Sunday, January 24, 2010

"Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?"

"Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?"

அறிவன்#11802717200764379909 said...

{5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
}
திரு.சுப்பையா,மேலும் சில கூர்மைப்புத்தலுக்காக சில வார்த்தைகள்..

நவாம்சம் ராசியின் மேக்னிஃபைடு வெர்ஷன் என்னும் போது ராசியின் லக்னம் எந்த நவாம்ச வீட்டின் பாதிப்பில் இருக்கிறது என்பதை விளக்குவதுதானே நவாம்ச லக்னம்?
நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றால் நவாம்சத்தில் அமைந்த கிரகங்களின் பாவ நிலையும் பார்க்கப்படாதல்லவா?அவற்றின் வீட்டின் நிலை மட்டம் தானே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லையல்லவா?

காட்டாக குரு 10 ல் ராசியில் இருக்கும் போது அம்சத்தில் 3 ல் இருந்தால்,3 ம் இடம் என்ற பாவ நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையென்றால் இந்த 3'ம் இடம் என்ற பாவ நிலை'க் கேள்வி வராதல்லவா? just குரு அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை மட்டும்தான் வைத்து பலன் பார்ப்போம்.

இது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.
ராமன் ஸ்கூல் சிந்தனையும் அப்போக்கில் இல்லை என்றுதான் தோன்றுகிறது;மாற்றுக் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.

Monday, January 25, 2010 8:17:56 AM

"அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!"

"அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!"



கிரி,உங்கள் பார்வையில் நான் வேறுபடுகிறேன்.
நான் கடவுள் உருவாக்கத்திற்காக பாலா நிறைய சிரமம் எடுத்துக் கொண்டிருக்கலாம்;மற்றபடி சமூகத்தை பிரதிபலிக்கிறேன் பேர்வழி என்று சமூகத்தின் அழுக்குகளைத் தேடிப் பிடித்து பொது ரசனைக்குள்ளாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.அதை புண்'நவீனத்துவம் என்று பலர் சொன்னாலும்!
சினிமா என்பது ஒரு கலை வடிவம்;ஒரு கலை அல்லது அதன் வெளிப்பாடு மனிதனின் நல்ல மென்மையான ரசனைகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டும்.அந்த வகையில் அகோரி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை மனிதத்தனத்தை மீறி கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பொதுப்பார்வைக்கு வைத்த பாலா நிச்சயம் ஒரு இயைந்த-balanced-மனநிலையில் இருக்கும் நபர் அல்ல என்றே நானும் நினைக்கிறேன்...மற்றும் அவரது எல்லா படங்களும் மனச்சிதைவடைந்த மனிதர்களையே சுற்றிச் சுழல்கிறது;அவருக்கே தெரியாமல் அவரது உள்ளார்ந்த மனம் எங்காவது சிதைவுற்றிருக்கலாம்...எனவே நான் கடவுளுக்கு விருது என்பது தவறான முன்னுதாரணம்;இதைவிட வன்முறை மற்றும் சமூக வன்முறைகளை முன்னிலைப்படுத்தும் படங்களை சிந்தனையில் வளர்க்க டைரக்ஷன் கனவில் இருக்கும் பல துணை இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் தயாராவதை இந்த விருது ஊக்கப்படுத்தியிருக்கிறது;இன்னும் பல அகோரி கதைகளுக்கு தமிழ்க்களம் தயாராக வேண்டும் !

இரண்டாவதான வாரணம் ஆயிரம் பற்றியது.காஷ்மீர் என்று டில்லி காட்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்(சிறுவன் கடத்தல்...தில்லிதான் என்று நினைக்கிறேன்)
வா.ஆ.படம் முழுவதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி விரவியிருந்தது.அப்பா ஒரு குடும்பப் பிணைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப் படுத்த,மகன் தன் முனைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது;அந்த முனைப்பிற்காக முயற்சியின் எந்த எல்லைக்கும் இருவரும் செல்கிறார்கள்.இந்த இரண்டு டைமன்ஷனில் அப்பாவை பல விதயங்களில் வரித்துக் கொள்ளும் மகனின் விவரிப்பில் படம் செல்கிறது.

எனக்கு மிகவும் பிடித்து ரசித்தேன்..டில்லிக்காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் எனினும் ஒரு தாங்க முடியாத இழப்பைத் தாங்குவதற்கு செய்யப்படும் மனிதனின் முயற்சியாக அதைப் பார்க்கும் போது இயல்பாகவே இருந்தது.
நினைத்தவுடன் கடன்களை அடைக்க முடிவதும்,நினைத்த உடன் ராணுவத்தில் வேலை கிடைப்பதும் லாஜிக் ஓட்டைகள் என்றாலும் அவை தரும் நேர்மறை எண்ணங்களுக்காக அவற்றை மன்னிக்கலாம்!

