Star Posting எழுத்தாளர் பாலகுமாரன்
பாகு'னின் இரும்புக் குதிரைகள் முதற்கொண்டு பல நாவல்களைப் ப் படித்திருக்கிறேன்.
பின்னூட்டத்தில் பலர் புகழ்ந்திருக்கும் அளவுக்கு அவருக்கு ஒரு வெளிச்சவட்ட பிம்பம் தேவையில்லை என்பதே என் கருத்து.
அவரின் நாவல்கள் பலவும் சிறிதாகக் காமம் கலந்து,இளைஞர்களும் யுவதிகளும் scintillate ஆகும் வகையிலான ஒரு கவர்ச்சி எழுத்தே.
வெகுஜன ஊடகங்களில் அவ்வகையான எழுத்து வடிவம் பரவலாக இல்லாத நேரத்தில் இம்மாதிரி எழுதியதோடு,பெண்களின் சார்பையும் கைக்கொண்டதால் சுலபமான ஒரு வாசகர் வட்டம் கிடைத்தது.
இதை தனக்கான விளம்பரத்தை அதிகரித்துக் கொள்ளவே பெரிதும் உபயோகித்தார்,வைரமுத்து தனக்குத்தானே கவியரசு பட்டம் வழங்கிக் கொண்டது போல. மேலும் பிற்காலத்தில் சித்தர் வேடம் தாங்கவும் ஆரம்பித்து விட்டார்.
ரவூஸு தாங்கலடா சாமி !!!!!!
ஒரு காலகட்டத்தில் அவரின் பல நாவல்களும் ஒரே விதமான கதையையே சொன்னன..
விதிவிலக்காக அமைந்த 'பலாமரம்' போன்ற ஒரு சில நாவல்களுக்கு மட்டுமே அவர் பெருமிதப்படலாம்.
ஆனால் இவை போன்ற முயற்சிகள் வெகு சிலவே.
பிற்காலத்தில் இவ்வகையான பெரும் வாசகர் கூட்டத்தை சிறிது ஆன்மீகம் சார்ந்த விதயங்களில் திருப்பி விட்டதுதான் அவர் வாசக உலகத்துக்கு செய்திருக்கும் பெரும் உதவி.
இது தவிர ஒரு ராஜேஷ்குமார்,ஒரு பட்டுக்கோட்டை பிரபாகர் வரிசையில் தான்,சிறிதே-மிகச்சிறிதேயான-மேல்மட்டத்திற்கு வருகிறார்.
இதில் கல்கியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதையாக 'உடையார்' நாவல்....
'கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி...' என்றொரு பாடல்,அதுதான் நினைவுக்கு வருகிறது.
ஓரளவு எழுதி இருக்கிறார்,ஆனால் அதற்கு அவர் தேடும் வெளிச்சப் புகழ் அளவற்றதும்,அநியாயமானதும் !!!!!
1 comment:
27741.....48355
Post a Comment