Tuesday, November 20, 2012

சைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்


சைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்

 • [[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.
  இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !//
  இது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே!]]

  யோகன், நான் கூறியது அசைவர்களின் வாதம் பற்றி...அசைவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை நியாயப் படுத்தவே இவ்வளவு வன்மத்துடன்(இல்லையென்று சொல்லாதீர்கள்!) வாதங்களை முன்வைக்கிறார்கள்.பெரும்பாலும் அவை தனிப்பட்ட தாக்குதலாக இல்லாவிட்டால், அவற்றிற்கு மிக அருகில் செல்கின்றன.

  சைவ உணவின் அடிப்படை உலகளாவிய அன்பு..வலி உணரும் எந்த ஒரு உயிரியையும் துன்புறுத்தக் கூடாது என்ற அன்பின் அடிப்படையில் வந்தது.

  அந்த அன்பு வளர்ந்து அருளாகும் போது ஆன்மிக முன்னேற்றமும், மனதளவில் உயர்நிலையடையும் நோக்கமும் முகிழ்கின்றன.

  ஆன்மிகமும், ஆன்ம விடுதலையும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று நினைக்கும் மக்கள் தொகை பெரும்பான்மையாகி விட்டது..அவர்களை எந்த வாதத்தினாலும் மாற்றுதல் அரிது.

  உணவு என்ற அளவில் அவரவர் விருப்பம் என்றாலும், உண்ணும் உணவின் தன்மை சிந்தனையின்,உயிரின், ஆன்மாவின் தன்மையைப் பாதிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இது பொய் என்று சொல்பவர்களைத் திருத்துவது என் வேலையல்ல.

  நான் நற்கல்வி கற்றால், நல்ல வேலையைத் தேடிக் கொண்டால் உலகாதாய அளவில் என்னுடைய முன்னேற்றம் நன்றாக இருப்பதால் அதை முயற்சிக்கிறேன். இதே போல ஆன்ம நிலைக்கான முன்னேற்றத்திற்கான சில பயிற்சிகள் அவசியம்; அவற்றில் சைவ உணவுப் பழக்கம் முதன்மையானது.

  இவற்றைக் கைக் கொள்வோர் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவது அவசியம் என்று வற்புறுத்துவது இல்லை; வேண்டுமானால் அறிந்ததை சொல்லலாம்..அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு !

  ஆனால் சைவ உணவுப் பழக்கமுடைய குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வரும் பெற்றோர்கள் மனதிற்குள் அழுகிறார்கள்..இவர்களில் பலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கிறேன்..

  குழந்தைகள் சம்பாத்தித்து ஆயிரக் கணக்கில் பணம் கொண்டு வந்து கொடுப்பதால் அவர்கள் செய்யும் எந்த செயலும் சரியானது என்பது உண்மையாகி விடாது; ஆனால் பெற்றோர்கள் வாயற்று இருக்கிறார்கள்..

  நான் சொன்னது போல அவரவருக்கான கதி அவரவரால் தீர்மானிக்கப் படுகிறது!
  Delete
 • @ அறிவன்.

  நான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி. இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள், அல்லது கத்திரிக்காயை பறிக்கும் பொது அந்த செடி வழியால் துடிக்குமே அதற்க்கு என்ன செய்வாய் என்பார்கள். முடியலை...........
 • [[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள்,]]

  கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எங்குமே மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை..

  என்னைப் பொறுத்த வரை ஆன்மிகம் வேறு..மதம் வேறு...
  இந்து மதம் என்ற ஒரு கட்டமைப்பையும் நான் புறந்தள்ளுபவன்..ஆனால் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.

  வளர்த்தினால் உங்களுக்குமே குழப்பம் வரலாம். :))
 • Sunday, October 28, 2012

  இசையறியும் பறவை


  இசையறியும் பறவை
  [[ வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.]]

