Saturday, March 29, 2008

காவியப் பாவை ஜீவிதம்

காவியப் பாவை ஜீவிதம்

கொஞ்சம் மறந்துதான் போய்விட்டது,இன்று மின்மடல்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் மடல் கண்டு மீண்டு(ம்) வந்தேன்.
முதலில் அருமையான,அழகான,நல்ல முயற்சிக்கான வாழ்த்துக்கள்,கவிதையின் பொருளை இயன்ற அளவில் கொண்டுவர முயன்றதற்கான பாராட்டுகள்.
////கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்//// போன்ற வரிகளில் 'சானெட்ஸ்'ஐ அப்படியே கொண்டு வரும் 'கவித் தவிப்பு' தெரிகிறது.
சில இடங்கள் மேலும் நறுக்கென்று இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
காட்டாக, ///////எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது./////
என்பவை போன்ற வரிகள் சிறிது கவிதைக் கட்டைக் குறைப்பது போன்ற தோற்றம் தருகின்றன.
இதை எனது அரைகுறை முயற்சியில்,
/////அகிலத்தின் அழகெழில்கள்
வளர்ந்திடும் நாட்களிலே
கலைந்திடும் சிலநேரம்/////
என சொல்லலாமோ????

முழுமையாகப் படிக்கையில் சானெட்ஸ்'ன் இன்பத்தை சிந்தனைக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் !

வேறொரு சுவையான கோணம் இருக்கிறது,ஷேக்ஸ்பியர் இந்தக் கவிதையில் காதலியை உருவகப் படுத்துவதாகவே பலரும்,உங்கள் மொழிபெயர்ப்பு உட்பட,பொருள் கொடுக்கிறார்கள்.Out of the box idea' வாக வேறெதுவும் உங்களுக்குத் தோன்றுகிறதா?
***************************************************************

பாச மலர் said...
நன்றி அறிவன்..உங்கள் வரிகள் மிகவும் பொருந்தி வருகின்றன..உங்கள் ஆலோசனையை வரும் முயற்சிகளில் பின்பற்ற முயல்கிறேன்..

காதலி தவிர அவருடைய புரவலர் Earl of Southampton அவரின் நட்பு பாராட்டும் முகமாகவும் இந்த sonnets இருந்ததாகப் படித்துள்ளேன்..அதைப் பற்றிய விவகாரமான விவாதங்களும் இன்னும் ஆய்வுகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
****************************************************************

அறிவன் /#11802717200764379909/ said...
மிக்க நன்றி மலர், என்னுடைய கருத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதற்கு !!!
நானே சிறிது பயந்து கொண்டுதான் இருந்தேன்,முன்பொரு முறை ஒரு பதிவர்-ஒரு பெண்- சில கவிதைகளை எழுதியிருந்தார்,அழகியல் நோக்கில் சில விதயங்களை சுட்டி ஒரு கருத்து சொல்லியிருந்தேன்..
மிகு காட்டமாக,என்னுடைய கவிதை வரிகளுக்கு மாற்று சொல்ல நீ யார்??? என சண்டைக்கே வந்து விட்டார் !
தாயே,மன்னித்து விடுங்கள்,இனி கனவிலும் இப்பக்கம் வரமாட்டேன் எனச் சொல்லி அவர் வருந்தியதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.
உங்களுக்கு பதில் எழுதும் போதும் மிகவும் யோசித்தே எழுதினேன்,பயமுடன்..
இயல்புடனும்,நட்புடனும் அதை அணுகியதற்கு நன்றி.

மற்றபடி சானெட்ஸ் 18 ல்,'காதலி' என்ற பொருளை எடுத்துவிட்டு 'இளமை' என்ற பொதுப் பொருளை கருதி கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள்,ஒரு புதிய கோணம் கிடைக்கும்.
வோர்ட்ஸ்வொர்த் இந்த நோக்கிலேயே
We'll talk of sunshine and of song,
And summer days when we were young,
Sweet childish days which were as long
என்றெழுதியதாகவும் சில ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்னவரின் பல கவிதைகளில் முன்னவரின் பல சாயல்கள் இருக்கும் என்பதைக் கவனித்திருக்கிறீர்களோ??????

*****************************************************************************

March 31, 2008 2:55 AM
பாச மலர் said...
மீண்டும் நன்றி அறிவன்..விமர்சனங்கள் எப்போதுமே வளர்ச்சிக்கு உதவும்..

நீங்கள் சொல்வதும் புதிய கோணம்..பொருந்தி வருகிறது..

இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை பல இடங்களில் வெளிப்படும்..

Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!



இலவசம்,மிகச் சரியான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.

