Monday, December 10, 2007

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்
ஞானி அவ்வாறு எப்படி எழுதப் போகும்,அவர் பார்பனராக இருப்பதால் எழுதுகிறார்,அதை விகடன் எப்படி வெளியிடப் போகும் என்றெல்லாம்(விதண்ட)வாதம் செய்யும் அன்பர்களுக்கு,
மு.க.அவர்கள் எவ்வளவு பெரியவரானாலும்,எவ்வளவு சிறந்தவரானாலும்(இதற்கான கருத்துக்களுக்குள் நான் நுழையவில்லை,அதில் என் தீர்மானங்கள் எப்படியிருப்பினும்) ஒரு மாநிலத்தின் மக்களுக்கு தங்கள் முதல்வர் எப்படி இருக்கிறார்,எவ்விதம் செயல்படுகிறார்,அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது,அவரின் பணிச்சுமைக்கு ஒத்துழைக்கும் ஆரோக்கியம் அவருக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் விமர்சிக்கவும்,அத்தகைய விமர்சனங்களை சந்திக்கவும் உரிமைக்கும்,கடமைக்கும் உள்ளானவர்கள்.
தமிழக அரசு ஒன்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனம் அல்ல;இவற்றை விமர்சனம் செய்ததாலேயே'நல்லவேளை,விகடன் அலுவலகம் மதுரையில் இல்லை' என்றெல்லாம் தெரிவிக்கும் கருத்துக்கள்,நாம் வாழும் சமூக,அரசியல் சூழலையே கேள்விக்குறிக்குள்ளாக்குவதோடு,அரசாண்மை(Governance) பற்றிய நம் மக்களின்,படித்த மக்களின் முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நாளை திமுக பதவியில் இல்லாத நிலை வரும்போது,முக அவர்கள் இதே நிலையில் முரசொலி அலுவலகத்துக்கோ,கலைஞர் டிவி அலுவலகத்துக்கோ தினமும் சென்று 10 மணி நேரம் உழைத்தால்,அதைப் பற்றி ஞானி கண்டிப்பாக எழுதமாட்டார்,அப்போது எழுதினால் இந்த வன்மையான கண்டனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையும்,புரிந்துகொள்ளப்பட வேண்டியவையும் !
It's about the healthy practices across the globe,on how a head of state should be,should function etc..
நம் மக்கள்(ஓரளவு படித்தவர்கள் கூட) இவ்வளவு அடிமை மனோபாவ கட்சிஅரசியலில் மூழ்கி இருப்பதுதான் நாட்டின் சாபக்கேடு !

No comments:

தேட...