Tuesday, May 15, 2012

நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


இரோட்டிக் புத்தகங்களுக்கும் காமம் பற்றிய தெளிதலுக்காக உள்ள புத்தகங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.

ட்ரிபிள் எக்ஸ் வலைப் பக்கங்களில் இருப்பது போன்ற குமட்ட வைக்கும் புத்தகங்கள் அச்சில் வரவோ அல்லது நூல்நிலையத்தில் வைக்கப்படவோ வாய்ப்பில்லை.

ஷாலினி,காமராஜ் போன்ற மருத்துவர்கள் எழுதிய கேள்வி பதில் புத்தகங்களைப் படித்தால் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம் காமம் பற்றிய எந்த அளவிற்கு அரைகுறைப் புரிதல்களுடன் இருக்கிறார்கள் என்பது புரியலாம்.

அந்த வகையில் அத்துறை அறிவுக்கான புத்தகங்கள்-மாஸ்டர்ஸ் அன்ட் ஜான்சன்ஸ், வாத்சாயனரின் காம சூத்திரம் போன்றவை- தேவை என்றே நான் நினைக்கிறேன்.அவற்றைத் தேடுவோர்க்கு அவை கிடைக்க வாய்ப்பிருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் படிக்க வாத்சாயனரின் காமசூத்திரம் கிடைக்கும் போது, தெருவில் விற்கப்படும் சரோஜாதேவி போன்ற புத்தகங்கள் ஒழிவதோடு,காமம் பற்றிய சரியான அறிவு கிடைத்த சமூகமாக சமூகம் மாறும்.

அவற்றை ரெஃபரன்ஸ் பிரிவுக்கோ அல்லது வயது வந்தவர்கள் மட்டுமோ எடுக்கலாம் என்று விதிகளை அமைக்கலாம்.முழுக்கவே இருக்கக் கூடாது என்பது சரியான பார்வை அல்ல.

மற்றபடி பாலியல் கல்வி, காமம் பற்றிய அறிவு என்ற பொருள்களில் எனது பதிவுகள் எனது நிலைப்பாடைத் தெளிவாக்கும் என்று நினைக்கிறேன்

Monday, April 30, 2012

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?


காந்தியைப் புனிதராகவோ மனிதரோகவோ காட்டுகிறதோ இல்லையோ இம்மாதிரிக் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் ஒளிவட்டம் என்றே தோன்றுகிறது..
:)
எதிலும் நேர்படப் பேசும் பத்ரி இதில் வீழ்ந்தது வருந்தத் தக்கது.
காந்தி ஒரு தனிமனிதராக மிக உயர்ந்தவராகத்தான் இருந்தார்;வாழ்ந்தார்..
எந்தத் தனிமனிதனுக்கும் தன் தவறுகளை உணரவோ பொதுவில் வைத்து மன்னிப்பு வேண்டவோ முடியும் அளவுக்கு இலகுவானதும் மேன்மையானதுமான மனம் இருந்ததில்லை;எந்தத் தனிமனிதனுக்கும் பரந்து பட்ட தனது மக்களுக்காக அவர்கள் நலனை முன்வைத்துப் பல சோதனை முறைப் போராட்டங்களை முன்னெடுக்கத் தோன்றியதில்லை..
அவரது குறைபாடு அவரது போராட்டமுறை தவிர மற்ற முறைகளின் புனிதம் பற்றியும் நோக்கம் பற்றியும் அவருக்கு இருந்த உள்ளார்ந்த கேள்வி எழுப்புதலும்,நம்பிக்கையின்மையும் அவர்களை முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு-இது அவர்களின் வாழ்வை முடிக்கும் என்ற நிலையிலும்-அவரை செலுத்தியது என்பதும்தான்..இதிலும் தோற்றதாகத் தோன்றுவது காந்தி என்ற தேசத்தலைவர்தான்..
ஒரு தனிமனிதராக அவர் தன்னைச் சுத்தி செய்து கொண்டேயிருந்தார் என்பதும் மகாமனிதனாக மாறும் தொடர்செயல்பாடே வாழ்வு என்ற நினைவிலும் வாழ்ந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்


மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்


பத்ரி,
தெந்துல்கர் ஏன் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதை விளக்கும் எதிர்மறைச் சான்றுகளைத் தரும் வாதங்களாலேயே இந்தப் பதிவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதாவது சுருக்கமாக சால்ஜாப்பு சொல்வது என்று சொல்வார்களே அதைப்போல...

தெந்துல்கர் கிரிக்கெட் பற்றிய சர்ச்சைக்குரிய விதயங்களில் கூட தனது கருத்தைத் தெளிவுறப் பல சமயங்களில் தெரிவித்ததில்லை;இந்நிலையில் மாநிலங்களைவையில் நாட்டின் பல முக்கியப் பிரச்னை தொடர்பான விதயங்களில் அவருக்குக் கருத்து இருக்கிறதா என்பதே தெரியாத நிலையில் அவர் என்ன பொது நன்மைக்கு என்ன சாதித்து விட்டார் என்பதற்கு இந்தப் பதவி?

இது காங்கிரஸ் கட்சியின் துஷ்பிரயோகம் என்றும்,தெந்துல்கர் நேர்மையாக இதை மறுத்திருக்க வேண்டும் என்பதும்தான நியாயமானது..

தவிர சோவின் நியமனத்தையும் தெந்துல்கரின் நியமனத்தையும் ஒப்பிடுவது குழந்தைத் தனமானது;சோ 50 களில் இருந்து நாட்டின் எல்லா முக்கியப் பிரச்னைகளையும் ஒட்டியோ வெட்டியோ அலசும் திறமையும் ஆலோசனை சொல்லும் தகுதியும் படைத்தவர்..
உங்களை எடுத்துக் கொண்டால் கூட முனுசாமி முனிசிபாலிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட,சரியோ தவறோ அதைப் பற்றிய ஒட்டியோ வெட்டியோ ஒரு கருத்தைத் தெரிவித்து அதை டிஃபென்ட் செய்யும் திறன் பெற்றும் அதை கம்யூனிகேட் செய்யவும் செய்கிறீர்கள்..
தெந்துல்கர் நியமனத்திற்குப் பதில் உங்களை நியமிப்பதே கூட எனக்கு பெட்டர் சாய்ஸாகத்தான் தெரிகிறது. :)

தெந்துல்கர் எனக்கும் பிடிக்கும்தான்...ஆனால் இது ஓவர் என்பது வெள்ளிடை மலை.
ReplyDelete

Replies

  1. சோவையும் தெண்டுல்கரையும் நான் ஒப்பிடவில்லை. சோவை நான் மேற்கோள் காட்டியது நியமன உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கவே. அதாவது தெண்டுல்கர் போய் என்ன பேசுவார் என்று சிலர் கேட்பதற்கான பதிலாக. பிறர் பேச அதிக நேரம். தெண்டுல்கரே ஆனாலும், நியமன உறுப்பினர் பேச மிகக் குறைவான நேரம்தான்.

