Sunday, May 25, 2008

"என் மகன்"

"என் மகன்"

ஐயா கண்ணன் அவர்களுக்கு,

மகன் தந்தைக்காற்றும் உதவியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

அன்பும் வாழ்த்தும்.

ஒரு சிறிய விண்ணப்பம்:இலக்கியங்களை,திறனாய்வுகளை இணையத்தில் எழுத்து வடிவிலோ,ஒலி வடிவிலோ தந்தால் உங்கள் வலைமனை டி.கே.சி.யுடையதைப் போல ஒரு இணைய வட்டத்தொட்டியாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

அதை ஆர்வமுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.

கவிதைகள் மட்டுமே தந்தால் உங்கள் பக்கத்திற்கான படிப்பவர் ஆர்வம் நாளடைவில் குறைய வாய்ப்பிருக்கிறது.தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

Sunday, May 11, 2008

மந்திரம் போலொரு சொல் தாரீர்!

மந்திரம் போலொரு சொல் தாரீர்!

/////இவைகளை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். நாம் மாற வேண்டும். எதைப் பற்றி நாம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ பின் அதுவாகவே மாறிவிடுகிறோம். பிரிவினை பற்றிப் பேசும் மனது அழுக்குறுகிறது. பின் அது அழுக்காகவே இருக்கிறது. வன்முறை பற்றிப் பேசும் மனது மிரண்டு போய் கிடக்கிறது. வன்முறை என்றும் பிரச்சனையைத் தீர்த்ததாகக் கதை இல்லை. வன்முறை, வன்முறையை வளர்க்கும் என்பதே நிதர்சனம். எனவே தமிழ் மின்னுலகம் தன் 'விலங்கு மனத்தை'க் கொஞ்சம் திருத்தி நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவொரு நல்ல வாய்ப்பு. வலைப்பதிவு என்பது யோகமென்று சொன்னீர்கள். அதுதான் எவ்வளவு உண்மை! எழுத்தை யோகமாகக் கொள்ளுங்கள். மந்திரம் போலொரு சொல் விழ வேண்டுமெனில்? உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டும். உள்ளத்தில் ஒளி தோன்றினால் வாக்கினில் இனிமை வரும், சொல்லில் கனிவு வரும். அப்போது விழும் சொற்கள் மந்திரத்தன்மையுடன் இருக்கும்.//////

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

எனது உள்ள ஆயாசமும் இதுவே.

தற்போது வலைப்பூக்கள் உலகு நீங்கள் சொல்லிய வண்ணமே உள்ளது.எனினும் கலங்குவது தெளிவு பெறவே என்பது பலநாள் நம்பிக்கை.

நம்புவோம்.....

வா மீத முலை எறி நூலிலிருந்து..

வா மீத முலை எறி நூலிலிருந்து..

உழைப்பவர் என்றும்

உயரே வாழ்வார் என

உணர்த்திய உழைப்பாளி...

என்றும் கொள்ளலாமே...

விழுந்து வணங்குகின்றேன்

விழுந்து வணங்குகின்றேன்

கண்ணன் ஐயா,நல்ல விண்ணப்பம்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் பலர் தமிழோதி,தமிழாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில்தான் கட்சி,இலக்கிய உலக அரசியல் தமிழை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கிறது.

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

மிகச் சரி.சமீபத்தில் அப்பரின் மாதர்பிறைக் கண்ணியானை பாடலை விஜய் சிவா பாடிய பாடல் வீடியோ வடிவில் பார்க்கக் கிடைத்தது.

திருமுறைகளும் பிரபந்தப் பாடல்களிலும் எண்ணற்ற அழகிய பாடல்கள் இருக்கின்றன என்பதை பல பாடகர்கள் மேடைப்பாடகர்கள் நினைவில் இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Friday, May 9, 2008

சனிமூலை

சனிமூலை

சனி மூலையானாலும் சொல்லும் விதயம் நேராகவும் ஜோராகவும் இருக்கிறது.இணைய வலைப்பக்கங்களிலும் பல 'கவுஞர்கள்' வெறியோடு 'உணர்ச்சி வடிகாலாய்' 'கவுஜ' எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது சொன்னால் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு ஆட ஆரம்பிப்பார்கள்.

ஆத்தா...ஏ..ஆத்தாஆஆஆஆஆஆஆ.......

தாங்கவில்லை !!!!!!!

Tuesday, May 6, 2008

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்

எனது குறிப்புக்காக ஒரு பதிவின் மூலம் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

///////தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர்////////
அவரவர் தெளிவு அவரவர்க்கு !

/////கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.//////
நான் பாலகுமாரனின் எழுத்துக்களை மெர்க்குரிப்பூக்களில் இருந்து,இப்போதெழுதிய உடையார்,காதலாகிக் கனிந்து' வரை படித்தவன்தான்.

அதே நேரம் திருமுறைகளிலிருந்து,திருமந்திரம் வரையிலான பரிச்சயமும் இறை, அன்போடு எனக்களித்த கொடை.

எவை கடல் என்பதில் கிணறு,சிறுகுளம்,ஏரி,உண்மையான கடல் ஆகியவற்றை,தனித்தனியே அவை மட்டும்,மற்றும் அனைத்தையுமாக அறிந்தவர்களிடையே,மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது உலக நியதி.

மற்றபடி உங்களையோ பாலகுமாரனேயோ குறைத்து மதிப்பிடுவதோ எள்ளுவதோ என் நோக்கமல்ல.அவரின் எழுத்துக்களில் தோன்றும் அதே தொனி இங்கும் தெரிந்ததும்,பல முன்னணி எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது வழமையாகி விட்ட நிலையிலும் எனது மேற்கண்ட கருத்து அமைந்தது.
அது புண்படுத்தும் விதத்தில் இருப்பின் வருந்துகிறேன்.

புரிதலுக்கும் நீண்ட விளக்கத்திற்கும் நன்றி.
************************************************************************
உரைநடை-அதிலும் பொருளற்று-எழுதி,வார்த்தைகளை உடைத்துப் போட்டு விட்டால் அது கவிதை என்றெண்ணிக் கொண்டிருக்கும் வான்கோழிகளையும்,

பின்னூட்டங்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன என அறியாத ,பின்னூட்டம் கூட கருத்துடன் எழுதவியலாத,'மேல்மாடி காலி'க் கூடங்களையும் பார்க்க சிரிப்புதான் வருகிறது.

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
//சங்க பலகை ஐயா,உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.கோடி நன்றிகள் !பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.சங்க பலகை ஐயா,உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்திருக்காவிடில் எனக்கு அவருடைய நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.கோடி நன்றிகள் !பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள் என்பதை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.//நன்றி,நானும் வெகு நாள் கழித்துத்தான் உங்கள் பதிலைப் பார்த்தேன்.பாவாணர் நூல்கள் மட்டுமல்ல,சுமார் 300 புத்தகங்கள் வரைக்கும் இதுவரை சிங்கை நூலகத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறேன்;ஒரு மின்மடல் அனுப்பி பாராட்டினார்கள்(நானே சொல்ல கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது,ஆனாலும் வேற யாரும் சொல்ல முடியாது,இல்லையா??? :-))அப்புறம் ஐயா' எல்லாம் போட்டு என்னை பெரியவராக்கி விடாதீர்கள்,நானும் உங்கள் சக வயதினன் தான்..-சங்கப்பலகை & அறிவன்

தேட...