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கலை அனுபவம் பார்வையாளனின் சிந்தனையில் ஒரு புள்ளியாவது ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது தான் சார்ந்த சமூகத்தின் மீதான தனது பார்வையை நெகிழ்த்தியிருக்க வேண்டும்;இவை முறையே பாசிட்டிவ் சினிமா அல்லது நெகட்டிவ் சினிமா என்ற இரண்டு பரந்த வகைப்படுத்தலுக்குள் வந்துவிடும்.

ஆனால் நான் கடவுள் இரண்டாவது வகையின் போர்வையில் வந்த ஆனால் நொந்து போக வைக்கும் ஒரு படம்.

சாரி..கொஞ்சம் நீண்டு விட்டது !

Monday, December 14, 2009

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் !

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் !


அறிவன்#11802717200764379909 said...

கண்ணன்,எதற்கு இப்படி கருணாநிதி மாதிரி ஆன்னா,ஊன்னா பார்ப்பனர்,சூத்திரர் என்று beating the bush செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நன்றாக எழுதுகிறீர்கள்,நல்ல விதயங்களைப் பற்றி கன்ஸ்ட்ரக்டிவ் ஆக எழுதுங்களேன்..

சரி,இப்போது சான்று பற்றி:
சம்பந்தர் தேவாரத்தில் திருப்பாணாழ்வார் என்று ஒருவரைப் பற்றிய செய்தி இருக்கும்.திருப்பாணாழ்வார் தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர்,பிறப்பால்;அவரது பக்தி,இசையறிவு,இறையன்பு ஆகிய காரணத்தால் அவரைத் தான் சென்ற இடமெல்லாம் அழைத்துச் சென்று,'ஐயரே' என்று விளித்து,விளிக்கச் செய்து,தன் குலமான பிராம்மணர்களின் எதிர்ப்புக்கிடையிலும் சமூகநீதியை நிலைநிறுத்தியவர் சம்பந்தர்..ஆனா என்ன செய்வது,அவரெல்லாம் உங்களுக்கு வில்லனாயிற்றே?

சரி,எப்போ,இடுகையை தூக்கப் போறீங்க?

Friday, November 14, 2008

"ஆடவர் குணங்கள்"

"ஆடவர் குணங்கள்"

பேராண்மை மிக்க ஆண்கள் பெண்களின் அனுக்கத்திற்குக் கிடைப்பதில்லை என்பது சரியான கருத்துதானா?

பேராண்மை மிக்க ஆண்கள் அனைவரும் விவேகானந்தராகவோ,பெரியாராகவோதான் இருக்க முடியும் என்பது ஒரு மூடிய சிந்தனையாகத் தோன்றவில்லையா?

அவர்கள் வெளித்தெரியாமல் போகிறார்கள் என்பதாலேயே இவ்வகை கல்யாணகுண ஆண்கள் இல்லை என்பது அர்த்தமில்லையே!வேண்டுமானால் அவர்களின் விகிதாசாரம் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அதற்கும் பிள்ளைகளின் வளர்ப்பின் மூலம்,பெண்களே ஒரு வகையில் காரணம் என்பதுதான் வாழ்வின் விநோதம்.ஆண் என்னதான் நேரம் ஒதுக்கினாலும் பரினாம இனக் கவர்ச்சி விதிகளின் படி ஆண்குழந்தைகள் பெருமளவு தாயின் கவன ஈர்ப்பிலேயே வளர விரும்புகிறார்கள் என எண்ணுகிறேன்.

என் தாயும் கூட சிறுவயதில் என்னைத் கண்டிக்க நேர்ந்தால்,"உன் பெண்டாட்டி வந்து,பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறாள் பார் இது போல்,என என்னைத்தான் நோவாள்,எனவே இது போல செய்யாதே,என...

எனவே நல்ல கணவர்கள் உருவாவது நல்ல தாய்களாலேயே சாத்தியம் என நினைக்கிறேன்.