அண்ணாவின் ஒரே ஒரு பங்களிப்பு என்று எதைச் சொல்லலாம் என்றால்,வடமொழி கலந்து பேசும் தமிழ்தான் தமிழ்ப் பாண்டிதர்களுக்கு அழகு என்று இருந்த ஒரு காலத்தில்,ஆற்றொழுக்கான தனித் தமிழே நல்ல தமிழ் என்ற பாதைக்கு வலு சேர்த்தது.
மகாகவி என நாம் போற்றும் பாரதியும் உரைநடை எழுதும் போது மணிப்பிரவாளம் எனச் சொல்லப்பட்ட வடமொழி கலந்தே எழுதினார்;அவ்வாறு எழுதுவதே கற்றறிந்தவர் எழுதும் தமிழ் எனக் கருதப்பட்டது.
அக்கருத்தை வலுப்படுத்தியவர்கள் ஆரியர்கள் எனச் சொல்லப்படும் பிராமணர்கள்.ஆயினும் அக்காலத்திலேயே நேர்பட,தமிழின் தொன்மையும் அழகும் செறிவும் தெரிந்த பிராமண சமூகத்தவர்களும் இருந்தார்கள்,பரிதிமாற்கலைஞர் என தன் பெயரை தூய தமிழில் மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி அவர்களில் ஒருவர்.மேலும் மறைமலையடிகள்(வேதாசலம் எனற பெயரை மாற்றிக் கொண்டார்) மற்றும் பாவாணர் போன்றோர் அண்ணாவின் காலத்துக்கு முன்பே தனிதமிழ்க் கொடியை உயரப் பிடித்து விட்டார்கள்.
அண்ணா அப்பேச்சை நாடகங்களிலும் புகுத்தினார்,தமிழர்களில் சாபக்கேடு என்னவெனில்,பொழுதுபோக்கு ஊடகங்களுக்கு அவற்றின் தகுதிக்கு அதிகமான பதிப்பு கொடுப்பது.இதன் காரணமாக அண்ணாவின் தமிழும்,மேடைப் பேச்சும் ரசிக்கப்பட்ட அளவுக்கு அவர் அரசியல் தலைவராகவும் உருவகம் செய்து ரசிக்கப்பட்டார்,போற்றப்பட்டார்..
இந்த உந்துவிசைக்கு மேலும் வேகம் சேர்க்க,பெரியாரின் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களை-விதவைகள் திருமணம்,பால்ய விவாகத்தை தடுத்தல்,சமூகத்தில் பெண்களுக்கு உரிய உரிமைகள்-தங்கள் இயக்கக் கொள்கைகளாக வரித்துக் கொண்டார்கள்.
இவை ஒரு சமூக ஆர்வலரின் ஆர்வங்களே ஒழிய சுதந்திரம் அடைந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு நாட்டை வழிநடத்த தேவையான சிறந்த தகுதிகள் இல்லை.
துரதிருஷ்டவசமாக பெருவாரியான மக்கள் அண்ணாவின் மேல் இந்த உருவகத்தையும் அணிந்தே பார்த்தார்கள்;ஒரு மீட்பர் என்ற அளவுக்கு உயர்த்தினார்கள்.
அண்ணாவுக்காவது ஓரளவுக்கு,இந்த மக்களுக்கும்,நாட்டுக்கும் ஏதாவது முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையாவது இருந்தது.
இந்த நேரத்தில் அண்ணா நோய்வாய்ப்பட,பின்னர் மறைய(மறையவைக்கப்பட்டார் எனவும் வதந்தி உண்டு !) முக வெற்றிகரமாக அவருக்கேயுரிய cunningness(இதற்கான சரியான ஒரு தமிழ்ச் சொல்லை முன்பொருமுறை உபயோகித்தபோது கடும் கண்டனங்கள் எழுந்தன,எனவே ஆங்கில வார்த்தையையே வைக்கிறேன்!) உடன் கட்சித் தலைமையையும்,ஆட்சியையும் பிடித்தார்.
அவரின் நல்ல நேரமோ,தமிழகத்தின் போதாத நேரமோ,அவ்வகையான மேடைப்பேச்சு ஒன்றே அரசியல் வாதிக்கான தகுதி என்றாகிப் போனது.
அவர்களில் செயல்பாடு சமூகத்தில்,நாட்டில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தது என்ற வகையில் அளவீடுகளே இல்லாமல் போனது !!!!!!

(இப்போதும் பொங்கத் தயாராக இருக்கும் அடிப்பொடிகள்,சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஒரு அரசின் தலைவன் என்ன செய்யமுடியும் என்ற விதயங்களை படித்து அறிந்து கொண்டு பின்னர் என்னை விமர்சிக்க வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்)

சுப்பையா அவர்களின் பதிவைப் பார்த்தவுடனேயே இதை எல்லாம் எழுதத் தோன்றியது;ஆனால் பதிவுலக அடிப்பொடிகள் பலர் உடன் வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள்,எனவே விட்டுவிட்டேன் !

Monday, March 24, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

////////படிக்க முடியலைன்னு சொல்றீங்கன்னா இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாத்தான் இருக்கணும்.

எழுதறப்ப கஷ்டமாயில்லை. எழுதி முடிச்சிட்டு படிச்சி பார்த்தா எனக்கே கஷ்டமா போயிருச்சி.

எலக்கிய தரமான எழுத்துன்னா சும்மாவா :)
//////////

கட்டுடைக்கப்பட்ட பின் நவீனத்துவத்துடனான,சாதீயக் குறியீடுகளும்,அதனின்று மீண்டெழுவனவாகவும் இருக்கின்ற மறுமலர்ச்சியையும்,சமூக அடாவடிகளை உடைத்தெடுக்கும் குறியீடுகளையும்,அவற்றை மீள்மறுப்புச் செய்யும் நுண்ணரசியலைச் சாடும் இவ்வகையான வேட்கைத் தெறிப்புகள்,களம் காணும் இலக்கியத் தரத்துடனான புத்தியல் நோக்கத்தின் கூறுபாடுகள்....
வாழ்த்துக்கள் தோழர் !!!!!!!!!!
(அப்பாபாஆஆஆஆஆ)

Sunday, March 23, 2008

ஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)

ஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)

ஒரு சிறிய கதை சொல்கிறேன்,இந்தக் கதைக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை !!!!!!!!


