Monday, December 10, 2007

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

பலூன் மாமா நையாண்டியாகச் சில சொற்கள் சொன்னாலும் சில உண்மைகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.சைவ ஆகமங்களுக்கும்,வைதீக முறைகளுக்கும் என்ன வேறுபாடு என்பது புரியவில்லை எனச் சொல்லியிருக்கிறீர்கள்(விநோதம்,நீங்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால்!).சைவ ஆகமங்கள் திருமுறைகள்-முக்கியமாகத் திருமந்திரம்,அதனைத் தொடர்ந்த சித்தாந்த ஆகமங்கள்-அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்தவை-ஆகியவை.திருமந்திரம் மொத்தம் 8000 பாடல்களால் பாடப்பெற்றது என்பதும்,திருமூலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்(திரூமூலர் வடிவில் இறைவனே வந்ததாகவும் சொல்வோர் உண்டு)யோகத்தின் மூலம் உலகில்,திருவாவடுதுறையில் வாழ்ந்ததாகவும் செய்து உண்டு.வைதீக முறைகளுக்கான ஆவணங்கள் வேதங்கள் என சொல்லப்படுகின்ற-ரிக்,சாம,யஜுர்,அதர்வண நூல்கள்,மற்றும் உபநிஷதங்கள் என சொல்லப்படுகின்ற நூல்கள்.பொதுவாகக் கேட்டால் ரிக்,யஜுர்,சாம,அதர்வண நூல்களின் சாரம் உபநிஷத்துகளில் உள்ளது என பிராமணர்கள் கூறுவார்கள்;ஆனால் ரிக்,யஜுர்,சாம,அதர்வண நூல்களில் சமயக் கருத்துக்கள் எதுவும் இல்லை எனவும்,அவை வெறும் விதிகள் பற்றிய விவரணங்கள் எனவும்(எவ்வாறு யாகங்கள் புரிவது,அவற்றில் என்ன,என்ன பலியிடப்பட வேண்டும்,போர்க்கலையின் விவரங்கள்,வித விதமான ஆயுதங்கள் பற்றிய விவரணங்கள்),உபநிஷத்துக்கள் உண்மையில் சைவ ஆகமங்களை மொழிமாற்றம் செய்தும் திரித்தும் வடமொழியில்-சமஸ்கிருதத்தில்-எழுதப்பட்டவை என்றும்,அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்பு சைவ ஆகமங்கள்,திருமுறைப் பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் நடராசர் கோவிலில் வைத்து தீட்சிதர்களின் முன்னோர்களால் மறைக்கப்பட்டன,அழிக்கப்பட்டன(திருமந்திரத்தில் இன்று கிடைத்திருக்கும் பாடல்கள் 3000 மட்டுமே)எனவும் ஒரு பார்வை உண்டு.இன்றளவும் திருமுறைகள் நடராசர் கோவிலில்-தமிழகத்தில் இருக்கின்ற ஒரு தமிழ் கோவிலில்,தமிழ் மறைகளான திருமுறைகள் கேட்கக்கூடாது-என்ற விநோதக் கோட்பாட்டை தீட்சிதர்கள் முன்னிருத்துகின்றனர்.பலூன் மாமா சொல்வது போல வரலாறு திரிபடக்கூடாது எனவே இத்தனையும் எழுதினேன்.

No comments:

தேட...