    பின் இவர்கள் ஏன்தான் நியமிக்கப்படுகிறார்கள்? ஏதோ காரணத்தால் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், இது மிகவும் முக்கியம் என்று நினைத்துள்ளனர். இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அரசியல், பொருளாதார, சமூகக் கருத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை. கலை, இலக்கியம், இதழியல் போன்ற துறைகளில் விற்பன்னர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்துள்ளனர். அந்தவகையில், தெண்டுல்கரைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை. (விளையாட்டெல்லாம் ஒரு கலையா என்று கேட்டால் நான் அப்பீட்!)

    அடுத்து, காங்கிரஸ் இந்த நியமனத்தை ஏதோ ஒருவகையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டது என்பது பற்றி. அனைத்து அரசியல் கட்சிகளும் எல்லா நிகழ்வுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவையே. இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.

    இந்தத் தேர்வு எந்தவிதத்திலும் ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களும் கண்ணியமானவர்களே.

    மக்கள் சிலருக்கு காங்கிரஸ்மீதுள்ள வெறுப்புதான் அவர்களை இப்படிப் பேச வைத்துள்ளது. அதற்காக தெண்டுல்கரை ஏன் காய்வானேன்? வரும் தேர்தலில் காங்கிரஸின் சிண்டைப் பிடித்துத் தூக்கி எறிவோம்!
  2. ||தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.||

    பத்ரி,
    குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியம்; எப்படி இப்படி தமாஷ் பண்ணுகிறீர்கள் ?!
    :))
    Delete
  3. மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் குடியரசுத் தலைவர் இந்த உறுப்பினர்களை நியமிக்கிறார். அதனால் என்ன? அப்படித்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லொரும், காங்கிரஸ் நியமித்தது, அதனால் நான் வேலை செய்ய மாட்டேன் போ, என்றா சொல்கிறார்கள்? நீதிபதிகள், ஆளுநர்கள் போலத்தான் இந்த நியமனமும்.
  4. இதே காங்கிரஸ் கையால் பாரத ரத்னா கிடைத்தால் மட்டும் தெண்டுல்கர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கட்சியின்மீது வெறுப்பு, கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசுப் பிரதிநிதிகளாக நமக்கு எதைச் செய்தாலும்,அது நம்முடைய தகுதி கருதிச் செய்யப்பட்டது என்று கருத இடம் இருந்தால், அதனை நாம் ஏற்றுக்கொள்வதே முறை. தெண்டுல்கரை நான் பாராட்டுகிறேன்.
  5. நீங்கள் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்..
    நீதிபதிகள் விதயத்தில் அவர்கள் அமசி போன்றவர்களிடம் எதையும் கொடுத்து பதவி வாங்கத் துடித்தாலும் அடிப்படையில் வழக்கறிஞராகத் தம்மை நிலைநிறுத்தியவர்கள்.உங்களையும் என்னையும் அரசு பரிந்துரை செய்தால் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்க முடியுமா?அதற்கான குறைந்த பட்சத் திறன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

    இந்த நியமனத்தில் காங்கிரஸ் அரசியலுக்காக நியமித்தது தவறாகும் போது தெந்துல்கர் சுயநலத்திற்காக ஒப்புக்கொண்டது அதைவிடப் பெரிய தவறு.அதுதான் என் பார்வை.


    பாரத ரத்னா விதயம் வேறு.உன் வாழ்நாளெல்லாம் உன் திறனால் எங்களை மகிழ்வித்தாய்;உனக்கு ஒரு ஓ போடுகிறோம்;சந்தோஷமாக இருந்து விட்டுப் போ' என்னும் ஒன் டைம் அங்கீகாரம்..மக்களவை,மாநிலங்களவைப் பதவி என்பதும் முற்றிலும் வேறு.

    ஆளுனர்கள் நியமனம்-இதே அரசியல் காரணங்களுக்காக தகுதியற்றவர்கள் பெரும்பாலும் நியமிக்கப் படும் இன்னொரு பதவி.ஆனால் அவர்கள் பாலிசி மேட்டர்களில் எதுவும் முடிவெடுப்பதில்லை.அதிகபட்சம் மாநில அரசைக் கலைக்க அறிக்கை கொடுக்க கைநாட்டு வைப்பார்கள்..அல்லது திவாரி மாதிரி என்பது வயதில் மங்கையைத் தேடுவார்கள். அந்த வகை நியமனங்களும் எனக்கு ஒப்புதலற்றவையே..ஆனால் அதிகபட்சம் நம்மைப் போன்றவர்களால் எதிர்த்து எழுத மட்டுமே முடியும்.

    குறைந்த பட்சம் அதையாவது செய்ய வேண்டும் என்கிறேன் நான்;அதற்கு எதிர்ப்பதமாக அவ்வித நியமனங்களைப் பாராட்டலாம் என்பது உங்கள் பார்வை.

    நீங்கள் சாரு ஷர்மா கூறியதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    Let's agree to disagree.

Thursday, April 7, 2011

காமச்சேறு

காமச்சேறு



அறிவன்#11802717200764379909 சொன்னது…
||உதாரணத்துக்கு: 'ஈர்க்கிடை புகா இளமுலை' என்கிறார் மாணிக்கவாசகர். ஈர்க்குச்சி புக இடமில்லாத அளவுக்கு பருத்த இளமுலை - பிரமாதமான கற்பனை. (இதற்கு முன்னும் பின்னும் நிறைய வர்ணிக்கிறார் - படு சுவாரசியம். பெண்ணை வர்ணிக்கும் கவிஞரையெல்லாம் லைன் கட்டி 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று திருவாசகத்தால் அடிக்கலாம், அத்தனை சுவாரசியம். RVS.. சேந்து படிக்கலாம் வாங்க:). எல்லாம் சொல்லி விட்டு 'ஆளை விடுறா சாமியோவ்' என்பது போல் முடிப்பதில் தான் சரிகிறது. திருவாசகத்தின் தமிழின்பம் பெண்ணின்பத்தை விட ஒரு படி மேல் என்று தைரியமாகச் சொல்வேன்; படிக்கும் போது ஒருவித போதையில் வைக்க வல்லது. ஆனால் பாருங்கள், பக்தி சத்தியமாக வரவில்லை. அதைத் தான் சொல்ல வந்தேன்.||

அப்பாதுரை..அழகான,பன்மொழிப் புலவரின் பெயர்..