அந்த ஆசிரியர் சோதனைகளை செய்து காண்பிப்பது மூலம் மாணவ்ர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்.
குடியின் தீமையை விளக்க எண்ணி ஒரு பாட்டில் சாராயமும்,ஒரு புட்டியில் தண்ணிரில் விளையடிக் கொண்டிருக்கும் பூச்சியையும் கொண்டு வந்தார்.
வகுப்புக்கு வந்து,'மாணவர்களே,பாருங்கள்,இந்தப் பூச்சி மகிழ்வாக விளையாடிக் கொண்டிருக்கிறது,இதை இப்போது இந்தப் புட்டியில் இருக்கும் சாராயப் புட்டியில் போடப் போகிறேன்,என்ன நடக்கிறது என்று பாருங்கள்' என்று சொல்லி,தண்ணிரில் இருந்த பூச்சியை எடுத்து,சாராயப் போத்தலில் போட்டார்.
மாணவர்கள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாராயப் போத்தலில் வீழ்ந்த பூச்சி சில நிமிடங்கள் பட படவெனத் துடித்தது,பின்னர் செத்து மிதந்தது.
ஆசிரியர் 'பாருங்கள்,சாராயம் சேர்வதால்,உடல்,உயிர் என்னவாகிறது தெரிகிறதா?' என ஒரு கருத்தைச் சொன்ன திருப்தியில்,'மாணவர்களே,என்ன தெரிந்து கொண்டீர்கள்,ரத்தினம்,நீ சொல் பார்க்கலாம்' என்றார்.
அந்த மாணவன் எழுந்து சொன்னான்,'சாராயம் குடித்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் அழிந்து விடும் ஐயா,ஆகவே எல்லோரும் சாராயம் குடிக்க வேண்டும் !!!!!.

Friday, March 21, 2008

தில்லை நந்தனாரும் அயோத்யா மண்டபமும்

தில்லை நந்தனாரும் அயோத்யா மண்டபமும்

/////முதலில் திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்ட பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் குலோத்துங்க சோழன் எனப்படும் அநபாய சோழன் ஆட்சியில் போர் ஏதும் இல்லாததால் கலை கதை கவிதை என்கிற ஆர்வத்தில் சீவக சிந்தாமணியை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தானாம். வேளாள சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சேக்கிழாருக்கு, அரசன் படிப்பது சமண இலக்கியமாயிற்றே என்கிற உறுத்தல். அவரிடம் சைவத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற, திருத்தொண்டர்களைப் பற்றி அளந்து விட வேண்டியதாயிற்று. மேல்விவரம் அறிந்து விளக்கமாகச் சொல்ல அவருக்கு அரசன் சுற்றுப் பயண ஏற்பாடுகள் செய்து கொடுக்க, அவர் சுற்றிச் சென்று தகவல் சேகரித்து வந்து எழுதி தில்லைக் கோயிலில் அரங்கேற்றிய நூல் தான் இது.///////

சைவத்தை மீட்டெடுக்க நடந்த ஒரு நிகழ்வாகவே வைத்துக் கொண்டாலும்,அதிலென்ன தவறு இருப்பதக நீங்கள் கருதுகிறீர்கள்?
களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?


மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.

பொதுவாக ஒருவன் நம்மைக் கொல்ல வரும் போது,அவனைக் தடுக்கும்,எதிர்க்கும்,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் எதிரியைக் கொல்லவும் தயாரான சூழலில்தான் யாரும் இருப்பார்கள்.
மேலும் திருமுறை நிகழ்வுகள் பலவற்றை கட்டுக்கதை எனச் சொல்லும் நீங்கள் இதை-சமணர்களை கழுவேற்றுவதை மட்டும்- வரலாற்று சான்றாக எடுத்திக் கொள்வது எண்ண,வாதப் பிறழ்வாகத் தோன்றவில்லையா?

மற்றபடி திராவிடம்,பிராமணீயம் போன்ற விதயங்களைத் நீங்கள் தொட்டிருக்கும் விதம் சரியான பார்வையில் இருக்கிறது.

சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்,சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !

மற்றபடி நல்ல ஒரு பதிவு !

***********************************
அறிவன் சார்,

//சைவத்தை மீட்டெடுக்க நடந்த ஒரு நிகழ்வாகவே வைத்துக் கொண்டாலும்,அதிலென்ன தவறு இருப்பதக நீங்கள் கருதுகிறீர்கள்?//

தவறு என்று நான் சொல்லவே இல்லையே. இந்தப் பின்னணி உடைய கதை தான் இது என்கிற உணர்வோடு மட்டுமே அணுகச் சொன்னேன்.

//களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?//

எந்த சரித்திரத்தில்? சொல்லுங்கள்; படித்துப் பார்க்கிறேன். கொள்கைக்காகக் கொலை என்பது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.


//மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.//

கழுவேற்றல் சமாசாரங்களை எந்த வகையில் வைப்பீர்கள் ஐயா?

//மேலும் திருமுறை நிகழ்வுகள் பலவற்றை கட்டுக்கதை எனச் சொல்லும் நீங்கள் இதை-சமணர்களை கழுவேற்றுவதை மட்டும்- வரலாற்று சான்றாக எடுத்திக் கொள்வது எண்ண,வாதப் பிறழ்வாகத் தோன்றவில்லையா?//

ராமாயணம் என்கிற கதையைக் கற்பனை என்கிறோம்; அந்த நூலின் இருப்பையே மறுப்பதில்லையே! அதே போல் சம்பந்தர் ஞானப்பால் குடித்ததைக் கற்பனைப் புனைவு என்கிறோமே தவிர, அவருடைய தேவாரப் பாடல்களை மறுக்கவில்லை. கழுவேற்றல் விவகாரத்தை வெறும் பெரியபுராண அடிப்படையில் சொல்லவில்லை. சரித்திர சான்றுகள் உள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நான் பள்ளிப்பருவத்தில் கண்ட ஒரு கழுமரம் தான் முதலில் நான் இந்தப் பாதகம் குறித்து அறிய வைத்தது. அப்போது எனக்கு தேவாரம் பற்றிக் கூடத் தெரியாது.

//சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்//

ஒரு வேண்டுகோள். என்மீதான அன்பிலோ, அல்லது கடிந்து சொல்ல இருக்குமொரு கருத்தை மென்மையாகச் சொல்வதான அடிப்படையிலோ கூட இது போன்ற முத்திரைகளைத் தயவு செய்து தவிர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன். என் கருத்துக்களை எப்போது தோன்றினாலும் எந்த டிகிரியில் கடிந்து சொல்வதையும் உவப்புடனேயே எதிர்கொள்வேன்.

//சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.//

அவசரப்பட்டு தவறாகச் சொல்லி விட்டோம் என்று நீங்கள் உணரும் வண்ணம் விரைவில் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

//மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !//

அடுத்த தமிழக விஜயத்தில்?

************************************************


>>>>>>>தவறு என்று நான் சொல்லவே இல்லையே. இந்தப் பின்னணி உடைய கதை தான் இது என்கிற உணர்வோடு மட்டுமே அணுகச் சொன்னேன்.>>>>>>>>>>>

இதில் ஒரு வரலாற்றுப் பிழை இருப்பதாகவும் கருதுகிறேன்;திருத் தொண்டர் புராணம் ஒரு வழிநூல் மட்டுமே;முதநூல் அல்ல.சேக்கிழார் அரசனைத் திசைதிருப்பும் முக்கிய நோக்கில் பெரியபுராணம் எழுதவில்லை,அது நம்பியாண்டார் நம்பியவர்கள் எழுதிய திருத்தொண்டத் தொகை'யின் வழிநூல் மட்டுமே.
சேக்கிழார் தொண்டத்தொகையின் கதைகளை அந்தந்த கதை நிலங்களுக்குச் சென்று,விதயங்களை ஆய்ந்து பெரிய புராணத்தை ஒரு வரலாற்று ஆவணமாகவே படைத்தார்.
எனவே பெரியபுராண நிகழ்வுகள் கட்டுக்கதை என்று சொன்னோமென்றால்,அது நமது அறியாமையே.



>>>>>>>>>//களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?//

எந்த சரித்திரத்தில்? சொல்லுங்கள்; படித்துப் பார்க்கிறேன். கொள்கைக்காகக் கொலை என்பது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.>>>>>>>>>>>

மகேந்திர பல்லவன் காலத்தில் மகேந்திரன் சமணப் பள்ளிகளில் தமது இளமைப்பருவம் முழுதையும் ஒரு சமணனாகவே கழித்தான்,அக்காலத்தின் வரலாற்றை அணுகிப் பாருங்கள்,நாவுக்கரசரும் மகேந்திரன் கையில் பெரும்பாடு பட்டார்,ஆயினும் இறை மாட்சி அவரைக் காத்ததை அறிந்து,பயந்து பின்னர் நயந்து சைவத்தை மேற்கொண்டான்.
அக்கால கட்டங்களின் சமணர்களின் கொலைபாதகங்களின் சான்றுகள் வரலாற்றில் இருக்கிறது.
பிற்காலத்தில் சம்பந்தரின் காலத்திலும் சமணர்கள்,களப்பிரருடன் சேர்ந்துகொண்டு சம்பந்தரை அழிக்க முயன்றார்கள்.
அவர்களை முற்றாக ஒழித்தாலே இதமான மத சூழல் நிலவும் என்ற சூழல் நிலவியதாலேயே,அனல்,புனல் வாதங்களுக்கு ஈடாக அவர்கள் உயிரையும்,தன் உயிரையும் அரசன் முன் பணயம் வைத்தார் சம்பந்தர்;அவர் வென்றதால் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்,தோற்றிருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார்.
அவரைக் காத்தது தமிழும்,சைவமும்,இறையும் மட்டுமே..
அக்கால கட்டத்தில் ஓலை வைகை ஆற்றை எதிர்த்து செல்வதும்,தழலில் வேகாமல் பச்சையோலையாக ஒளிர்ந்ததும் இறை சக்தியல்லாது நடைபெற சாத்தியமல்ல;மேலும் அதில் ஏதாவது ஏமாற்று வேலை நடக்கவோ,அதை நம்பி அவர் சொல்வதை எல்லாம் கேட்கவோ பாண்டிய அரசன் முட்டாளும் அல்ல.
மேலும் மகேந்திர பல்லவனும்,பாண்டியனும் சைவத்திற்கெதிரான மன நிலையில் வெகுகாலம் இருந்து பின் நாவுக்கரசராலும்,சம்பந்தராலும்,இறை சக்தியாலும் சைவத்தை கடைப்பிடித்தவர்கள்,எனவே சரியான,அசைக்க முடியாத காரணம் இன்றி பலம் வாய்ந்த அந்த அரசர்கள் மாறுவார்கள் என நினைப்பதும் அறிவின் பாற் பட்ட ஒன்றல்ல.



>>>>>>>>>//மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.//

கழுவேற்றல் சமாசாரங்களை எந்த வகையில் வைப்பீர்கள் ஐயா?>>>>>>>>>>>>

இது சமணர்களின் கொலை பாதகங்களுக்கெதிரான மாற்று வினை என்றே நான் சொல்கிறேன்;ஒரு குழுவினர் அரசனைக் கைக்குள் போட்டுக் கொண்டு பல அராஜகங்களை அரங்கேற்றும் போது,அவர்களை ஒழித்தால் ஒழிய மற்றவர்கள் அமைதியாக வாழமுடியாது என்ற நிலையில்,தன் இறைசக்தி நிரூபிக்கப்பட்டால்,அவர்கள் அனைவரும் கழுவேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் படுகிறது;அதில் தோற்கும் பட்சத்தில் தன் உயிரையும் பணயம் வைக்கிறார் சம்பந்தர்.
இது ஒரு மறைமுகப்போர்;ஒருவர் தோற்றே ஆக வேண்டும்,சைவம் தோற்றிருந்தால் சம்பந்தர் இறந்திருப்பார்,வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.