  இல்லை.
  இராம காதை வால்மீகியால் எழுதப்பட்டு ஏற்கனவே புகழ் பெற்ற ஒன்று.

  கம்பன் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகியின் இராமாயணம் நாடெங்கும் படிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஒன்று;ஒரு மாபெரும் காவியம் இயற்ற வேண்டும் என்ற எண்ணதில்தான் கம்பன் இராமாவதாரத்தை எழுதப் புகுந்தான்.

  குலோத்துங்கள் உதவி செய்தாலும், ஒட்டக் கூத்தர் போன்ற அரன்மனைப் புலவர்களின் இடையூறு வேறு அவனைப் படுத்தியது.

  இந்த நிலையில், பின் வரக் கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காவியத்தை எழுதப் புகுந்த கம்பன் இராமனின் கதையை எடுத்துக் கொண்டதும், அதற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதும் சிந்தனைக்குரியது.

  அவையடக்கத்திற்காக கம்பன் மேற்கண்ட பாடல்களை எழுதியிருந்தாலும், கம்பனின் நோக்கம் வால்மீகி எழுதிய இராமனின் வாழ்க்கைக் கதையை எழுதுவது மட்டுமல்ல.

  தமிழ்ச் சமூகத்திற்கு ஒப்பற்ற ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் காவியத்தின் ஊடாகத் தரும் ஒரு பெரும் பொறுப்பை ஏற்கொண்டே கம்பன் காவியத்தைத் துவங்கியிருக்க வேண்டும்.

  சட்டம் பயில்பவர்களுக்கு எளிதில் புரியும் ஒரு தத்துவம் -இன்ப்ளிகேஷன் பிஹைன்ட் த லா- என்ற ஒன்று. ஒரு சட்ட விதியில் இரு சாரார் மல்லுக் கட்டும் போது, நீதி மன்றங்கள் சட்டம் சொல்லும் நேரடிப் பொருளைத் தாண்டி, சட்டம் இயற்றப்பட்ட நோக்கம்,தத்துவம் என்ற தளங்களுக்குள் செல்கிறது.

  அதைப் போலவே கம்பனின் காவியத்திற்கும் ஒரு நோக்கம், ஹிட்டன் அஜன்டா இருக்கிறது.

  தமிழர்களின் வாழ்வு நெறியைச் செம்மையாக்கும் பொருட்டு,கொல்லாமை,பிறன்மனை விழையாமை, தீயன பொறுக்காமை(தீயன பொறுத்தி நீ-வாலி வதைப் படலம்), இரு மாதரை சிந்தையாலும் தொடாமை( இந்த இப் பிறப்பில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய்-சுந்தர காண்டத்தின் சீதை, அனுமனிடம்), ஒரு அண்ணன், ஒரு மகன், ஒரு சீடன், ஒரு அரசன் என அனைத்து வாழ்வின் நியதிகளையும், ஒரு மனிதனாக இருந்து இராமன் மற்றும் பல பாத்திரங்கள் வாயிலாக விளக்கிச் செல்கிறான் கம்பன்.

  கம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய!!!

  (கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட்டு கம்பனைத் தொடருங்கள்)

  :))

  [[குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

  ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன்]]

  இதிலும் அரசனான குலோத்துங்கள் உங்களைப் பாடாமல், சடையப்பனைப் பாடல்களிள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன் என்று அரசனிடமும், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறைதான் உங்களைச் சொல்லியிருக்கிறான் கம்பன்,நீங்கள் செய்த உதவிகளெத்தனை, அரசனை விட கம்பனுக்கு புரவலாக இருந்து அவனை ஆதரித்த உங்களை நூறு பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டிருக்க வேண்டாமா என்ற சடையப்பரிடமும் ஏற்றி விட்டதாகக் கூறும் செவிவழிக் கதைகள் உண்டு! கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் ! என்றிருந்ததாம்.
  :))

  Tuesday, August 14, 2012

  சமூகத்தின் பாலியல் சிக்கல்கள்


  சமூகத்தின் பாலியல் சிக்கல்கள்
  இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஒத்துக் கொள்ளப் படவேண்டிய ஒன்று..அந்த நபரும்,பெண்ணும் சமூகத்திற்கும் ஊடகத்திற்கும் தொடர்பில்லாதவர்களாக இருந்தால்...