ஆனால் பல விதயங்களை சிறிது தவறாகப் புரிந்து கொண்டு எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
உங்களுக்கு ஒரு கேள்வி வைக்கிறேன்..உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் புராணங்கள் அல்லது ப்ரீச்சிங் மெட்டீரியல் எதிலாவது காமம் கடந்து போதல் என்பது பற்றிய விசாரம் இருக்கிறதா என்பதை சிந்தியுங்கள்..

தமிழ்ச் சமூகம் மட்டும் தான் பிறப்பு,இறப்பு,இரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை மட்டுமல்லாமல் இவற்றிற்கு அப்பாலானது என்ன என்று சிந்தித்தது..

தமிழ்ச் சமூகத்தின் சைவ சிந்தாந்தம்தான்-அது மட்டும்தான்- அப் பாடு பொருள்களை விவரித்தது.

காமம் உலகியலுக்கும் உலக இயக்கத்திற்கும் அவசியமானதும்,தேவையானதும்.காமத்தில் ஈடுபட்டு,குடும்பத்தை விருத்தி செய்து உலக இயக்கத்திற்கு வழிவகை செய்து,தான் வாரிசுகளை ஆற்றுப்படுத்தி தனக்கு இனிமேல் உலகத்தில் கடமை எதுவும் இல்லை என்று ஆதித் தமிழன் சிந்திக்க நேர்ந்த காலத்தில் கிடைத்த தத்துவங்கள் சைவ சித்தாந்தமும்,இறப்புக்குப் பின்னரான உயிரின் நிலை பற்றிய ஆய்வும்,அவை சார்ந்த சித்தாந்தங்களும்..

காமத்திற்கு என்று ஒரு தனிக் இயல்பு உண்டு.உலகியலில் கிடைக்கும் எந்த விதயமும் ஒரு அளவில் சலிப்பு ஏற்படுத்தும்,ஒரளவிற்கு மேல் உண்ண முடியாது,கோட்டை கோட்டையாக பணம் சேர்த்து விட்டால் பணம் சலிப்பைத் தரும்..மனித உடலின் புலன் நுகர்வுகளில் சலிப்பேற்படுத்தாத ஒரு விதயம் உண்டெனில் அது காமம் மட்டுமே...

எனவே இறப்புக்குப் பின்னரான இயல்-இதை மெய்யறிவு என்ற அழைத்தார்கள் அவர்கள்-நோக்கிச் செல்ல விரும்புகிறாயா,ஆன்மா இறைத்தத்துவத்தில் ஒடுங்க வேண்டும் என்று விரும்புகிறாயா,காமத்திலிருந்து வெளியே வா,இல்லையேல் உனது உயிர் உடலுக்குள் உலவும் காலம் முழுதும் காமத்திலேயே கழித்து விடுவாய்,என்பதை உணர்த்தவே காமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே,அதனைப் பற்றிய இழிவான செய்திகளை எழுதி வைத்தார்கள்.

உயிர் உடலில் செயல்படும் பொழுதே உடலுக்குப் பின்னரான உயிரின் நிலை பற்றிய அறிவைத் தேடும் மனிதர்களுக்கு மட்டுமே காமத்தை விலக்க அறிவுறுத்தப்பட்டது..

காமமே விலக்கத்தக்கது என்று எந்த தமிழ் நெறியும் சொல்லவில்லை..

மற்றபடி அழகு மொழி நடையில் அருணகிரி பற்றிய பதிவுக்கு திரு மோகனுக்கு நன்றி..

************************

அப்பாதுரை சொன்னது… அ.. சுலபமா விட்டுறுவமா மோகன்ஜி? இன்னும் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடுவோம்.

அறிவன் அவர்களின் பின்னூட்டத்தை ரசித்துப் படித்தேன். எனக்கென்னவோ நாம் இருவருமே ஒரே கருத்தைச் சொலவது போலத் தோன்றுகிறது, அறிவன். of course, நான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் (தவறாகப் புரிந்து கொள்வது எனக்கு மூச்சு விடுவது போல் இயற்கையாக வரும்).

காமத்தை ஒழி என்ற பெயரில் பெண்களைக் கேவலப்படுத்துவதைத் தான் என்னால் ஏற்கமுடியவில்லை. காமத்தை ஒழி என்று சொல்லியிருக்கலாமே - தப்பே இல்லை. பெண்ணை வர்ணித்து, பிறகு பெண்ணால் உருவாகும் காமம் என்கிற நரகந்தரும் கொடுமையை ஒழி என்பது பெண்ணால் மட்டுமே காமம் உண்டாவது போன்ற பொய்மையைப் பரப்புகிறது. பெண்ணுக்குக் காமம் கிடையாதா? அல்லது பெண் காமத்தை ஒழிக்க வேண்டாமா? பெண் பெரும்பேரடைய வேண்டாமா? அல்லது பெண்கள் ஆண் உடல் ஓட்டை பற்றிய வர்ண்ணை கொண்ட வேறு இறையிலக்கியப் பாடல்களைப் படிக்க வேண்டுமா?

இப்பாடல்கள் அன்றைய நிலவரம் மற்றும் அந்த காலக்கட்டத்து நிகழ்வுகளை ஆதிக்கங்களை ஒட்டியது என்பதால் ஓரளவுக்கு இதை நியாயப்படுத்தினாலும், பெண்களைத் தாய் (இறைவனையே தாய்) என்றதும் அதே கால இறையிலக்கியங்கள் என்பதால் இந்த முரண் தலைதூக்குகிறது. காமம் என்ற பெயரில் பெண்ணைக் கேவலப்படுத்தி எழுதிய இவர்களை எந்தப் பெண் புலவரும் எதிர்த்துப் பாடாததும் குறையே. ஆதிசங்கரரிலிருந்து இப்படி எழுதியிருக்கிறார்கள். ஒரு புறம் 'காமாக்ஷி' என்று இறைத்தாயைப் போற்றியவர் இன்னொரு புறம் 'காமாந்தகி' என்று மனிதத்தாயை - தாயின் கருவைக் கொடுஞ்சிறை, மிகக் கொடுமையான நரகம் என்ற பொருளில் - வர்ணிக்கிறார். தாய் என்பவள் நரகத்தை தன்னுள் தாங்கிக் கொண்டிருப்பவளா? தந்தையின் காமத்தால் தாய் நமக்கு நரகத்தை உருவாக்குகிறாளா? இருவரும் கூட்டு சேர்ந்து நரகத்தில் சேர்க்கிறார்களா? பெண் குழந்தையை ஒரு தட்டு குறைந்து மதிப்பிடும் நம் 'சம்பிரதாயம்' எங்கிருந்து வந்தது என்று ஏன் தேடவேண்டும்?

