Wednesday, December 12, 2007

இயற்பியலில் உண்மையும் அழகும்

இயற்பியலில் உண்மையும் அழகும்

I have visited occationally ted.com ,following a note from writer sujatha in one of his columns in katrathum petrathum.Being a science graduate,especially physics, I think you guys enjoy this verymuch.I am a maths graduate & a chartered accountant by profession & qualification,but on hearing Murray,I do appreciate that Scientific inventions & new breakthroughs have lot of symmetry and similarity between one theory & other.I think it follows in any branch of knowledge based explanation that the explainer’s lucidity in explaining things are also based on this understanding.As he finishes,to explain something more,we need not need something more !

Tuesday, December 11, 2007

கோவில் ஒன்று சந்தேகங்கள் இரண்டு

கோவில் ஒன்று சந்தேகங்கள் இரண்டு
மற்ற உங்கள் செய்திகள் சுவாரசியமாய் இருந்தாலும்,இம்மையில் நன்மை தருவார் கோவில் என் கண்களில் சிக்காமல் போனது வியப்பு,இத்தனைக்கும் முருகன் இட்லிக்கடையில் பலமுறை வெளுத்து வாங்கியிருக்கிறேன்;என் மனைவி(அவளின்)அம்மா வீடே சுகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்,அவளை ஒருமுறை இக்கோவிலுக்கு அழைத்துப் போகிறேன்,உங்கள் trick பலிக்கிறதாவெனப் பார்க்கலாம்...
Jokes Apart,சங்கப் பாடல்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் இறையனார் என்ற பெயர் பலமுறை வருகிறது,எல்லாமே இறைவனதாக இருக்க சாத்தியமில்லை-ஔவையார் போல-எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட இறையனார்கள் இருந்திருப்பார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது,கொங்குதேர் வாழ்க்கை-இறைவனாலேயே பாடப்பட்டது என் எண்ணினாலும் கூட !

Monday, December 10, 2007

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்
ஞானி அவ்வாறு எப்படி எழுதப் போகும்,அவர் பார்பனராக இருப்பதால் எழுதுகிறார்,அதை விகடன் எப்படி வெளியிடப் போகும் என்றெல்லாம்(விதண்ட)வாதம் செய்யும் அன்பர்களுக்கு,
மு.க.அவர்கள் எவ்வளவு பெரியவரானாலும்,எவ்வளவு சிறந்தவரானாலும்(இதற்கான கருத்துக்களுக்குள் நான் நுழையவில்லை,அதில் என் தீர்மானங்கள் எப்படியிருப்பினும்) ஒரு மாநிலத்தின் மக்களுக்கு தங்கள் முதல்வர் எப்படி இருக்கிறார்,எவ்விதம் செயல்படுகிறார்,அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது,அவரின் பணிச்சுமைக்கு ஒத்துழைக்கும் ஆரோக்கியம் அவருக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் விமர்சிக்கவும்,அத்தகைய விமர்சனங்களை சந்திக்கவும் உரிமைக்கும்,கடமைக்கும் உள்ளானவர்கள்.
தமிழக அரசு ஒன்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனம் அல்ல;இவற்றை விமர்சனம் செய்ததாலேயே'நல்லவேளை,விகடன் அலுவலகம் மதுரையில் இல்லை' என்றெல்லாம் தெரிவிக்கும் கருத்துக்கள்,நாம் வாழும் சமூக,அரசியல் சூழலையே கேள்விக்குறிக்குள்ளாக்குவதோடு,அரசாண்மை(Governance) பற்றிய நம் மக்களின்,படித்த மக்களின் முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நாளை திமுக பதவியில் இல்லாத நிலை வரும்போது,முக அவர்கள் இதே நிலையில் முரசொலி அலுவலகத்துக்கோ,கலைஞர் டிவி அலுவலகத்துக்கோ தினமும் சென்று 10 மணி நேரம் உழைத்தால்,அதைப் பற்றி ஞானி கண்டிப்பாக எழுதமாட்டார்,அப்போது எழுதினால் இந்த வன்மையான கண்டனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையும்,புரிந்துகொள்ளப்பட வேண்டியவையும் !
It's about the healthy practices across the globe,on how a head of state should be,should function etc..
நம் மக்கள்(ஓரளவு படித்தவர்கள் கூட) இவ்வளவு அடிமை மனோபாவ கட்சிஅரசியலில் மூழ்கி இருப்பதுதான் நாட்டின் சாபக்கேடு !

