன ஒற்றுமை தான் டிநாதம் என நினைத்து செயல்பட்டவர்.அதை மீறியவர் எவராயினும் தயவு தாட்சனியமின்றி நடவடிக்கை எடுத்தவர்.ஆனால் மோதி நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலும் இன அமைதிக்கு எதிராக செயல்படுவதான பிம்பம் இருக்கிறது;அதைத் துடைத்தெறிய அவர் முயற்சி எடுக்காதவரை அவரின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதே..

Thursday, April 3, 2008

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்

///////நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான், பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான். பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் - கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.

அது சாத்தியப்படக்கூடாது, அப்படிப்பட்ட சில்லறைப் பிரிவினைவாதிகள் ஏற்படக்கூடாது என்றால், எல்லாரும் மொழிரீதியாகச் சமமாக இருத்தல் அவசியம். இந்தக்காரணத்தினாலும், நான் கட்டாயத் தமிழ்க்கல்வியை ஆதரிக்கிறேன்////////

கட்டாயத் தமிழ்க் கல்வியை நானும் ஆதரிக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவையா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.


இன்று பொருளாதார வளர்ச்சி பெறாதவர்கள் தமிழ் மட்டுமே படித்தவர்களாக இருப்பார்கள்'என்ற கருத்து உருவாக என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

தகவல் பரிமாற்றம்,பண்பாடு ஆகிய விதயங்கள் மட்டுமே சார்ந்த மொழியை உணர்ச்சி பூர்வமாக ஆக்கி,சுமார் 40 ஆண்டுகளாக ஆங்கிலம்,மற்றும் இந்தி ஆகிய மொழிகளை ஏதோ விரோதி மொழிகள் போன்ற மனோபாவத்தை மக்களிடையே விதைத்து சமூகத்தை சீரழித்த அரசியல் கட்சிகள்தான் காரணம்.

தாய்மொழியில் படிக்கும் போதுதான் குழந்தைகள் தெளிவுடன்,புரிதலுடன் படிப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க,வேற்றுமொழிகளுக்கு இங்கே வேலையில்லை எனக் கிளப்பிய நெருப்பில்,பொருளாதார இணைப்பு மொழியான ஆங்கிலமும் கருகியதுதான் மிச்சம்;அதன் எச்சங்கள் தான் இன்றைய சமூக வேறுபாடுகள்.

குப்பனும்,சுப்பனும் அவரவர்களில் ஈடுபாட்டுக்கு ஏற்ப இந்தியோ ஆங்கிலமோ படித்துத் தேர்ந்திருப்பார்கள்;அவரவர்களின் வாழ்க்கையும் அவர்களின் எதிர்காலமும்,பொருளாதார நிலையும் வேறாக இருந்திருக்கும்...

உண்மையில் மும்மொழிக் கொள்கைகள் வலுப்பட்டிருந்தால்,இப்போது ஏற்பட்டிருப்பது போன்ற மொழி சார்ந்த வெறித்தனங்கள் ஏற்பட்டிருக்காதோ என்னவோ...

***************************************************************

பினாத்தல் சுரேஷ் said...

அறிவன்,

//கட்டாயத் தமிழ்க் கல்வியை நானும் ஆதரிக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவையா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.//

நான் சொல்லும் காரணங்கள் என்பது ஒரு அதீத சிந்தனையிலும், அளவுக்கதிகமான ஆப்டிமிஸத்திலும் எழுதப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் எனக்கே - குறிப்பாக கொத்தனார், ஸ்ரீதர், ஓகை, தமிழன் மற்றும் உங்கள் பின்னூட்டங்களைப் படித்ததும் தோன்றுகிறது. நான் எழுதிய லாஜிக்கில் ஓரளவாவது சாரம் இருப்பதாக இன்னும் கருதவும் செய்கிறேன் என்பதால் குழப்பம்தான் அதிகமாகிறது :-))

//மொழியில் படிக்கும் போதுதான் குழந்தைகள் தெளிவுடன்,புரிதலுடன் படிப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க,வேற்றுமொழிகளுக்கு இங்கே வேலையில்லை எனக் கிளப்பிய நெருப்பில்,பொருளாதார இணைப்பு மொழியான ஆங்கிலமும் கருகியதுதான் மிச்சம்;அதன் எச்சங்கள் தான் இன்றைய சமூக வேறுபாடுகள்.//

இதை முழுக்கவே ஒப்புக்கொள்கிறேன்.

