சுஜாதா மீது ஏன் இந்த கோபம்????
உலகில் எந்த மனிதனும் முழுக்க 100 சதம் முழுமையானவர்களில்லை,இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.எழுத்தாளர்களில் பொதுவாக இருவகை உண்டு,தங்கள் வாழ்க்கை,சூழல் சார்ந்த எழுத்திகளால் பெயர் அடைந்தவர்கள்,அவர்களால் வேறு பாணியில் எழுதவே முடியாது.(எ-டு)கி.ரா.மற்று சிலர் புரியாத மொழியில் பின்,புண் நவீனத்துவங்கள் எழுதி மண்டையை உடைக்கும் ஒரு வகை.இரண்டிலும் சாராத அவரவர் பாணிக்குள்ளேயே எழுதும் லாசரா போன்றோரும் உண்டு.ஆனால் அறிவியல்,பொழுதுபோக்கு,சிறுகதை,நாவல்,கட்டுரை,விஞ்ஞானம்,இணையம்,இலக்கியம்,திரைஉலகம் என கை வைத்த எல்லாத்துறையிலும் முத்திரை பதித்த எழுத்தாளர் எவரும் உண்டா?மற்றபடி பெண்ணையும்,காமத்தையும் பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் அனைவருமே எழுதியிருக்கிறார்கள்.இன்று இணையப் பதிவுகளில் எழுதுபவரில் 100 க்கு 90 பேரிடம் சுஜாதாவின் எழுத்தின் படிமமோ,பாதிப்போ இல்லாதிருக்காது.இதை நேர்மையுடன் ஒத்துக்கொள்ள அவர் பிறந்தகுலம் பலரின் மனதில் நெளிந்து தடுக்கிறது.இப்படி எழுதுவதால் என்னை பிராமண விசுவாசி என் முத்திரை குத்த பல நண்பர்கள் துடிப்புடன் வருவார்கள் என அறிந்தே இதை எழுதுகிறேன்.
1 comment:
u r 100% correct.
அவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பதால்தான் இப்படி இத்தனை குற்றச்சாட்டுகள் வருகின்றன. மற்றபடி அவர் வேறு வகுப்பைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் குற்றச்சாட்டுகளுக்கு வழியே இருந்திருக்காது.
Post a Comment