Sunday, January 6, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

அசத்தலான பதிவு...
Well said..


////////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!

வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு/////////

இதற்கு சமுதாய,திராவிட/ஆரிய வேறுபாடுகள் போன்ற பன்முகப்பட்ட காரணங்கள் இருந்தன,ஆசாரியர்கள் இல்லாத்தது மட்டுமே குறையல்ல..

எடுத்துக்காட்டாக இறைவனை அர்ச்சிக்க,அவனோடு சம்பாஷிக்க தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..
இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..


///////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!//////////

சொல்லப்போனால் திருமுறைகள் தான் முதலில் பாடப்படவேண்டும் !!!!
அவை நிகழ்த்திக் காட்டிய வரலாற்று அற்புதங்கள் அநேகம்...


///////இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு! நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites
2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153; 2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)////////

இதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.
எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் ஆலயத்துக்குரிய நிலம் சுமார் 40 ஏக்கர் பல திராவிட அரசியல் அடிவருடிகளின் பொறுப்பில் 99 வருடக் குத்தகையில் இருக்கிறது..குத்தகைப் பணம் எவ்வளவு தெரியுமா? நம்ப மாட்டீர்கள்,ஆண்டுக்கு ரூ.870 மட்டும்,அதுவும் பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை !!!!
இதற்குள் கோவில் நிலங்களை அனுபவப் பாத்தியத்தில் பட்டா வாங்கி தங்கள் சொந்த நிலமாக மாற்றி விட்டார்கள் !!!!!
எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...
திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை !!!!!!!!!1

*******************************************************************

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அறிவன் /#11802717200764379909/ said...
அசத்தலான பதிவு...
Well said..///

நன்றி அறிவன்.

//தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..
இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..//

இதே பிரச்சனைகள் வைணவத்துக்கும் இருந்துச்சு அறிவன்.
ஆழ்வார்களும் தமிழில் பாடிவிட்டுப் போய் விட்டார்களே ஓழிய, அதை அவ்வளவு சுலபமா ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை! திருமங்கை, மதுரகவி - இவங்க ரெண்டு பேர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

பின்னால் வந்த ஆசாரியர்கள் தான் இதை ஒரு பிராஜக்ட் போல் எடுத்து, பல எதிர்ப்புகளையும் மீறிச் செயலாக்கிக் காட்டினார்கள். இராமானுசரைக் கொல்ல பிட்சை உணவில் விஷம் கலந்த கதை எல்லாம் நடந்துள்ளது. அதை எல்லாம் மீறித் தான் தமிழ் வைணவ ஆலயங்களில் கோலோச்சுகிறது.

சைவத்துக்கு இப்படி project management செய்யக்கூடிய ஆசாரியர்கள் கிடைக்காதது தான் துரதிருஷ்டம்! இராசராசன் பாவம் ஏதோ செய்து பார்த்தான்! ஆனால் இதை அரசாணை மட்டுமே கொண்டு சாதித்து விட முடியாது என்பதற்குச் சிதம்பரம் தான் உதாரணம்!

அரசாணையும் கடந்து, மாற்றங்கள் உள்ளிருந்து வந்தால் மட்டுமே நிலைக்கும்! உதாரணம்: வைணவ ஆலயங்களில் தமிழ்!

//http://www.hrce.tn.nic.in/)////////
இதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.//

கணக்குல காட்டறதே இவ்ளோன்னா, கணக்குல வராதது எவ்ளோ இருக்கும்? :-)

//எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் //

ஆகா! தங்கள் தாயாரின் துணிவே துணிவு! வணங்குகிறேன்.
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

//எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...//

இதுக்கு எல்லாம் அமைப்பு சார்ந்த போராட்டங்கள் தான் செய்யணும். கடன் அட்டை பாக்கியை வசூலிக்க வங்கிகளே கண்ட பேரை அனுப்புகின்றன. கோயில் நில பாக்கியை எல்லாம் கொஞ்சம் மூளையை உபயோகிச்சா வசூல் செய்திடலாம். தன்னாட்சி நிறுவனம் இதை ஈசியா செய்ய முடியும்!

//திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை !!!!!!!!!//

ஹூம்...அவர்கள் மட்டும் தானா?
பக்திமான்களும் தான் செய்யறாங்க! கோயில் வாடகை கொடுக்க மாட்டாங்க! ஆனா நெத்தி நிறைய பட்டை போட்டுக்கிட்டு தினமும் காலையில் சேவிக்க மட்டும் வருவாங்க! :-)

**************************************************************

No comments:

தேட...