>>>>>>>>>>//சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்//

ஒரு வேண்டுகோள். என்மீதான அன்பிலோ, அல்லது கடிந்து சொல்ல இருக்குமொரு கருத்தை மென்மையாகச் சொல்வதான அடிப்படையிலோ கூட இது போன்ற முத்திரைகளைத் தயவு செய்து தவிர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன். என் கருத்துக்களை எப்போது தோன்றினாலும் எந்த டிகிரியில் கடிந்து சொல்வதையும் உவப்புடனேயே எதிர்கொள்வேன்.>>>>>>>>>>>>

உண்மையைத்தான் சொன்னேன்;திறனாளர்கள் நேர்மைத்திறமும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைப்பதால் !



>>>>>>>>>//சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.//

அவசரப்பட்டு தவறாகச் சொல்லி விட்டோம் என்று நீங்கள் உணரும் வண்ணம் விரைவில் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.>>>>>>>>>>>

நடந்தால் மிக மகிழ்வேன்.




>>>>>>>>//மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !//

அடுத்த தமிழக விஜயத்தில்?>>>>>>>>>>>

வாழ்த்துக்கள்.

Thursday, March 20, 2008

பரிதாபத்துக்குரிய கடவுளர் மூவர் (KRS பதிவுக்கான பின்னூட்டம்)

பரிதாபத்துக்குரிய கடவுளர் மூவர் (KRS பதிவுக்கான பின்னூட்டம்)

ஐவகை நிலங்கள் மற்ற ஐவகை பகுப்புகள் சரி..
அந்த நிலங்களுக்குரிய தெய்வங்களாகத்தான் மாயோன்,சேயோன்...அகிய ஐந்து தெய்வங்களை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
அதுதவிர ஏனைய தெய்வங்கள் வழிபாட்டிலேயே இல்லை என்பதற்கான தரவு என்ன?

ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் வகுப்பாசிரியர் இருக்கலாம்,ஆனால் எல்லாப் பாடங்களுக்கும் வகுப்பாசிரியரே,ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே????????

ஒரு நடராஜ புலம்பல்

ஒரு நடராஜ புலம்பல்

நடராஜரின் நடன முத்திரைகள் அனைத்துக்கும் சித்தாந்த விளக்கங்கள்,திருமந்திரத்திலும்,மெய்கண்ட சாச்திரத்திலும் வருகிறது.
எனவே நடராஜருக்கு தமிழ்த தரவு கேட்பதற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

மற்றபடி பின்வருவது போன்ற சில இடங்கள் புன்னகைக்க வைக்கின்றன..

/////ஓவரா குளிர்ந்திட்டாலும் 'பாடி'ன்னு சொல்லிடுவாங்கன்னு அப்பப்போ தமிழ்ச்சூடு தர்றாங்களோ என்னவோ!/////

Sunday, March 16, 2008

குழந்தை முதன்முறையாக கெட்டவார்த்தை சொல்லும் போது

குழந்தை முதன்முறையாக கெட்டவார்த்தை சொல்லும் போது

மிகச் சரியான அணுகுமுறை,சிறார்களிடம் எப்போதுமே சிறிது உளவியல் ரீதியாகவே அணுக வேண்டியிருக்கிறது,அவர்களைப் பண்படுத்த வேண்டிய கடமை இருப்பதால் !!!
ஆனால் என்னையெல்லாம் குறும்பும்,கெடுதலும் செய்த போதெல்லாம்,முதுகில் இரண்டு போட்டுத்தான் வளர்த்தார்கள்,ஓரளவு நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறேன் - எடையில் அல்ல - என்று நினைக்கிறேன்..
May be, கால மாற்றங்கள் வித்தியாச அணுகுமுறையை அவசியப் படுத்துகின்றனவோ???????!!!!!

எங்கும் எதிலும் நுனிப்புல் மேய்ச்சல்

எங்கும் எதிலும் நுனிப்புல் மேய்ச்சல்
இது ஒரு கோணத்தை மட்டுமே பார்க்கும் பார்வை என நினைக்கிறேன்;பல கலைகளில்,ஆர்வமுள்ள துறைகளில் ஒரே நேரத்தில் ஈடுபடும்,அவை அனைத்திலும் ஓரளவு தேர்ச்சி அடைந்து அந்த கலையை/துறையை அனுபவிக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.
நீ கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால டெண்டுல்கராக வேண்டும்,டென்னிஸ் விளையாண்டால் பயஸ் ஆக வேண்டும்,பாட்டு கற்றுக் கொண்டால் உண்ணிகிருஷ்ணன் ஆக வேண்டும்,எழுதப் பயிற்சி செய்தால் சுஜாதா ஆக வேண்டும் என்றெல்லாம் முன் தீர்மாணத்தில் யாரும் எக்கலையிலும்,துறையிலும் ஈடுபட முடியாது.
அவ்வாறு ஆக முடியாதெனில் அத்துறைகளிலேயே ஈடுபடக் கூடாது என்று சொல்வது சிறிது அபத்தமாகத் தான் தோன்றுகிறது.
அவரவரின் தேர்ச்சி அளவு ,அவரவரின் முயற்சி அளவுக்கு,நீங்கள் ப்ளாக் எழுதுவது உட்பட !!!!!!

Wednesday, March 12, 2008

ஜோடி நம்பர் ஒண்ணா இல்லே கேடி நம்பர் ஒண்ணா?? - கேவல dialogue delivery!