காந்திஜி & கஸ்தூரி பா

காந்திஜி & கஸ்தூரி பா
காந்தி என்ற தனிமனிதர் மஹாத்மா ஆவதற்கு முற்றிலும் தகுதியானவரே;ஆயினும் காந்தி என்ற ஒரு அரசியல்/தேச சுதந்திரப் போர் தலைவர் சரியான வழியில் செயலாற்றியிருக்கிறாரா என்பது மிகவும் விவாதத்துக்குரிய விதயமே.ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார்,ஏன் நிறுத்தினார் போன்றவை அரசியல் தலைவராக அவர் ஒரு குழப்பவாதியாக இருந்தாரோ என்ற சந்தேகம் பலருக்கும்(எனக்கும்) உண்டு...ஆயினும் ஒரு நாடறிந்த மனிதர்,தலைவர் எவ்விதம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கு சத்தியசோதனை ஒரு சிறந்த உரைகல்.

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

பலூன் மாமா நையாண்டியாகச் சில சொற்கள் சொன்னாலும் சில உண்மைகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.சைவ ஆகமங்களுக்கும்,வைதீக முறைகளுக்கும் என்ன வேறுபாடு என்பது புரியவில்லை எனச் சொல்லியிருக்கிறீர்கள்(விநோதம்,நீங்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால்!).சைவ ஆகமங்கள் திருமுறைகள்-முக்கியமாகத் திருமந்திரம்,அதனைத் தொடர்ந்த சித்தாந்த ஆகமங்கள்-அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்தவை-ஆகியவை.திருமந்திரம் மொத்தம் 8000 பாடல்களால் பாடப்பெற்றது என்பதும்,திருமூலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்(திரூமூலர் வடிவில் இறைவனே வந்ததாகவும் சொல்வோர் உண்டு)யோகத்தின் மூலம் உலகில்,திருவாவடுதுறையில் வாழ்ந்ததாகவும் செய்து உண்டு.வைதீக முறைகளுக்கான ஆவணங்கள் வேதங்கள் என சொல்லப்படுகின்ற-ரிக்,சாம,யஜுர்,அதர்வண நூல்கள்,மற்றும் உபநிஷதங்கள் என சொல்லப்படுகின்ற நூல்கள்.பொதுவாகக் கேட்டால் ரிக்,யஜுர்,சாம,அதர்வண நூல்களின் சாரம் உபநிஷத்துகளில் உள்ளது என பிராமணர்கள் கூறுவார்கள்;ஆனால் ரிக்,யஜுர்,சாம,அதர்வண நூல்களில் சமயக் கருத்துக்கள் எதுவும் இல்லை எனவும்,அவை வெறும் விதிகள் பற்றிய விவரணங்கள் எனவும்(எவ்வாறு யாகங்கள் புரிவது,அவற்றில் என்ன,என்ன பலியிடப்பட வேண்டும்,போர்க்கலையின் விவரங்கள்,வித விதமான ஆயுதங்கள் பற்றிய விவரணங்கள்),உபநிஷத்துக்கள் உண்மையில் சைவ ஆகமங்களை மொழிமாற்றம் செய்தும் திரித்தும் வடமொழியில்-சமஸ்கிருதத்தில்-எழுதப்பட்டவை என்றும்,அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்பு சைவ ஆகமங்கள்,திருமுறைப் பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் நடராசர் கோவிலில் வைத்து தீட்சிதர்களின் முன்னோர்களால் மறைக்கப்பட்டன,அழிக்கப்பட்டன(திருமந்திரத்தில் இன்று கிடைத்திருக்கும் பாடல்கள் 3000 மட்டுமே)எனவும் ஒரு பார்வை உண்டு.இன்றளவும் திருமுறைகள் நடராசர் கோவிலில்-தமிழகத்தில் இருக்கின்ற ஒரு தமிழ் கோவிலில்,தமிழ் மறைகளான திருமுறைகள் கேட்கக்கூடாது-என்ற விநோதக் கோட்பாட்டை தீட்சிதர்கள் முன்னிருத்துகின்றனர்.பலூன் மாமா சொல்வது போல வரலாறு திரிபடக்கூடாது எனவே இத்தனையும் எழுதினேன்.