  நமது வாழும் சூழலே ஊடகதாரிகளின் வழி நிர்ணயிக்கப்படுகிறது.விடிந்து விழிப்பது முதல் தூங்குவது வரை நமக்கு ஊடக தாரிகள்தான் அனைத்திற்கும் வழிகாட்டிகளாகவும்,தலைவர்களாகவும்,மகிழ்வூட்டும் கோமாளிகளாகவும் இருக்கிறார்கள்..ஊடகமும் ஊடகதாரிகளும் இல்லாவிட்டால், இன்றைய தமிழகம் ஸ்தம்பித்துச் செயலிழந்து விடும்..

  அதன் வெளிப்பாடுதான் ஊடக தாரிகளின் மீதான எந்த செய்திக்கும் கிடைக்கும் முக்கியத்துவம். அது பாலியல் சார்ந்ததாக இருக்கும் போது, ஆதி மனித உணர்ச்சிகளின் கூடுதல் அனுகூலம் சேரும் போது அது கொண்டாடக் கூடிய அளவுக்குச் செல்கிறது..

  இதுவே, ஒரு தனி மனிதன் ஒரு பெண்ணை முத்தமிடும் காட்சி என்றால், பார்த்து மறக்கப்பட்டிருக்கும் அல்லது ஏதாவது காமக் கதைப் பக்கங்களில் சேர்ந்து கரைந்திருக்கும்..

  தமிழனின் ஊடகதாரி மனநோய்தான் இதற்குக் காரணம். வேறு எதுவும் அல்ல..

  காமத்தின் மீதான பார்வைப்புலங்களின்  வேறுபாடு எதுவும் இதில் வரவில்லை.

  || இத்தாலிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு முன்பாக  தனக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகான பதினைந்து வருடங்களில் வேறு பெண்ணை நாடியதில்லை என்றார். தனது பெரும்பாலான ஐரோப்பிய நண்பர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவரின் நம்பிக்கை. ||

  :)) இது ஊகம் மட்டுமே..
  இதற்கான புள்ளி விவர சான்றுகள் கிடையாது..மேலும் பொதுவான பார்வையில்,கீழை நாடுகள் எப்படி உடல் சார்ந்த நாகரிகங்களில் மேலை நாடுகளைக் காப்பி அடித்தோமோ, அதே போல் சோரம் போவதிலும் காப்பி அடிக்கத் துவங்கியிருக்கிறோம்..

  பின்வரும் புள்ளி விவரங்கள் இதிலும் மேற்குலமே நமது இளையர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறது. மேற்குலகத்திலிருந்து, உடலியல் சுதந்திரம், காமத்தில் கட்டற்ற சுதந்திரம், பந்தமின்றிச் சேர்ந்து வாழ்தல் என அனைத்தையும் வரவேற்ற நாம், வரைமுறையற்ற காமத்தையும் வரவேற்போம் !

  http://www.ucg.org/doctrinal-beliefs/world-news-and-trends-extramarital-affairs-becoming-more-commonplace/

  http://en.wikipedia.org/wiki/Adultery

  :(((

  Tuesday, May 15, 2012

  நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


  நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


  இரோட்டிக் புத்தகங்களுக்கும் காமம் பற்றிய தெளிதலுக்காக உள்ள புத்தகங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.

  ட்ரிபிள் எக்ஸ் வலைப் பக்கங்களில் இருப்பது போன்ற குமட்ட வைக்கும் புத்தகங்கள் அச்சில் வரவோ அல்லது நூல்நிலையத்தில் வைக்கப்படவோ வாய்ப்பில்லை.