இந்த நாளிலும் காமத்தை ஒழி என்ற கருத்தை பெண்ணை மற என்ற ரீதியில் நாமும் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

பொதுமகளிரைத் தான் சாடினார் என்று நியாயப்படுத்துவதால் நாம் :) அதன் பின்னணியில் இருக்கும் கொடுமையான உண்மையையும் நியாயப்படுத்துகிறோம்.

அறிவன், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை - எல்லா மதங்களும் உபதேசிகளும் காமம் கடந்து போதல் பற்றிச் சொல்கிறார்கள். மற்ற மதங்கள், நானறிந்த வரை கிறுஸ்துவம், இஸ்லாம், யூதம் - தகாத உறவு, முறையற்ற காமம், இச்சை பாவம், அத்தகைய பாவத்தின் சம்பளம் நரகம் (அல்லது நடுத்தெருவில் கல்லடி/சவுக்கடி :) என்று சொல்லியிருக்கிறார்களே தவிர, இந்து இறையிலக்கியம் போல் பெண்ணை அங்கம் அங்கமாக வர்ணித்து பிறகு பெண்ணை மற என்று சொன்னதாகத் தெரியவில்லை.

பொதுவாகவே, இறையிலக்கியத்தில் இறைவனின் காமக் களியாட்டங்களை உருகிப் பாராட்டிப் பாடும் புலவர்கள், மனிதர்களின் காமக் களியாட்டங்களை ஆழ்ந்த கசப்புடன் பாடியிருக்கும் முரண் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இவற்றைப் படிக்கும் மனதில் (பெண்ணோ ஆணோ) என்ன நினைப்புகள் ஓடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

உருப்படியா ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது மோகன்ஜி.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கலந்துக்குங்க இல்லாட்டி அப்படி ஓரங்கட்டுங்க.. :)
எனக்கு ஒரு ஆணியும் இல்லை.

*************************
அறிவன்#11802717200764379909 சொன்னது…
அப்பாதுரை, நீங்கள் ஒரு வட்டம் போட்டக் கொண்டு அதற்குள்ளிருந்து வெளியே வர மறுக்கிறீர்கள்.. பெண்ணையும் காமத்தையும் இகழும் இலக்கியங்கள் தமிழில் பெரும்பாலும் பக்தி இலக்கியத்தின் உச்ச இலக்கியங்களாக இருக்கும்.அதாவது தேவாரப் பாடல்கள் கூட இயல்பான பக்தி இலக்கியம்;பக்தி இலக்கியத்தின் உச்ச இலக்கியங்கள் என்று திருவாசகத்தைச் சொல்லலாம்,திருப்புகழைச் சொல்லலாம்,இன்னும் பட்டினத்தடிகள் பாடல்களை தத்துவார்த்தமான பக்தி இலக்கியம் என்று சொல்லலாம். இவ்வகை இலக்கியங்கள் எல்லாம் இறைவனை அடைவதைப் பற்றிப் பேசுகின்றன.கவனியுங்கள்,சாதாரணமான பக்தி இலக்கியங்கள் பெருமளவு இருக்கின்றன,தேவாரப் பதிகங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்,அவற்றில் பெரும் காமமும் இல்லை,இறைவனை அடைதல் பற்றிய அழுத்தமும் இல்லை;அதாவது ஒரு திருவாசகம் அளவுக்கோ,அல்லது திருப்புகழ் அளவுக்கோ அல்லது ஒரு பட்டினத்தடிகள் அளவுக்கோ. என்ன புரிகிறது இதிலிருந்து?? பிறப்பை ஒழிக்கும் ஒரு நிலை வரும்போது மட்டுமே இறைநிலையை ஆன்மா,அதாவது உயிர் அடையும் என்கிறது சைவசித்தாந்தம்...அந்த நிலையை நோக்கி உயிர்களை,அதாவது நமது உடலில் உலவும் உயிரை,உந்தும் நோக்கம் பற்றிய தமிழிலக்கியங்கள் மட்டுமே பெருமளவில் காமத்தை இகழ்கின்றன. இந்த நிலையை அடையப் போகிறோம் என்று உறுதியாகத் அப்பெரியார்களுக்குத் தெரிந்திருந்திருக்கலாம்..பட்டினத்தடிகளுக்கும்,ஒரு அருணகிரிக்கும்,ஒரு ஆண்டாளுக்கும்,ஒரு மணிவாசகருக்கும் அவ்வித அனுபவங்கள் அல்லது உறுதிப்பாடு கிடைத்திருக்கலாம். ஆகையினால்தான் மனிதருக்கெனில் பேச்சுப்படின் வாழ்கில்லேன் கண்டாய் என்று ஆண்டாளால் உறுதியாகச் சொல்ல முடிந்தது.. அந்த உறுதிப்பாடின் 1000 ல் ஒரு பங்கு கூட அடைய முடியாத நாம் இன்னும் நமீதாவையே கடந்து செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.அந்த உறுதிப்பாடு-assurance-இறைச் சக்தி அல்லது பரம் பொருளிடமிருந்தே அவர்களுக்குக் கிடைத்திருந்திருக்கலாம்,நம்மால் சொல்ல இயலாது. நாம் முழுதாக காமத்தைப் பழகவே இயலாதவர்களாக இருக்கும் போது,அவர்களின் மனப்பாடுக்குள் செல்வது இயலாத காரியமாக இருக்கும். எனவே நாம்,பெண்ணை உயர்வாகவும் சொல்லி காமத்தை எப்படி இகழலாம் என்று வாதித்துக் கொண்டிருக்கிறோம். பட்டினத்தடிகள் கூட கடைசிவரை தாய்மைக்கான கடன் இருக்கிறது என்பதை உறுதி செய்தவர் தானே..எனவே அவர்கள் பெண்மையையோ அல்லது தாய்மையையோ இகழ்ந்தார்கள் என்பது ஒத்துக்கொள்ளத் தக்கதல்ல. எது இகழப்பட்டது என்றால்,கருக்குழிக்குள் ஒரு பிறவியாக எடுப்பது,அதுவும் உயிர் இறையுடன் கலந்து விட வேண்டும் என்ற தீராத உத்வேகத் தாகம் மிக்கவர்களாக இருந்தவர்கள் வாக்கினில் மட்டும் தான் அவ்வித வாக்கு வந்தது. உயிரை உலகிற்குள் திரும்ப செயல்பட வைப்பது பொதுவாக மாயா சக்தி எனப்படுகிறது.மாயா சக்தி செயற்படுவது முதலில் காமத்தின் வழியாக.உயிர் செயல்படும் உடல் காமத்தில் அமிழும் போது உயிரின் நோக்கம் உலக நடவடிக்கைகளில் அமிழுகிறது.இது சைவ சித்தாந்தத்தின் வழி உயிர் உடல் மாயைத் தத்துவங்கள் பற்றிய விளக்கம். ஆக்ஸிலைட்டரை மிதிக்க வேண்டுமெனில் பிரேக்கிலிருந்து காலை எடுத்தாக வேண்டும்,அப்போதுதான் கார் வேகமெடுக்கும்,இரண்டும் ம்யூச்சுவலி எக்ஸ்க்ளூசிவானவை. உயிர் இறையுடன் கலக்க வேண்டும் என்ற உத்வேகம் கொண்டவர்களுக்கு அதை உடல் மற்றும் மாயை நிரம்பிய உலகில் இருந்து பிய்த்து எடுத்தாக வேண்டும்,காமத்தை ஒழித்தால் ஒழிய அவர்களால் அது இயலாது.. எனவேதான் பட்டினத்தடிகள் மீண்டும் மீண்டும் கருக்குழிக்குள் புகுவது அவலம் என்று பாடினார்..அவர்கள் உலக வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் உயிரின் வாழ்க்கையை அல்லது நிலையை அல்லது இறைத்தன்மையைப் பார்த்தார்கள்,அதுவே இலக்காக இருந்தது.. நான் உலகின் மாயப்பாடுகளை,பெண்ணை,காதலை,வாழ்வை சித்தாந்தத்தின் பார்வையில் மாயையை நேசிக்கிறோம். நாம் பார்ப்பதும் அவர்கள் பார்ப்பதும் உயிரின்நிலை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள்.ஒரு பக்கம் உலக வாழ்வை முறித்து வேறெங்கோ,வேறு ஏதோ நிலையை அடையும் நிலை.ஒரு பக்கம் உலகம்,அன்பு,காதல்,தாய்மை போன்றவை. நாம் இந்தப் புறம் இருந்து கொண்டு அவர்கள் சொல்வது எப்படி சரி,தாய்மையைக் கேவலப்படுத்தலாமா என்று வாதித்திக் கொண்டிருக்கிறோம்;அவர்கள் நம்மைக் கைகொட்டிச் சிரித்து,முட்டாளே காமம் இவ்வளவுதான்,கொங்கை இதுதான்,உயிர்குழி இதுதான்,இதில் அமிழ்ந்து சாகாதே,கருக்குழியில் இருந்து மீள் என்கிறார்கள்... இரு பார்வைக்காரர்களும் இணக்கமாகப் போவது சற்று சிரமம்தான் ! :))