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

தில்லை கோவில் தீட்சிதர்களின் பொறுப்பிற்கு வந்ததற்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.சிதம்பரம் கோவிலும் சைவ ஆகம முறைப்படிதான் எல்லாம் நடந்தன;தீட்சிதர்கள் கோவிலில் நுழைந்தது சுந்தர சோழனுக்குப் பின் வந்த உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் தான் என்றும்;உத்தம சோழனுக்கு(ராஜராஜனையும்,ஆதித்தனையும் மீறி) ஆட்சிப்பொறுப்பு கிடைக்க அவனே வீரபாண்டியனின் ஆட்களுடன் கூட்டுச் சதி செய்ததாகவும்;ஆகையினாலேயே ஆதித்தன் சதியால் கொல்லப்பட்டதாகவும்;எதிரிகளில் சதியும் அரசியல் பலமும் அறிந்த ராஜராஜன் வீரநாராயணபுரத்தில் சுமார் 12 ஆண்டுகள் விலகி வாழ்ந்ததாகவும்;உத்தம சோழ்னுக்கு உதவ வந்த பாண்டியனின் சதிகாரர்களில் சேரத்தைச்(இப்போதைய கேரளம்) சேர்ந்த கொடும்போர் செய்யும் சேர ஆரியர்கள் வந்து சோழ நாட்டின் முக்கியப் பதவிகள் கேந்திரங்களில் அமர்ந்ததாகவும்;அக்கால கட்டத்திலேயே சிதம்பரம் கோவில் முழுமையாக சேர ஆரியர்கள்-தீட்சிதர்கள் பொறுப்புக்குப் போனதாகவும்,அவ்ர்களே தீட்சிதரின் முன்னோடிகள் என்றும்;அவர்கள் முழுமையாக சைவ ஆகமங்களையும் திருமுறைகளையும் அழிக்கமுயன்ற பொழுதில் ராஜராஜன் நம்பியாண்டார் நம்பி துணையோடு குறுக்கிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்த திருமுறைகளை வெளிப்படுதியதாகவும்;இன்றளவும் நடராஜர் கோவிலில் திருமுறைப் பாராயணம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கொலை,வழக்குமன்றம் வரைக்கும் சென்றுள்ளதும்;இன்னொரு கோணத்திலான வரலாற்றுச் செய்திகள்.
தங்களது பல குறிப்புகள் தவறான தகவல்களைத் தரக் கூடிய ஆபத்து இருக்கிறது;எனவே தகவல்களை உறுதி செய்து எழுதுங்கள்.

Friday, December 7, 2007

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

எனக்கும் பாலாஜிக்கு எழும் சந்தேகங்கள் எழுவதுண்டு.
1.உண்மையில் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புலிகள்தான் குரல் கொடுக்கிறார்களா?
2.புலிகள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் ஒன்று உருவாவதை எது தடுக்கிறது?
3.இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான,தன் குடிகளையே தன் ராணுவத்தைக் கொண்டு தாக்கும் வெறிச் செயலை தடுக்கவாவது,புலிகள் சிறிது காலம் அமைதி காத்து,அரசியல் தீர்வுக்கான பாதையை முன்னெடுத்துச் செல்வதை எது/என்ன/யார் தடுக்கிறார்கள்?
4.புலிகளை ஒடுக்குகிறேன் பேர்வழி என இலங்கை அரசு செய்யும் செயல்களை ஏன் அனைத்து நாடுகளும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருகின்றன??
கேள்விகள்,கேள்விகள் என அவைதான் மிஞ்சும் போலிருக்கிறது கடைசியில் !

தேட...