  ஷாலினி,காமராஜ் போன்ற மருத்துவர்கள் எழுதிய கேள்வி பதில் புத்தகங்களைப் படித்தால் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம் காமம் பற்றிய எந்த அளவிற்கு அரைகுறைப் புரிதல்களுடன் இருக்கிறார்கள் என்பது புரியலாம்.

  அந்த வகையில் அத்துறை அறிவுக்கான புத்தகங்கள்-மாஸ்டர்ஸ் அன்ட் ஜான்சன்ஸ், வாத்சாயனரின் காம சூத்திரம் போன்றவை- தேவை என்றே நான் நினைக்கிறேன்.அவற்றைத் தேடுவோர்க்கு அவை கிடைக்க வாய்ப்பிருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் படிக்க வாத்சாயனரின் காமசூத்திரம் கிடைக்கும் போது, தெருவில் விற்கப்படும் சரோஜாதேவி போன்ற புத்தகங்கள் ஒழிவதோடு,காமம் பற்றிய சரியான அறிவு கிடைத்த சமூகமாக சமூகம் மாறும்.

  அவற்றை ரெஃபரன்ஸ் பிரிவுக்கோ அல்லது வயது வந்தவர்கள் மட்டுமோ எடுக்கலாம் என்று விதிகளை அமைக்கலாம்.முழுக்கவே இருக்கக் கூடாது என்பது சரியான பார்வை அல்ல.

  மற்றபடி பாலியல் கல்வி, காமம் பற்றிய அறிவு என்ற பொருள்களில் எனது பதிவுகள் எனது நிலைப்பாடைத் தெளிவாக்கும் என்று நினைக்கிறேன்

  Monday, April 30, 2012

  காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?

  காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?


  காந்தியைப் புனிதராகவோ மனிதரோகவோ காட்டுகிறதோ இல்லையோ இம்மாதிரிக் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் ஒளிவட்டம் என்றே தோன்றுகிறது..
  :)
  எதிலும் நேர்படப் பேசும் பத்ரி இதில் வீழ்ந்தது வருந்தத் தக்கது.
  காந்தி ஒரு தனிமனிதராக மிக உயர்ந்தவராகத்தான் இருந்தார்;வாழ்ந்தார்..
  எந்தத் தனிமனிதனுக்கும் தன் தவறுகளை உணரவோ பொதுவில் வைத்து மன்னிப்பு வேண்டவோ முடியும் அளவுக்கு இலகுவானதும் மேன்மையானதுமான மனம் இருந்ததில்லை;எந்தத் தனிமனிதனுக்கும் பரந்து பட்ட தனது மக்களுக்காக அவர்கள் நலனை முன்வைத்துப் பல சோதனை முறைப் போராட்டங்களை முன்னெடுக்கத் தோன்றியதில்லை..
  அவரது குறைபாடு அவரது போராட்டமுறை தவிர மற்ற முறைகளின் புனிதம் பற்றியும் நோக்கம் பற்றியும் அவருக்கு இருந்த உள்ளார்ந்த கேள்வி எழுப்புதலும்,நம்பிக்கையின்மையும் அவர்களை முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு-இது அவர்களின் வாழ்வை முடிக்கும் என்ற நிலையிலும்-அவரை செலுத்தியது என்பதும்தான்..இதிலும் தோற்றதாகத் தோன்றுவது காந்தி என்ற தேசத்தலைவர்தான்..
  ஒரு தனிமனிதராக அவர் தன்னைச் சுத்தி செய்து கொண்டேயிருந்தார் என்பதும் மகாமனிதனாக மாறும் தொடர்செயல்பாடே வாழ்வு என்ற நினைவிலும் வாழ்ந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

  மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்


  மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்


  பத்ரி,
  தெந்துல்கர் ஏன் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதை விளக்கும் எதிர்மறைச் சான்றுகளைத் தரும் வாதங்களாலேயே இந்தப் பதிவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதாவது சுருக்கமாக சால்ஜாப்பு சொல்வது என்று சொல்வார்களே அதைப்போல...