மோகன்ஜி சொன்னது…
அன்புள்ள அப்பாதுரை! உங்களுக்கு மறுமொழியை யோசித்து,பணிகளை முடித்து வலைக்குள் புகுந்த போது, அறிவனின் சைவசித்தாந்த விளக்கம்... நான் சொல்ல வந்ததைவிட ஆழமானதும் தார்மீகமுமான வாதத்தை முன் வைத்திருக்கிறார். சிலமுறை திரும்பத் திரும்பப் படித்தேன்.. லயிப்பிலிருந்து மீள்வது சற்று சிரமமாகவே இருந்தது. போகிறபோக்கில் எனக்கும் குட்டு வைத்திருக்கிறார்.இது "மோதிரக் குட்டா"ய்த்தான் தோன்றுகிறது.
மோகன்ஜி சொன்னது…
அன்பு அறிவன்! உங்கள் கருத்துகள் தெளிவாயும் தீர்க்கமாயும் உள்ளன. என் பாராட்டுதலும்,நன்றியும். சிவலிங்கக் கருத்தாய் நான் குறிப்பிட்டது முரண் என்கிறீர்கள். நான் மாதவிப் பந்தலை அவசியம் பார்க்கிறேன். பார்த்தபின் உங்களுக்கு இதுபற்றி அவசியம் எழுதுவேன். உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது. வலையில் சில ஆக்கபூர்வமான பதிவுகளைச் செய்யலாம் எனும் உறுதி உங்களைப் போல நண்பர்களால் வலுவாகிறது. மீண்டும் சந்திப்போம்.



Tuesday, March 8, 2011

முட்டை சைவமா ?



முட்டை சைவமா ?




||மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. ||

மிகத் தவறான கூற்று..

சைவம் சிவமொடு சம்பந்தமாவது என்பது திருமந்திரம்..

சைவம் என்ற சொல்லுக்கும் சிவம் என்ற சொல்லுக்கும் வேறுபாடு இல்லை;சிவத்தை வலியுறுத்தியவர்கள் எல்லாம் சைவர்கள் ஆனார்கள்..சிவம் என்ற சொல்லுக்கு அன்பு என்ற பொருளும் உண்டு;ஆகையினால்தான் அன்பே சிவம் என்ற சொலவடையும் உருவாயிற்று..

சைவ உணவு என்ற உணவுப் பழக்கம் எவ்வுயிரையும் உணவின் பொருட்டு கொல்லாமையைக் வலியுறுத்திய ஒரு கருத்தாக்கம்.அந்த கருத்தாக்கம் தோன்றியதன் காரணம் பிற உயிர்களிடத்ததில் அன்பு..

நமது குழந்தையிடத்தில் எவ்வளவு அன்பு வைக்கிறோமோ அதை வகை அன்பை ஆடு,கோழிகளிடமும் வைத்தால் அவற்றை நமது உணவுக்காக கொல்லமாட்டோம்..எனவே அன்பின் வழியாக,அதாவது சிவம்-சைவம் என்ற தொடர்பின் வழியான கொள்கையாளர்களின் உணவு முறை சைவ உணவு முறையானது !


||இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.||

இது இன்னொரு தவறான கூற்று.

ஆதி நாள் இலக்கியம் தொட்டு சைவம்,வைணவம்,சமணம்,சாக்தம்,கபாலிகம்,காணாதிபத்யம் போன்ற ஆறு சமயப் பிரிவுகள் இருந்தன.

சைவம் என்பது ஒரு சமயமல்ல என்று கூறுவது சிறிதும் சமய விதயங்கள் அறியாத ஒரு கூற்று.

இந்து என்ற சொல் தமிழர்கள் கண்டு பிடித்ததல்ல;அது அறிவற்ற ஆங்கிலேயர்கள் தென்னகத்தில் நிலவிய 6 வகை சமயங்கள் பற்றிய அறிவில்லாமல், பொதுவாக இந்தியர்கள் அனைவரையும்-அதாவது இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் அல்லாத அனைவரையும் குறிக்க உருவாக்கிய ஒரு சொல்.