ஜோடி நம்பர் ஒண்ணா இல்லே கேடி நம்பர் ஒண்ணா?? - கேவல dialogue delivery!



///////இதில் வருகிற ஒரு நிகழ்ச்சி 'ஜோடி நம்பர் 1'. இது அப்பட்டமான அமெரிக்கத் தொலைக்காட்சியின் தழுவல். இது, 'dance with stars', 'do you think you can dance' போன்ற நிகழ்ச்சிகளின் காப்பி. ஆனா, காப்பி அடிச்சாலும், ஒழுங்கா காப்பி அடிக்கனும். சொந்தப் புத்தியில் எதுவும் அளிக்க இயலாத நம் 'தமிழ்' தயாரிப்பாளர்கள் (குறிப்பா, விஜய்). ///////////

ஏங்க,அந்த காப்பி அடிக்கிற விஜய் டிவியைக் காப்பி அடிக்கிற சன் டிவி பத்தி ஒன்னும் சொல்லலையே நீங்க?
காபி வித் அனு'க்குப் பதிலா அன்புடன்' போட்டாங்க,அது ஊத்தி மூடிடிச்சு,அதுவும் கௌதமி வந்து 'வரும் நாயர்' பாருங்கள் அன்புடன்,அப்படின்னு சொன்னதைக் கேட்டு பலரும் வெருக்கெடுத்துப் போனதாக் கேள்விப்பட்டேன்.
அதேபோல,பல நிகழ்ச்சிகளை விஜயைப் பாத்து காப்பி அடிக்கும் சன்னை என்னான்னு சொல்றது.
வாந்தி எடுத்ததை வாரித் திங்கிற மாதிரி இருக்கு.

Tuesday, March 11, 2008

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்
நண்பர்களே,
இராவணன் ஏன் அவ்வாறு சொல்கின்றான் - கம்பர் வாக்கில் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
வால்மீகத்தையும்,இன்னும் மற்ற பிற வடமொழி இராமகாதையயும் படித்தவர்கள் கம்பனின் இராமகாதையைப் படித்தால் ஒரு பேருண்மையை தெற்றென அறிவார்கள்.
வால்மீகம் இராமனை தெய்வாம்சம் என்றே பேசுகிறது.மாலின் அம்சமாகப் பிறந்தவன் என்று போற்றுகிறது;ஆனால் சம்பவக் கோர்வைகளில் ஒரு நிறைமனிதனுக்கும் கீழாக சில இடங்களில் உணர்வு வயப்படுகிறான் வால்மீக இராமன்.(கிட்கிந்தா காண்டம்-சீதையைக் காணாதபோது,சுக்ரீவனை மட்டுறுத்த வேண்டிய வேளையில்,அயோத்யா,ஆரண்ய காண்டங்கள்-தயரதன் மறைவு,சீதையுடன் வனம் போதல்).
இந்த இடங்களில் வால்மீகம் காட்டும் இராமனின் உணர்வு வயப்பட்ட பேச்சுக்கள்,புலம்பல்கள் நிறைமனிதனின் கீழ்ப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இத்தனையும் அவன் தெய்வாமசமான மனிதன் என்று நிறுவிய பின்னும்.

ஆனால் கம்பனின் இராமன் - முதலில் ஒரு நிறைமனிதன். அவனிடம் பரம்பொருளின் குணங்கள் இருக்கின்றன என அவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் வாயிலாகவே,அவர்களில் நோக்கிலே கம்பன் சொல்லிச் செல்கின்றான்.
இராமன் எந்த இடத்திலும்,ஆசிரியன்(கம்பன்) வாக்கிலோ,தன் வாக்கிலோ-Self Person- தான் கடவுளின்,பரம்பொருளின் அவதாரம் என்று சொல்லுவதில்லை;மற்ற பாத்திரங்கள் வாயிலாகவே இக்கருத்து எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நோக்கிலே தான் இராவணின் இந்தப் பாடல் அமைகிறது.
ஒரு மனிதனைத்தான் நான் எதிர்த்தேன்,பகைகொண்டேன்,(என்னையே நம்பி நானிந் நெடும்பகை தேடிக்கொண்டேன்..யுத்தகாண்டம்) என்றெல்லாம் நினைத்திருக்கும் போது,கடைசி நாளுக்கும் முந்தைய நாளின் போரில் இராமனின் வன்மையைப் பார்த்தபின் இராவணனுக்கு இந்த ஐயம் வருகிறது !!!!!!!!!!

Monday, March 10, 2008

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு
நீங்களும் மலேசியத் தேர்தல் முடிவுகளில் மத ரீதியான விதயங்களை வலிந்து திணிக்க முயல்வதாகத்தானே தோன்றுகிறது?
ஜெயக்குமார் வெற்றி பெற்றது அவர் ஒரு கிருத்துவராக இருந்ததாலோ,அன்வர் இப்ராகிம்,அரசு அவர் மேல் இத்தனை அவச்சொல் புழுதி வாரித் தூற்றியும் இன்று விசுவரூபம் எடுத்தது அவர் முஸ்லீமாக இருந்ததாலோ அல்ல.
மேலும் உங்கள் வாதங்கள் சரியென்றால் இந்துராப் மனோகரன் ஜெயித்திருக்கிறாரே,அதற்கு மட்டும் என்ன காரணம் சொல்வீர்கள்? அவர் இந்தித்துவத்தை உயர்த்தியதாலா???????/
சொல்லப்போனால் மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

எல்லாவாதங்களிலும் உளுத்த கழகக் கொள்கையான மதரீதியான வெறுப்பை-அதுவும் இந்துமத ரீதியான வெறுப்பை - மட்டுமே திணிக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்????

தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.இதை எல்லா பார்வையாளர்களுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்வரும்,மனோகரனும்,ஜெயக்குமாரும்,படாவியும் தங்கள் வெற்றி தோல்விக்கான காரணங்கள் முழுக்க இன,மத ரீதியான ஓரவஞ்சனைகளும்,மக்களின் எண்ணப் போக்கை முழுதும் ஒதுக்கியதும் என்பதை தெளிவாக அறிவார்கள்.

மத ரீதியான நம்பிக்கைகள்,அனுகூலங்கள் மனித வாழ்வுக்கு,சோத்னை நேரங்களில் ஒரு புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ள உதவும் உளவியல் காரணி,இந்த நுண்ணிய உண்மையை அறிந்ததால்தான் முன்னேறிய,முன்னெறிக் கொண்டிருக்கின்ற நாடுகள்,மத சுதந்திரங்களை மக்களுக்கு அளித்திருக்கும் அதே நேரத்தில் மதவெறி தலைதூக்காமல் பார்த்துக்கொள்கின்றன.

திராவிடக் கட்சிகளில் மதநிந்தனையும்,ஆர்.எஸ்.எஸ்/இச்லாமியக் குழுக்களின் மதவெறியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இதில் இந்து,பொந்து என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மத நிந்தனை செய்வதும் அடக்கம் !!!!!!!(ஆனால் மஞ்சள் துண்டு போட்டுக்கொள்ளலாம்,சாயிபாபாவின் காலில் விழலாம் !!!!)
இம்மாதிரியான காரியங்களுக்கான விலையைத்தான் படாவி இப்போது கொடுத்திருக்கிறார்.

***************************************

/////நண்பர் அறிவன் கூறுவதுபோல.. இந்த பிரச்சனையை மதப்பிரச்சனையாக அதன் வெற்றியாக ஊடகங்கள் பெருக்கும்போது///////

ஜமாலன்,நான் இப்பிரச்னையை மத ரீதியானதாகப் பார்ப்பதாகப் பொருள் கொண்டிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.(நீங்கள் எழுதியதற்கு அவ்வாறும் பொருள் வருகிறது :-))

மற்றபடி கருத்தியல் நோக்கம் இல்லாது,ஆபாச அர்ச்சனைகள் செய்யும் நிறமிலி அஃறினைகள் பலர் இருப்பதையும் அறியமுடிகிறது.

சில இடங்களில் கருத்தாகக் கூட பேசக்கூடாத அனுபவக் கல்வியும் அறியக் கிடைக்கிறேன்.

******************************************

Friday, March 7, 2008

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

ரவி,இக்காலச் சூழலில் அழகான கருத்துக்கள்.
'மறந்தும் புறந்தொழா' நிலை பற்றி-
அக்கால அரசியல் சமூக சூழல்,களப்பிரர் கொள்ளைகளுக்கும் அரசுப் பிடிகளிலிருந்தும் விடுபட்ட காலம் தான் பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என் நினைக்கிறேன்.இதில் சைவமும்,வைணவமும் பெருங் கிளர்ச்சியுடன் மறுமலர்ச்சி அடைந்த காலத்தில் ஒரு போட்டியாகவே இவ்வகை வாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
'மறந்தும் புறந்தொழா'க் கருத்துக்கள் ஆழ்வார்களிலேயே பலரால் சொல்லப்படிருக்கிறதுதானே?
நம்மாழ்வார்,பெரியாழ்வார் தவிர சிவத்தையும் போற்றிய ஆழ்வார்கள் குறைவெனவே நினைக்கிறேன் - தவறெனில் திருத்தவும்.
ஆனால் சைவ சித்தாந்தத்தின் உட்புகும்போது-வைணவ குருக்களில் நம்மாழ்வார் தவிர சித்தாந்தக் கருத்துக்களை கோடிட்டுச் சென்றவர்கள் இல்லையெனத் தோன்றுகிறது-அது அகச் சமயம்,அகப்புறச் சமயம்,புறச் சமயம்,புறப்புறச் சமயம் என்றெல்லாம் பேசுகிறது.
இன்னும் அறிய எவ்வளவோ இருக்கின்றதென்றும்,இவற்றை முழுதும் அறிய ஒருமனித ஆயுள் வாழ்நாள் கொஞ்சமே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை....

வாழ்த்துக்கள் !