  தெந்துல்கர் கிரிக்கெட் பற்றிய சர்ச்சைக்குரிய விதயங்களில் கூட தனது கருத்தைத் தெளிவுறப் பல சமயங்களில் தெரிவித்ததில்லை;இந்நிலையில் மாநிலங்களைவையில் நாட்டின் பல முக்கியப் பிரச்னை தொடர்பான விதயங்களில் அவருக்குக் கருத்து இருக்கிறதா என்பதே தெரியாத நிலையில் அவர் என்ன பொது நன்மைக்கு என்ன சாதித்து விட்டார் என்பதற்கு இந்தப் பதவி?

  இது காங்கிரஸ் கட்சியின் துஷ்பிரயோகம் என்றும்,தெந்துல்கர் நேர்மையாக இதை மறுத்திருக்க வேண்டும் என்பதும்தான நியாயமானது..

  தவிர சோவின் நியமனத்தையும் தெந்துல்கரின் நியமனத்தையும் ஒப்பிடுவது குழந்தைத் தனமானது;சோ 50 களில் இருந்து நாட்டின் எல்லா முக்கியப் பிரச்னைகளையும் ஒட்டியோ வெட்டியோ அலசும் திறமையும் ஆலோசனை சொல்லும் தகுதியும் படைத்தவர்..
  உங்களை எடுத்துக் கொண்டால் கூட முனுசாமி முனிசிபாலிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட,சரியோ தவறோ அதைப் பற்றிய ஒட்டியோ வெட்டியோ ஒரு கருத்தைத் தெரிவித்து அதை டிஃபென்ட் செய்யும் திறன் பெற்றும் அதை கம்யூனிகேட் செய்யவும் செய்கிறீர்கள்..
  தெந்துல்கர் நியமனத்திற்குப் பதில் உங்களை நியமிப்பதே கூட எனக்கு பெட்டர் சாய்ஸாகத்தான் தெரிகிறது. :)

  தெந்துல்கர் எனக்கும் பிடிக்கும்தான்...ஆனால் இது ஓவர் என்பது வெள்ளிடை மலை.
  ReplyDelete

  Replies

  1. சோவையும் தெண்டுல்கரையும் நான் ஒப்பிடவில்லை. சோவை நான் மேற்கோள் காட்டியது நியமன உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கவே. அதாவது தெண்டுல்கர் போய் என்ன பேசுவார் என்று சிலர் கேட்பதற்கான பதிலாக. பிறர் பேச அதிக நேரம். தெண்டுல்கரே ஆனாலும், நியமன உறுப்பினர் பேச மிகக் குறைவான நேரம்தான்.

   பின் இவர்கள் ஏன்தான் நியமிக்கப்படுகிறார்கள்? ஏதோ காரணத்தால் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், இது மிகவும் முக்கியம் என்று நினைத்துள்ளனர். இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அரசியல், பொருளாதார, சமூகக் கருத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை. கலை, இலக்கியம், இதழியல் போன்ற துறைகளில் விற்பன்னர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்துள்ளனர். அந்தவகையில், தெண்டுல்கரைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை. (விளையாட்டெல்லாம் ஒரு கலையா என்று கேட்டால் நான் அப்பீட்!)

   அடுத்து, காங்கிரஸ் இந்த நியமனத்தை ஏதோ ஒருவகையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டது என்பது பற்றி. அனைத்து அரசியல் கட்சிகளும் எல்லா நிகழ்வுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவையே. இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

   தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.

   இந்தத் தேர்வு எந்தவிதத்திலும் ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களும் கண்ணியமானவர்களே.