தமிழிர்கள் அந்த சொல்லுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.

தமிழர்களின் பெருவாரியான சமயம் சைவம் அல்லது வைணவம்.
சாக்தம்,கபாலிகம்,கானாதிபத்யம் மூன்றும் சைவத்தில் அடங்கி விட்டன.சமணம் தேய்ந்து விட்டது..

எனவே சைவம் என்பது சாப்பாட்டைக் குறிக்கும் சொல் அல்ல;அது முழுக்க சமய நெறியைக் குறித்து அதன் வழியே உணவுப் பழக்கத்தையும் குறிக்கின்ற சொல்.

3:53 PM, March 09, 2011


சாருவும் மிஷ்கினும்


சாருவும் மிஷ்கினும்




அறிவன்#11802717200764379909 said...

எளிய தமிழில் நீரோட்டமான நடையில் எழுதப்பட்ட நல்ல கட்டுரை..

சாநி அடிப்படையில் அருவருக்கத்தக்க நடையில் எழுதினால் கவனிக்கப்படுவோம் என்ற சித்தாந்தத்தை கடைப்பிடித்து எழுதுபவர்.துவக்கத்தில் திராவிடக் கட்சிகள் எப்படி பெரும்பான்மை சமூகத்திற்கு அதிர்வு தரத்தக்க கலகக் குரல்களை எழுப்பி மக்களின் கவனம் பெற்றார்களோ அதே கலக உத்திதான் அவரது டூல்..இடையில் ஏன் தனக்கு இன்னும் நோபல் தரப்படவில்லை என்றும் அங்கலாய்ப்பார்;அதுவும் அவரது எழுத்து நடையின் இடையில் அகப்படும் பகடிக்கான விதயம்தான் என்றுதான் அவரை வாசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள் என்பதை அவர் அறியாததுதான் சோகம்....

ஜெ பற்றிய உங்கள் மதிப்பீடு முழுக்கவும் சரியா என்பதில் எனக்குக் குழப்பம் இருக்கிறது..சில சமயம் அசத்துகிறார்,சில சமயம் அவலமாக இருக்கிறது..
ஈழ்த்தின் கொலைகள் பற்றிய அவரது கருத்து,உலோகம் நாவல் போன்றவற்றில் அவரது உணர்வுப் பிறழ்வு கண்டிக்கத்தக்கது என்பதே எனது பார்வையும்..ஆனாலும் காடு,ஊமைச் செந்நாய் போன்ற சில படைப்புகள் அசத்துபவை என்பதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது..

எஸ்ரா வின் யாமம் மிகவும் பிடித்துப் படித்தது..கதாவிலாசம் அவ்வளவு சுவரசியமாக இல்லையெனினும் இவை இரண்டின் தாக்கத்திலும் பயங்கரமாகக் கிளப்பிவிடப் பட்ட விளம்பரத்தினாலும் உபபாண்டவம் படித்தேன்...40 பக்கம் கூட படிக்க முடியவில்லை!

நான் நினைப்பது என்னவென்றால்..எழுத்தாளர்கள் பிரபலம் அடையும் வரை எழுதுபவைதான் படிக்கத்தகுந்தவை என்பது எனது புரிதல் :))

விதிவிலக்கான எழுத்தாளர்கள் மிகச் சிலரே..சுஜாதா,கல்கி,புதுமைப்பித்தன்,லாசரா போன்ற மிகச் சிலர்.
பாலகுமாரனும் இந்தப் பட்டியலில் சேர்க்கத்தகுந்தவர்,அவரது குரு வேடத்தைக் கலைத்தால்!

அழகாக எழுதப்பட்ட நல்ல பத்தி..நன்றி.

Sunday, May 23, 2010

சிங்கப்பூர் டயரி - 4

Anonymous said...

//அறிவன்#11802717200764379909 said...
சிங்கை அநானிகள்,நீங்கள் முதலில் தமிழில் எழுதிப் பழகுங்கள்,தமிழில் பேசிப் பழகுங்கள்..பிறகு அனைத்தையும் அனைவரையும் குறை சொல்லலாம்.//

Here it is! I was expecting such a typical Singapore asinine reaction -- a habit, no doubt, borne out a life-long anxiety of being defensive!

For the Tamil protectors and promoters, coming up with another campaign is same as having the job done.

"தமிழை நேசிப்போம்,தமிழில் பேசுவோம்" is probably one such campaign, where it is customary to over-report results and pat oneself on the back for the job well done!

What did you achieve in the campaign?

*********************************

அறிவன்#11802717200764379909 said...

மிஸ்டர் அனானி,கேள்வி-இயக்கம் என்ன சாதித்தது என்பதல்ல..இயக்கம் நடத்தியும் நீங்கள் ஏன் தமிழ்ப்பயன்பாட்டுக்கு தயாராக இல்லை என்பதுதான்?


நீ என்ன முயற்சி எடுத்தாலும் நான் இம்மி கூட மாற மாட்டேன்;ஆனால் முயற்சிப்பவர்களையும் நொள்ளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பேன் என்பது போன்ற மனநோய் வாதிகளிடம் வாதிடல் வீண்..

உங்களுக்கு இரண்டு செய்திகள் மட்டும் தர விருப்பம்:
1.நானும் கூட தமிழ்பதிவில் எழுதிக் கொண்டிருந்தாலும் எனது தனிப்பட்ட மின்மடல்களை ஆங்கிலத்தில்தான் எழுதிக் கொண்டிருந்தேன்..அந்த இயக்கத்தின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கே ஒரு வெட்கம் ஏற்பட்டது;தமிழிலக்கியப் பரிச்சயமும் தமிழார்வமும் இன்றைய தமிழின் தேய்மை குறித்தான ஆதங்கமும் கொண்ட நானே ஏன் நடைமுறையில் அனைத்து தளத்திலும் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்ற கேள்வி எழுந்ததால் அனைத்து தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களிலும் தமிழைப் பயன்படுத்துவது என்ற சுய உறுதி எடுத்துக் கொண்டேன்..
2.தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் இயக்கத்தில் எனக்கு செயல் தொடர்பெதுவும் இல்லை.ஆகவே என்னிடம் நேர்மறை நொள்ளை பேசிப் பயனில்லை!
ஆகவே சிங்கை அரசின் அந்த மொழிப் பிரிவினருடன் நீங்கள் வாதிடலாம் அல்லது சண்டை போடலாம்! எங்கே,நமக்குத்தான் பெயருடன் வந்து வாதிடுவதற்கே தொடை நடுங்குகிறது,பின்னெங்கே அரசாங்கத் தொடர்புள்ளவர்களிடம் பேசுவது?!

**********************

Anonymous said...