Wednesday, April 2, 2008

தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - 1

தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - 1

நேர்கொண்ட பார்வையில் எழுதப்பட்டிருக்கும் நல்ல ஒரு பதிவு.

///////கர்நாடக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து தமிழக முதல்வராக இருப்பவர் ரியாக்ஷன் காட்டலாம். அங்கே உள்ள ஏதோ சில மொழிவெறி அமைப்பின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இவரை யார் பேசச் சொன்னார்கள்?

சென்னையில் ஒரு பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வருக்கு ஒகேனக்கல் பற்றிப் பேச என்ன அவசியம்? "எங்கள் பேருந்துகளை அல்ல; எங்கள் எலும்புகளையே நொறுக்கினாலும் அந்தத் திட்டம் நிறைவேறியே தீரும்” என்பதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? அல்லது உங்கள் வார்த்தைகள் தான் உண்மையானவையா? பெங்களூரில் ஒரு வீட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கினாலோ தாங்க முடியாத நீங்கள் எலும்புகளைப் பற்றி எல்லாம் பேசலாமா? அப்படி வீரம் பேசுபவர் பெங்களூருவில் கூட்டம் கூட்டிப் பேசுவது தானே? சென்னையில் பாதுகாப்பான இடத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கே இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை ஒருசிறிதும் இன்றி இப்படிப் பேசினால் . . .?

வீரப்பன் பிடியில் இருந்து முக்கியஸ்தர்களை மீட்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்வில் எதிர்க்கட்சியினர் தூண்டி விட்டும் பொறுப்புடன் அமைதி காத்த கருணாநிதி, இத்தகைய தருணங்களில் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் கதியைப் பற்றி யோசிக்காமல் பேசியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.//////////

மு.க'வின் செயல்களை நெடுக கூர்ந்து கவனித்து வருபவர்கள் இதில் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள்.அவர் எதிலும் தனக்கும் தன் கட்சிக்கும் என்ன ஆதாயம் கிடைக்கும் எனப் பார்ப்பார்;இல்லையெனில் தலைக்கெறிய ஆணவத்தில் ஏதாவது பேசி வைப்பார்.
ஆதி நாட்களில் சட்ட சபையின் காங்கிரஸ் பெண் உறுப்பினரைப் பார்த்து,'பாவாடையைத் தூக்கிப் பார்த்தால் தெரியும்' என சட்டசபையில் பதில் சொன்ன மகான் அவர் !
ஒகேனக்கல் திட்டத்தைப் பொறுத்து, தன் மகன் முதன்முதலில் ஒரு வெளிநாட்டின் அரசியல்,ஆட்சி நிபுணர்களை சந்தித்து கொண்டுவந்த திட்டம் என்ற தற்பெருமையில் விளைந்த செருக்கும்,இன்னொரு பதிவர் கூறியபடி அதிமுக/பாஜக வுக்கு கத்தி வைக்கலாம் என்ற நோக்கமும் அவரின் பேச்சுக்குக் காரணிகளாக இருந்திருக்கலாம்.
வீரப்பனாரைப் பற்றிப் பேசாமல் இருக்கக் காரணம்,வீரப்பானார்,அவருக்கு வேண்டும் சமயங்களில், ஜெ'க்குக் குடைச்சல் கொடுக்கும் ஒரு காரணியாக உதவியதாலும்,ஆரம்ப நாட்களில் வீரப்பனாரின் அரசியல் பங்குதாரராக அதிமுக அமைச்சர் இருந்ததும்,அதனாலேயே வீரப்பனை உயிருடன் விட்டுவைக்கக் கூடாது என ஜெ.நினைத்ததும்,வீரப்பன் என்ற காரணி,தன் அரசியலுக்கு வேண்டும் என முக.நினைத்ததாலும் அவ்விதமான வேறு நிலைப்பாடுகளை எடுத்தார்.
சேதுக் கால்வாய் விவகாரத்திலும் அவரிம் மமதையான பேச்சே பல பிரச்னைகளுக்கு அடிகோலியது.

இவை ஒரு புறமிருக்க,ஆளுனர் ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தில் இவற்றை எப்படி மைய அரசு பொறுத்துக் கொண்டிருக்கிறது என்பதே கேள்விக்குரிய மிகப் பெரிய அவலம்.