Thursday, March 6, 2008

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?சந்திரசேகரன் கிருஷ்ணன் சொல்வதில் எனக்கும் சிறிது உடன்பாடிருக்கிறது.
மனித வளத் தேவை வெள்ளத்தில் ஐடி'யில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது;வாய்ப்பை தன்னை மெருகேற்ற கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்துபவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
விப்ரோ நிகழ்வைப் பொறுத்தவரை,அந்த ஐடி'யாளர் பொய்யான அனுபவம் குறிப்பிட்டு வேலைக்குச் சேர்ந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு;மிகுந்த சம்பளம் அளிக்கப்படும் ஐடி துறை வேலைகளில்-சொல்லப் போனால்,முக்கியமான எல்லா நிறுவனங்களிலும்-பொய்த் தகவல்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டால் ஒழுங்கு நடவடிக்கை இருக்கும் என்ற ஷரத்து,பணி ஆணையில் சேர்க்கப் பட்டே வழங்கப்படுகிறது.
இவ்வளவுக்குப் பிறகு தன்னுடைய பொய்மை வெளிப்பட்டதில் நாணாமல் நிறுவந்த்தைக் குறை கூறுவது சிறுபிள்ளைத் தனம்.
விப்ரோ தன் வேலைக்காக பொய் அனுபவத்தைப் தன் ஊழியர்களையே போடச் சொல்கிறது என்பதும் முதிர்ச்சியான வாதமல்ல;அவ்வாறு இருப்பினும் விப்ரோ நிறுவனம் செய்த ஒரு பணியைப் பற்றித்தான் - அந்த வேலையை விப்ரோவின் வேறு யாராவது ஊழியர் செய்திருப்பார்-போடுகிறது என்றால்,எப்படியும் அந்த பணியை விப்ரோ செய்திருக்கிறது என்பதில் மாற்றமில்லை.
மேலும் அவ்வாறு போடும் போதும் சம்பந்தப்பட்டவர் அந்த வேலைக்கான திறனை வளர்த்துக்கொள்வதும் முக்கியக் காரணியாகப் படும்.
மேலும் அவ்வாறு பொய்யாக காண்பிக்கப் பட்டு விப்ரோ ஒரு பணியைப் பெற்று ச்ம்பந்தப்பட்ட அந்த ஊழியர் வேலையில் சொதப்பினால்,பழியையும்,வருமானக் கழிவையும் விப்ரோ ஏற்றுக் கொள்ளும்,அதே போல் தனி நபர் பொய் சொல்லி விப்ரோவில் வேலை வாங்கி,பின் குட்டு உடைபட்டால் வேலை இழப்பை சரியாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் முறை.
நான் எல்லா ஏமாற்றும் செய்வேன்,ஆனால் எனக்கு ஒரு ஏமாற்றமும் வரக்கூடாது எனச் சொல்வது முரண்.அதற்காகப் நாட்டுப் பொருளாதார சமுதாயக் காரணங்களை இழுப்பதும் அறிவீனம் என்றுதான் படுகிறது.

Wednesday, March 5, 2008

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்!

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்! நல்ல நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்.
ஒரே ஒரு தகவல்,எனது தொடர்புகளின் படி,திருமுறைகள் சிதம்பரத்தில் மறு அரங்கேற்றம் பெற மடங்களிம் ஆதீன கர்த்தர்களும் பின்னனியில் உதவியதாகவே அறிகிறேன்.
குறைந்தபட்சம் ஆவடுதுறை,குன்றக்குடி மடங்களைச் சேர்ந்தவர்கள்.
தீர்க்கமான நடவடிக்கைக்குக் காரணமான முதல்வர் மு.க. பாராட்டுக்குரியவர்.

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?
டோண்டு ராகவன்,நீங்கள்தான் பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறீர்கள்.
மசூத்களில் தமிழில் ஓத வேண்டும் என எந்த தமிழ் முஸ்லீமும் வேண்ட வில்லை;மேலும் மசூதிகளுக்கான தனியான் மத சட்டம் அல்லது கோட்பாடுகள் இருக்கின்றன,அதில் அரச் தலையிடுவதில்லை.மேலும் முஸ்லீம்களுக்கான மதக் கோட்பாடுகள்,மத நூல்கள் தமிழில் உருவானவை அல்ல.
ஆனால் திருமுறைகள் இறைவனே ரசித்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவாகவே இருக்கின்றன.எனவே இதில் தீட்சிதர்கள் செய்வதுதான் அராஜகம்.
அரசு இந்த விதயத்தில் சரியாகவே செயல்பட்டிருக்கிறது.

மதுரையம்பதி,
மடத் தலைவர்கள் இவ்விதயத்தில் செயல்படாமல் இருந்தார்கள் என்பதும் சரியல்ல;ஆவடுதுறை மற்றும் குன்றக்கூடி ஆதீனங்கள் இவ்விதயத்தில் மிகுந்த ஆர்வமுடன்,ஈடுபாட்டுடன் இருந்ததை நான் அறிவேன்.

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(
கீதா,நன்றி.
பொன்னம்பல மேடையில் பாடக் கூடாது எனச் சொல்ல ஒத்துக் கொள்ளவேண்டிய காரணம் வேண்டுமல்லவா?
மேலும் பகதன் பார்க்க வியலா நிலையில் கல்லடித்து நிறுவப்பட்ட நந்தியையே நகர்த்தியவன் இறவன்;அருந்தமிழ் பதிகத்தால் வேண்ட இறந்த பூம்பாவையை உயிர்ப்பித்தவன் இறைவன்.
அந்த தமிழ்க் காதலன் செவியில்,பொன்னம்பலத் தமிழ் கேட்கக் கூடாது என,அதுவும் தமிழகத்தில் சொல்வது அடாவடியாகவும்,அறிவீனமாகவும்தான் தோன்றுகிறது.
உங்களைப் புண்படுத்தும் நோக்கமல்ல எனது கருத்து என்பதை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

சமீபத்திய பதிவுகளும், ஒரு புதிய பதிவனும்...

சமீபத்திய பதிவுகளும், ஒரு புதிய பதிவனும்...
நண்பரே,ஆரோக்கிய சமூகத்திற்கான அளவு கோல்கள் பதிவுலகில் இல்லை என்பதை நான் புரிந்திருக்கிறேன்.
பதிவுலகின் பல குழுக்களில்-திராவிடம்,பிராமணர்,கம்யூன்,இன்னும் மற்றபிற என பலர் இருக்கிறார்கள்.

சமூகம் என்பதற்கு அவரவர் பார்வையில் ஒரு defenition இருக்கிறது.பொதுநன்மையைக் கருதும் கூட்டம் சொற்பமாகவும் குழுவில்லாமலும் இருக்கிறது.

அவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன

ஒன்று-அவர்களெல்லாம் ஒரு குழுவாவது !

இரண்டு - விரும்பியதை- நேர்பட எழுதிவிட்டு வேடிக்கை பார்ப்பது.

தேட...