With due apologies to Badri for using his blog comments for what seems to be another pointless discussion, let me say my final words and stop.

Arivan, my original comment, if you read carefully, firstly puts forth my perception of the state of Tamil in Singapore. Secondly, it tries to inform Badri that the sample of people he interacted with in Singapore suffer the self-selection bias and therefore might distort any judgement about standards, interest in Tamil. Thirdly, it explains the difference between Tamil and the other 2 national languages with respect to language and self-identity and speculates on a possible cause. Finally it proposes a solution (social & political).

I did not see a single response to any of the above in your comment. Instead what do you do? – you take the easy way out and go on a personal attack for not using Tamil in writing. Not only is it completely beside the point, it is precisely the kind of defensiveness that we unfortunately display when faced with criticism. What this does is, it reinforces the widely held (history is full of such examples) notion that Singaporeans will not, or incapable of engaging with detractors on issues.

I concede that your "தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் campaign" is sort of a social solution. But having seen the glut of campaigns, you can’t blame me for being sceptical of campaigns in general in Singapore. But, hey, if you are so conditioned by them, good for you and go for it!

In closing, my sincere apologies if I came across as rude and hurt your feelings. I guess I did not pay as close an attention to the TV advertisements that promoted the kindness campaign on how to be nice and behave towards others.

Request to Badri: It would be very useful to hear from you on the quality of participants at your workshop and your impressions on the general state of affairs in Singapore. We heard from you (and from Paa.Raa’s posts) about the earnestness. What do you think of the ability?


அறிவன்#11802717200764379909 said...

||With due apologies to Badri for using his blog comments for what seems to be another pointless discussion, let me say my final words and stop.

Arivan, my original comment, if you read carefully, firstly puts forth my perception of the state of Tamil in Singapore. Secondly, it tries to inform Badri that the sample of people he interacted with in Singapore suffer the self-selection bias and therefore might distort any judgement about standards, interest in Tamil. Thirdly, it explains the difference between Tamil and the other 2 national languages with respect to language and self-identity and speculates on a possible cause. Finally it proposes a solution (social & political).||

நண்பர் அனாநி,பத்ரியிடம் மன்னிப்புடன் நானும் பதிலளித்து விட்டு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களது கருத்தைப் படிக்காது நான் கருத்துச் சொன்னதான பொருளில் எழுதி இருக்கிறீர்கள்;இல்லை!
ஒரே ஒரு வித்தியாசம்.உங்களது கருத்துக்களுக்கான விசாரங்களுக்குள் ஈடுபடாமல் அந்த நான்கு காரணங்களுக்கும் காரணிகளுக்கும் எது தீர்வாக இருக்க முடியும் என்று நான் நினைப்பதை எதிர் வாதமாக முன் வைத்தேன்.அதை நீங்கள் சரியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட தாக்குதலாக,பிழையாக எடுத்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு தமிழுக்கான இலக்கியத்திற்கு சுமார் 3000 வருட தொடர்ச்சி-நமக்குத் தெரிந்து- இருக்கிறது!இன்றும் சிறிது முயற்சித்தால் அகத்தியத்தையோ தொல்காப்பியத்தையோ நம்மால் படித்துத் தெரிந்து புரிந்து கொள்ள முடிகிறது.காரணம் என்ன?
இன்னொரு இந்தியப் பாரம்பரிய மொழியாக அடையாளப்படுத்தப்படுவது சமத்கிருதம்.அதிலும் எண்ணற்ற புராணக் கட்டுகள்,நீதிநூல்கள் சுமார் 2000 வருடத் தொடர்ச்சியில் இருக்கின்றன.ஆனாலும் இன்று எத்தனை பேர் சங்கரரின் பாஷ்யத்தையோ அல்லது வேறு ஒரு சமத்கிருத நூலையோ படிக்க முடிகிற நிலையில் இருக்கிறார்கள்?

இன்று இந்தியாவில் தெற்கே தமிழகத்தைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பெரும்பாலானவர்களால் அறிந்த மொழியாகவும் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் கூட தொடர்பு மொழியாகவும் இந்தி இருக்கிறது.இத்தனைக்கும் இந்தியில் தமிழில் இருக்கும் அளவுக்கு,ஒப்புநோக்கும் அளவுக்கு இலக்கிய சாரம் இருப்பதாக-எனக்குத் தெரிந்தவரை-இல்லை.

இந்த மூன்று மொழிகளின் நிலைகளுக்குமான காரணம் ஒன்றுதான்.
அது,தொடர்ந்த பயன்பாடு!
நீங்கள் கீழே தவறான காரணிக்குச் சுட்டியிருக்கும் வரலாறு,பயன்பாடில்லாத மொழிகள் அழிந்திருப்பதற்கான நெடிய சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறது.சமத்கிருத அழிவு அதில் ஒன்று..

தமிழ்மொழி இதுநாள் வரை(என் வயது முப்பதுகளின் மத்தியில்-எனது தோழர்கள் வரையிலான தலைமுறையில்)சாதாரண தொடர்பு மொழியாகவும் பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது.பயன்பாட்டுக்கு மேல் இலக்கியத்திலான ஈடுபாடு வேண்டுமானால் அடுத்த கட்டமான இலக்கிய வளர்ச்சி,கலாசாரப் பரவல் போன்றவையாக இருக்கலாம்..ஆனால் மொழி வாழ முதலில் சுவாசம் வேண்டும்;சுவாசம் இருக்க சாதாரண வாழ்வில் பயன்பாடு வேண்டும்..அது உங்களிடமே இல்லை..எனவேதான் அதை மிக நேரடியாகச் சுட்டினேன்..பொதுவாக எனது வாதத்தின் கூறு-style-அது..மிக நேரடியாக உணரவைக்க எழுதுவது.

பயன்பாட்டில் இல்லாத எந்த மொழியும் அழியும்.மொழி பயன்பாட்டில் இருக்க அரசும் அமைப்புகளும் ஒரு அளவுக்குத்தான் முயல முடியும்;அந்த மொழியின் மீது ஈடுபாடு இருப்பவர்கள் அதை விருப்புடன் பயன்படுத்தி புழக்கத்தில் வைத்திருந்தால்தான் அது வாழும்.இல்லையெனில் வீழும்.