இவற்றிற்கெல்லாம் காரணம் மாநிலத்துக்குள் வட்டாரம்,சாதி போன்ற காரணிகளை தங்கள் அரசியல் பிழைப்புக்காகவும் அடிவருடித்தனத்துக்காகவும் ஊக்குவிக்கும் மாநில அரசியல்வா(வியா)திகளே காரணம்.

வட்டாள் நாகராஜ் என்பவர் யார்,அரசமைப்பில் அவருக்கு என்ன அதிகாரமோ,தலைமைத்துவமோ இருக்கிறது?
ஒரு சரியான மைய அரசு சத்தமில்லாமல் இரு போன்ற ஆட்களை தூக்கி, ஒரு 20 வருடம்,30 வருடம் உள்ளே போட வேண்டும்.
இவர் போன்ற ஆட்கள்,வட்டார உணர்வுகளைத் தூண்டிவிடுவதின் மூலம் பெரிய ஆளாக முயல்பவர்கள்.


நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் தேசிய உடமையாக்கப் பட்டு மைய அரசின் கட்டுப்பாட்டில் இவை வருவதும்,எவ்வளவு செலவெனினும்,நதிகள் இணைப்பை ஆரம்பிப்பதும்தான் இவை போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வழிமுறைகள்..

Star Posting எழுத்தாளர் பாலகுமாரன்

Star Posting எழுத்தாளர் பாலகுமாரன்

பாகு'னின் இரும்புக் குதிரைகள் முதற்கொண்டு பல நாவல்களைப் ப் படித்திருக்கிறேன்.
பின்னூட்டத்தில் பலர் புகழ்ந்திருக்கும் அளவுக்கு அவருக்கு ஒரு வெளிச்சவட்ட பிம்பம் தேவையில்லை என்பதே என் கருத்து.
அவரின் நாவல்கள் பலவும் சிறிதாகக் காமம் கலந்து,இளைஞர்களும் யுவதிகளும் scintillate ஆகும் வகையிலான ஒரு கவர்ச்சி எழுத்தே.
வெகுஜன ஊடகங்களில் அவ்வகையான எழுத்து வடிவம் பரவலாக இல்லாத நேரத்தில் இம்மாதிரி எழுதியதோடு,பெண்களின் சார்பையும் கைக்கொண்டதால் சுலபமான ஒரு வாசகர் வட்டம் கிடைத்தது.
இதை தனக்கான விளம்பரத்தை அதிகரித்துக் கொள்ளவே பெரிதும் உபயோகித்தார்,வைரமுத்து தனக்குத்தானே கவியரசு பட்டம் வழங்கிக் கொண்டது போல. மேலும் பிற்காலத்தில் சித்தர் வேடம் தாங்கவும் ஆரம்பித்து விட்டார்.

ரவூஸு தாங்கலடா சாமி !!!!!!

ஒரு காலகட்டத்தில் அவரின் பல நாவல்களும் ஒரே விதமான கதையையே சொன்னன..
விதிவிலக்காக அமைந்த 'பலாமரம்' போன்ற ஒரு சில நாவல்களுக்கு மட்டுமே அவர் பெருமிதப்படலாம்.
ஆனால் இவை போன்ற முயற்சிகள் வெகு சிலவே.
பிற்காலத்தில் இவ்வகையான பெரும் வாசகர் கூட்டத்தை சிறிது ஆன்மீகம் சார்ந்த விதயங்களில் திருப்பி விட்டதுதான் அவர் வாசக உலகத்துக்கு செய்திருக்கும் பெரும் உதவி.
இது தவிர ஒரு ராஜேஷ்குமார்,ஒரு பட்டுக்கோட்டை பிரபாகர் வரிசையில் தான்,சிறிதே-மிகச்சிறிதேயான-மேல்மட்டத்திற்கு வருகிறார்.
இதில் கல்கியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதையாக 'உடையார்' நாவல்....
'கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி...' என்றொரு பாடல்,அதுதான் நினைவுக்கு வருகிறது.
ஓரளவு எழுதி இருக்கிறார்,ஆனால் அதற்கு அவர் தேடும் வெளிச்சப் புகழ் அளவற்றதும்,அநியாயமானதும் !!!!!

தேட...