Wednesday, April 2, 2008

தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - 1

தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - 1

நேர்கொண்ட பார்வையில் எழுதப்பட்டிருக்கும் நல்ல ஒரு பதிவு.

///////கர்நாடக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து தமிழக முதல்வராக இருப்பவர் ரியாக்ஷன் காட்டலாம். அங்கே உள்ள ஏதோ சில மொழிவெறி அமைப்பின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இவரை யார் பேசச் சொன்னார்கள்?

சென்னையில் ஒரு பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வருக்கு ஒகேனக்கல் பற்றிப் பேச என்ன அவசியம்? "எங்கள் பேருந்துகளை அல்ல; எங்கள் எலும்புகளையே நொறுக்கினாலும் அந்தத் திட்டம் நிறைவேறியே தீரும்” என்பதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா? அல்லது உங்கள் வார்த்தைகள் தான் உண்மையானவையா? பெங்களூரில் ஒரு வீட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கினாலோ தாங்க முடியாத நீங்கள் எலும்புகளைப் பற்றி எல்லாம் பேசலாமா? அப்படி வீரம் பேசுபவர் பெங்களூருவில் கூட்டம் கூட்டிப் பேசுவது தானே? சென்னையில் பாதுகாப்பான இடத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கே இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை ஒருசிறிதும் இன்றி இப்படிப் பேசினால் . . .?

வீரப்பன் பிடியில் இருந்து முக்கியஸ்தர்களை மீட்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்வில் எதிர்க்கட்சியினர் தூண்டி விட்டும் பொறுப்புடன் அமைதி காத்த கருணாநிதி, இத்தகைய தருணங்களில் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களின் கதியைப் பற்றி யோசிக்காமல் பேசியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.//////////

மு.க'வின் செயல்களை நெடுக கூர்ந்து கவனித்து வருபவர்கள் இதில் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள்.அவர் எதிலும் தனக்கும் தன் கட்சிக்கும் என்ன ஆதாயம் கிடைக்கும் எனப் பார்ப்பார்;இல்லையெனில் தலைக்கெறிய ஆணவத்தில் ஏதாவது பேசி வைப்பார்.
ஆதி நாட்களில் சட்ட சபையின் காங்கிரஸ் பெண் உறுப்பினரைப் பார்த்து,'பாவாடையைத் தூக்கிப் பார்த்தால் தெரியும்' என சட்டசபையில் பதில் சொன்ன மகான் அவர் !
ஒகேனக்கல் திட்டத்தைப் பொறுத்து, தன் மகன் முதன்முதலில் ஒரு வெளிநாட்டின் அரசியல்,ஆட்சி நிபுணர்களை சந்தித்து கொண்டுவந்த திட்டம் என்ற தற்பெருமையில் விளைந்த செருக்கும்,இன்னொரு பதிவர் கூறியபடி அதிமுக/பாஜக வுக்கு கத்தி வைக்கலாம் என்ற நோக்கமும் அவரின் பேச்சுக்குக் காரணிகளாக இருந்திருக்கலாம்.
வீரப்பனாரைப் பற்றிப் பேசாமல் இருக்கக் காரணம்,வீரப்பானார்,அவருக்கு வேண்டும் சமயங்களில், ஜெ'க்குக் குடைச்சல் கொடுக்கும் ஒரு காரணியாக உதவியதாலும்,ஆரம்ப நாட்களில் வீரப்பனாரின் அரசியல் பங்குதாரராக அதிமுக அமைச்சர் இருந்ததும்,அதனாலேயே வீரப்பனை உயிருடன் விட்டுவைக்கக் கூடாது என ஜெ.நினைத்ததும்,வீரப்பன் என்ற காரணி,தன் அரசியலுக்கு வேண்டும் என முக.நினைத்ததாலும் அவ்விதமான வேறு நிலைப்பாடுகளை எடுத்தார்.
சேதுக் கால்வாய் விவகாரத்திலும் அவரிம் மமதையான பேச்சே பல பிரச்னைகளுக்கு அடிகோலியது.

இவை ஒரு புறமிருக்க,ஆளுனர் ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தில் இவற்றை எப்படி மைய அரசு பொறுத்துக் கொண்டிருக்கிறது என்பதே கேள்விக்குரிய மிகப் பெரிய அவலம்.

இவற்றிற்கெல்லாம் காரணம் மாநிலத்துக்குள் வட்டாரம்,சாதி போன்ற காரணிகளை தங்கள் அரசியல் பிழைப்புக்காகவும் அடிவருடித்தனத்துக்காகவும் ஊக்குவிக்கும் மாநில அரசியல்வா(வியா)திகளே காரணம்.

வட்டாள் நாகராஜ் என்பவர் யார்,அரசமைப்பில் அவருக்கு என்ன அதிகாரமோ,தலைமைத்துவமோ இருக்கிறது?
ஒரு சரியான மைய அரசு சத்தமில்லாமல் இரு போன்ற ஆட்களை தூக்கி, ஒரு 20 வருடம்,30 வருடம் உள்ளே போட வேண்டும்.
இவர் போன்ற ஆட்கள்,வட்டார உணர்வுகளைத் தூண்டிவிடுவதின் மூலம் பெரிய ஆளாக முயல்பவர்கள்.


நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் தேசிய உடமையாக்கப் பட்டு மைய அரசின் கட்டுப்பாட்டில் இவை வருவதும்,எவ்வளவு செலவெனினும்,நதிகள் இணைப்பை ஆரம்பிப்பதும்தான் இவை போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வழிமுறைகள்..

No comments:

தேட...