இந்த வீழ்ச்சி சிங்கையில் உங்கள் தலைமுறையிலேயே அதாவது ஒப்புநோக்கத்தில்-comparative-எனது தலைமுறையிலேயே நடந்து கொண்டிருக்கிறது;
தமிழகத்தில் அது எங்களுக்கு அடுத்த தலைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது.இன்றைய 20 களில் இருக்கும் தமிழக வாலிபர்களுக்கு ஒரு திருக்குறளை பிழையின்றி வாசிக்கக் கூட தெரிந்திருப்பது அதிசயமாகவே இருக்கிறது.சிங்கையில் இளையர்களின் தமிழைக் கேட்கவே வேண்டாம்,எரிச்சல் மண்டும் கேட்டாலே,அந்த அளவுக்கு பிழையான இழுத்த பயன்பாடு..இந்தப் பயன்பாட்டுக்குறை உங்கள் அப்பாவின் காலத்திலேயே துவங்கி,உங்கள் காலத்தில் வளர்ந்து,உங்கள் மகனின்,மகளின் காலத்தில் முதிர்ந்து கொண்டிருக்கிறது..அதுவும் எனது வலிக்கான,மிக நேரடி பதிலுக்கான காரணம்!

எல்லாவற்றிற்கும் மேலாக charity begins at home என்பதான சொலவடை போல சமுதாய ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் மாற்றங்கள தனி மனிதர்களிடமிருந்தே துவங்க வேண்டியிருக்கிறது..நாம் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் கூட!

||I did not see a single response to any of the above in your comment. ...What this does is, it reinforces the widely held (history is full of such examples) notion that Singaporeans will not, or incapable of engaging with detractors on issues.||

எப்படி இப்படி மிகச்சரியாக, ஒரு முழுக்கத்தவறான அனுமாணங்களுக்கு வந்து அந்த அடிப்படையில் வாதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை..
சிங்கை அரசின் திட்டத்தை ஆதரிப்பது போன்ற தோற்றத்தில் பேசியதால் தோற்ற மயக்கம் கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது..
நான் சிங்கப்பூரியன் அல்ல!
மேலும் கருத்துக்குச் சரியான தீர்வின் அடிப்படையிலேயே எனது வாதம் அமைந்தது,அமைந்திருக்கிறது..சிங்கைத் தமிழர்களின் குடும்பத்திற்குள்,தகவல் பரிமாற்றத்தில் தொடர்ந்த மொழியின் பயன்பாடு நீங்கள் குறிப்பிட்ட 4 காரணிகளுக்குமே தீர்வாக அமையும்;ஒரு காரணியான வேற்று மொழி இந்தியர்கள் இங்கு வந்து கலந்து அரசியல் ரீதியாக தமிழை கழற்றி விட்டு இந்தியைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்று சொல்வதை வேண்டுமானால் ஒரு சிறிது ஏற்கலாம்..ஆனால் அதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும்,தமிழ் ஏற்கனவே சிங்கையில் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்கிறது..ஆனால் இந்தி முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது..
அதாவது தமிழ் தொய்வில்தான் இருக்கிறது..முழுக்க வெளியே இல்லை!

||I concede that your "தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் campaign" is sort of a social solution. But having seen the glut of campaigns, you can’t blame me for being sceptical of campaigns in general in Singapore. But, hey, if you are so conditioned by them, good for you and go for it!||

இயக்கங்கள் மாற்றங்கள் கொண்டு வருமா என்பதல்ல கேள்வி,நாம் அதற்கு செவி சாய்க்கிறோமா என்பதே கேள்வி..துரதிருஷ்டவசமாக இதை திரும்பவும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது..
மேலும் என் அம்மா ஒரு சொற்றொடரை அடிக்கடி சொல்வார்கள்..'உள்ளது போகாது,இல்லது வாராது' என்பது அது..
சைவ சித்தாந்தத்தின் தத்துவங்களுள் ஒன்று அது,இருந்தாலும் சாதாரண எடுத்தாள்வுகளுக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரர்களின் நேசம் பற்றிய நேரடி அனுபவங்கள் எனக்கு நிறைய இருக்கிறது! எனவே மீண்டும் அடிக் குறிக்க வேண்டி இருக்கிறது..இயக்க முயற்சிகள் ஒன்றும் மந்திரக் கோல்கள் அல்ல.ஒரளவுக்காவது அவற்றை நாம் கவனிக்கிறோமா என்பதுதான் எனது பார்வை..

மேலும் உயர்மட்ட அளவில் சிங்கையில் தீட்டப்படும் திட்டங்கள் உங்களுக்கான நெடிய அனுபவத்தில் வெறுத்துப் போக வைத்திருக்கலாம்..ஆனால் ஒரு வெளியாளான எனது பார்வையில் அமைப்புகளும் நிர்வாகமும் ஒரளவுக்கு திறந்த மனத்துடனே இருப்பதாக நான் உணர்கிறேன்..சிங்கையின் நூலநிலைய அமைப்பு நான் பரிந்துரைத்த சுமார் 300 நல்ல புத்தகங்களை வாங்கி இருக்கிறார்கள்,எனக்கு நன்றி அறிவித்து மடல் அனுப்பி ஊக்கியிருக்கிறார்கள்..
டவுன் கவுன்சிலில் நான் சுட்டிக்காட்டிய சில ஆலோசனைகளுக்கு நன்றி கூறி மாற்றங்களை மறு சீரமைப்பில் கொண்டு வருவதாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள்..உணவுச் சாலைகளில் சுட்டிக்காட்டிய குறைகளை சரிப்படுத்தி இருக்கிறார்கள்.இத்தனைக்கும் நான் உணவுச்சாலைகளில்-ஃபுட் கோர்ட்-சாப்பிடுவது மிக மிக அரிது..
எனவே நான் விதயங்களை எளிதாக நேரடி மதிப்பில்-ஃபேஸ் வால்யு-எடுத்துக் கொள்கிறேன்..உங்களுக்கான அனுபவங்கள் வேறாக இருக்கலாம்..

||In closing, my sincere apologies if I came across as rude and hurt your feelings. I guess I did not pay as close an attention to the TV advertisements that promoted the kindness campaign on how to be nice and behave towards others.||
முன்பே சுட்டியபடி உங்கள் மீது வருத்தம் ஒன்றும் இல்லை.மேலும் எனது நேரடி அனுபவங்களிலிருந்தே நான் விதயங்களை அனுமானிக்கிறேன்,பாடம் கற்கிறேன்..சிங்கப்பூரர்களுடனான எனது அனுபவங்கள் நினைத்து நெகிழ வைப்பவை அல்ல;எனினும் உங்களது நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.

||Request to Badri: It would be very useful to hear from you on the quality of participants at your workshop and your impressions on the general state of affairs in Singapore. We heard from you (and from Paa.Raa’s posts) about the earnestness. What do you think of the ability? ||
இது முற்றிலும் வேறு கோணம்..நான் இதில் வாதிடவே இல்லை..

பத்ரிக்கு..மீண்டும் வருத்தங்கள்..நிறைய நன்றிகள்..

தேட...