   மக்கள் சிலருக்கு காங்கிரஸ்மீதுள்ள வெறுப்புதான் அவர்களை இப்படிப் பேச வைத்துள்ளது. அதற்காக தெண்டுல்கரை ஏன் காய்வானேன்? வரும் தேர்தலில் காங்கிரஸின் சிண்டைப் பிடித்துத் தூக்கி எறிவோம்!
  2. ||தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.||

   பத்ரி,
   குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியம்; எப்படி இப்படி தமாஷ் பண்ணுகிறீர்கள் ?!
   :))
   Delete
  3. மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் குடியரசுத் தலைவர் இந்த உறுப்பினர்களை நியமிக்கிறார். அதனால் என்ன? அப்படித்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லொரும், காங்கிரஸ் நியமித்தது, அதனால் நான் வேலை செய்ய மாட்டேன் போ, என்றா சொல்கிறார்கள்? நீதிபதிகள், ஆளுநர்கள் போலத்தான் இந்த நியமனமும்.
  4. இதே காங்கிரஸ் கையால் பாரத ரத்னா கிடைத்தால் மட்டும் தெண்டுல்கர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கட்சியின்மீது வெறுப்பு, கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசுப் பிரதிநிதிகளாக நமக்கு எதைச் செய்தாலும்,அது நம்முடைய தகுதி கருதிச் செய்யப்பட்டது என்று கருத இடம் இருந்தால், அதனை நாம் ஏற்றுக்கொள்வதே முறை. தெண்டுல்கரை நான் பாராட்டுகிறேன்.
  5. நீங்கள் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்..
   நீதிபதிகள் விதயத்தில் அவர்கள் அமசி போன்றவர்களிடம் எதையும் கொடுத்து பதவி வாங்கத் துடித்தாலும் அடிப்படையில் வழக்கறிஞராகத் தம்மை நிலைநிறுத்தியவர்கள்.உங்களையும் என்னையும் அரசு பரிந்துரை செய்தால் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்க முடியுமா?அதற்கான குறைந்த பட்சத் திறன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

   இந்த நியமனத்தில் காங்கிரஸ் அரசியலுக்காக நியமித்தது தவறாகும் போது தெந்துல்கர் சுயநலத்திற்காக ஒப்புக்கொண்டது அதைவிடப் பெரிய தவறு.அதுதான் என் பார்வை.


   பாரத ரத்னா விதயம் வேறு.உன் வாழ்நாளெல்லாம் உன் திறனால் எங்களை மகிழ்வித்தாய்;உனக்கு ஒரு ஓ போடுகிறோம்;சந்தோஷமாக இருந்து விட்டுப் போ' என்னும் ஒன் டைம் அங்கீகாரம்..மக்களவை,மாநிலங்களவைப் பதவி என்பதும் முற்றிலும் வேறு.

   ஆளுனர்கள் நியமனம்-இதே அரசியல் காரணங்களுக்காக தகுதியற்றவர்கள் பெரும்பாலும் நியமிக்கப் படும் இன்னொரு பதவி.ஆனால் அவர்கள் பாலிசி மேட்டர்களில் எதுவும் முடிவெடுப்பதில்லை.அதிகபட்சம் மாநில அரசைக் கலைக்க அறிக்கை கொடுக்க கைநாட்டு வைப்பார்கள்..அல்லது திவாரி மாதிரி என்பது வயதில் மங்கையைத் தேடுவார்கள். அந்த வகை நியமனங்களும் எனக்கு ஒப்புதலற்றவையே..ஆனால் அதிகபட்சம் நம்மைப் போன்றவர்களால் எதிர்த்து எழுத மட்டுமே முடியும்.

   குறைந்த பட்சம் அதையாவது செய்ய வேண்டும் என்கிறேன் நான்;அதற்கு எதிர்ப்பதமாக அவ்வித நியமனங்களைப் பாராட்டலாம் என்பது உங்கள் பார்வை.

   நீங்கள் சாரு ஷர்மா கூறியதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   Let's agree to disagree.

  தேட...