Tuesday, March 8, 2011

முட்டை சைவமா ?முட்டை சைவமா ?
||மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. ||

மிகத் தவறான கூற்று..

சைவம் சிவமொடு சம்பந்தமாவது என்பது திருமந்திரம்..

சைவம் என்ற சொல்லுக்கும் சிவம் என்ற சொல்லுக்கும் வேறுபாடு இல்லை;சிவத்தை வலியுறுத்தியவர்கள் எல்லாம் சைவர்கள் ஆனார்கள்..சிவம் என்ற சொல்லுக்கு அன்பு என்ற பொருளும் உண்டு;ஆகையினால்தான் அன்பே சிவம் என்ற சொலவடையும் உருவாயிற்று..

சைவ உணவு என்ற உணவுப் பழக்கம் எவ்வுயிரையும் உணவின் பொருட்டு கொல்லாமையைக் வலியுறுத்திய ஒரு கருத்தாக்கம்.அந்த கருத்தாக்கம் தோன்றியதன் காரணம் பிற உயிர்களிடத்ததில் அன்பு..

நமது குழந்தையிடத்தில் எவ்வளவு அன்பு வைக்கிறோமோ அதை வகை அன்பை ஆடு,கோழிகளிடமும் வைத்தால் அவற்றை நமது உணவுக்காக கொல்லமாட்டோம்..எனவே அன்பின் வழியாக,அதாவது சிவம்-சைவம் என்ற தொடர்பின் வழியான கொள்கையாளர்களின் உணவு முறை சைவ உணவு முறையானது !


||இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.||

இது இன்னொரு தவறான கூற்று.

ஆதி நாள் இலக்கியம் தொட்டு சைவம்,வைணவம்,சமணம்,சாக்தம்,கபாலிகம்,காணாதிபத்யம் போன்ற ஆறு சமயப் பிரிவுகள் இருந்தன.

சைவம் என்பது ஒரு சமயமல்ல என்று கூறுவது சிறிதும் சமய விதயங்கள் அறியாத ஒரு கூற்று.

இந்து என்ற சொல் தமிழர்கள் கண்டு பிடித்ததல்ல;அது அறிவற்ற ஆங்கிலேயர்கள் தென்னகத்தில் நிலவிய 6 வகை சமயங்கள் பற்றிய அறிவில்லாமல், பொதுவாக இந்தியர்கள் அனைவரையும்-அதாவது இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் அல்லாத அனைவரையும் குறிக்க உருவாக்கிய ஒரு சொல்.

தமிழிர்கள் அந்த சொல்லுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.

தமிழர்களின் பெருவாரியான சமயம் சைவம் அல்லது வைணவம்.
சாக்தம்,கபாலிகம்,கானாதிபத்யம் மூன்றும் சைவத்தில் அடங்கி விட்டன.சமணம் தேய்ந்து விட்டது..

எனவே சைவம் என்பது சாப்பாட்டைக் குறிக்கும் சொல் அல்ல;அது முழுக்க சமய நெறியைக் குறித்து அதன் வழியே உணவுப் பழக்கத்தையும் குறிக்கின்ற சொல்.

3:53 PM, March 09, 2011


சாருவும் மிஷ்கினும்


சாருவும் மிஷ்கினும்
அறிவன்#11802717200764379909 said...

எளிய தமிழில் நீரோட்டமான நடையில் எழுதப்பட்ட நல்ல கட்டுரை..

சாநி அடிப்படையில் அருவருக்கத்தக்க நடையில் எழுதினால் கவனிக்கப்படுவோம் என்ற சித்தாந்தத்தை கடைப்பிடித்து எழுதுபவர்.துவக்கத்தில் திராவிடக் கட்சிகள் எப்படி பெரும்பான்மை சமூகத்திற்கு அதிர்வு தரத்தக்க கலகக் குரல்களை எழுப்பி மக்களின் கவனம் பெற்றார்களோ அதே கலக உத்திதான் அவரது டூல்..இடையில் ஏன் தனக்கு இன்னும் நோபல் தரப்படவில்லை என்றும் அங்கலாய்ப்பார்;அதுவும் அவரது எழுத்து நடையின் இடையில் அகப்படும் பகடிக்கான விதயம்தான் என்றுதான் அவரை வாசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள் என்பதை அவர் அறியாததுதான் சோகம்....

ஜெ பற்றிய உங்கள் மதிப்பீடு முழுக்கவும் சரியா என்பதில் எனக்குக் குழப்பம் இருக்கிறது..சில சமயம் அசத்துகிறார்,சில சமயம் அவலமாக இருக்கிறது..
ஈழ்த்தின் கொலைகள் பற்றிய அவரது கருத்து,உலோகம் நாவல் போன்றவற்றில் அவரது உணர்வுப் பிறழ்வு கண்டிக்கத்தக்கது என்பதே எனது பார்வையும்..ஆனாலும் காடு,ஊமைச் செந்நாய் போன்ற சில படைப்புகள் அசத்துபவை என்பதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது..

எஸ்ரா வின் யாமம் மிகவும் பிடித்துப் படித்தது..கதாவிலாசம் அவ்வளவு சுவரசியமாக இல்லையெனினும் இவை இரண்டின் தாக்கத்திலும் பயங்கரமாகக் கிளப்பிவிடப் பட்ட விளம்பரத்தினாலும் உபபாண்டவம் படித்தேன்...40 பக்கம் கூட படிக்க முடியவில்லை!

நான் நினைப்பது என்னவென்றால்..எழுத்தாளர்கள் பிரபலம் அடையும் வரை எழுதுபவைதான் படிக்கத்தகுந்தவை என்பது எனது புரிதல் :))

விதிவிலக்கான எழுத்தாளர்கள் மிகச் சிலரே..சுஜாதா,கல்கி,புதுமைப்பித்தன்,லாசரா போன்ற மிகச் சிலர்.
பாலகுமாரனும் இந்தப் பட்டியலில் சேர்க்கத்தகுந்தவர்,அவரது குரு வேடத்தைக் கலைத்தால்!

அழகாக எழுதப்பட்ட நல்ல பத்தி..நன்றி.

தேட...