Note:Please remove word verificaiton in commment moderation settings

Thursday, November 13, 2008

"டோண்டு பதில்கள் - 14.11.2008"

"டோண்டு பதில்கள் - 14.11.2008"

>>1. ஒரு சொட்டு விந்து என்பது நூறு சொட்டு ரத்தத்துக்கு சமமாமே? உண்மையா? விளக்கவும்.பதில்: உண்மையல்ல. காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல. அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான், ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவைதான்.உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடுகின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான். நன்றி ஞாநி. இந்த விஷயத்தில் "Everything you wanted to know about sex, but were afraid to ask" என்ற தலைப்பில் சமீபத்தில் 1972-வாக்கில் வந்த புத்தகத்தில் இது சம்பந்தமாக இவ்வாறு கூறியிருப்பார்கள். கைமுட்டி அடிப்பவர்களை உங்கள் கேள்வியில் உள்ளதை கூறி பயமுறுத்துவார்கள். ஆகவே இது சம்பந்தமாக கைமுட்டி அடிப்பவர்கள் பயப்படத் தேவையில்லை. சக்தி எல்லாம் வீணாகாது. என்ன, அடிக்கடி கைமுட்டி அடித்தால் உங்கள் காதுகள் கீழே விழுந்து விடும். கடைசி வரிக்கான அடிக்குறிப்பு இவாறு கூறுகிறது. “பயப்படாதீர்கள் இது சும்மா விளையாட்டுக்கு கூறியது”. >>
ராகவன் ஐயா,
இது தவறான பதில்.

இன்றைய அறிவியல் விளக்க முடியாத சில விஷயங்கள் உலகில் உண்டு.

அறிவியல் ரீதியாக விந்து வீணாவதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்பது இன்றைய அறிவியல் அறிந்த ஒன்று;ஆனால் இன்றைய அறிவியல் இன்னும் அறியாத விதயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் அல்லவா?

மில்கி வே என அறிவியல் அறிந்த உண்மையை சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அண்டப் பகுதியின் உண்டப் பெருக்கம்;அளப்பரும் காட்சி எனச் சொல்லிச் சென்றார்.

அது போலவே விந்து சமாச்சாரங்களைப் பற்றியும் திருமந்திரம் பேசுகிறது;100 ரத்தத்துளிகள் சேர்ந்து ஒரு துளி விந்து உருவாகிறது என்பது விந்து வீணாக்கப் படக் கூடாது என்ற கருத்துப் பற்றியே கூறப் பட்டது.

வீணாக்கப் படாத பட்சத்தில் விந்து மீண்டும் உடலில் கலந்து உடலை உரமாக்குகிறது.

விந்து வீணாக்காதவர்களின் உடல் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டு வீரியம் பெற்று விளங்குகிறது;மாறாக கரமைதுனப் பழக்கம் இருப்பவர்களின் உடல் விரைவில் நொந்து வீரியமற்றுக் கெடுகிறது.அவர்களின் குழி விழுந்த கண்களும் பஞ்சடைத்த விழிகளும் டொக்கு விழுந்த உடலும் இதை எளிதாக உணர்த்தும்.எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற மொழிவழக்கு வந்தது.

மாறாத பெண்ணுடன் அளவான நீண்ட கால உடலுறவின் மூலம் ஆண் பெண்ணின் சுக்கில சுரோனிதங்கள் ஒத்திசைந்து உடல் ஆக்கம் பெறுகிறது.(உடலுறவின் போது பெண்ணின் திரவங்கள் சில சிறிய அளவில் ஆணிலும் கலக்கின்றன;எனவேதான் மேற்கூறிய கூற்று ஏற்பட்டது)

தரவுகளுக்கு திருமந்திரம்,சித்தர் பாடல்கள்,சித்பவானந்தரின் எதிர்கால இந்தியா போன்ற புத்தகங்களை நாடலாம்.

ஏற்கனவே பல பிழையான கருத்தாங்கங்களால் நொந்து வரும் இளையர்களை மேலும் நசிய வைக்கும் இது போன்ற கருத்துக்களை அறுபது வயது கடந்த நீங்கள் கூறாமலிருப்பது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒன்று.

Wednesday, October 1, 2008

"சில வெளிப்படையான எண்ணங்கள்"

"சில வெளிப்படையான எண்ணங்கள்"

நன்று ராகவன் அவர்களே..

உங்கள் இந்தப் பதிவின் அனைத்தையும் வரவேற்கிறேன்,ஒன்றைத் தவிர..

>>பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். >>

இந்த கூற்றுக்கும்,விஜய் தொலைக்காட்சியில் உளறிய அந்த அய்யங்கார் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரு இனத்துக்கு எதிரான அரசு ரீதியான ஒடுக்குதல்கள்,அது பார்ப்பனரோ அல்லது வேறு இனமோ,சுத்த அயோக்கியத்தனம் என்பதுதான் என் நிலைப்பாடு..

ஆனால் ஒரு சாதியில் பிறந்தேன் என நான் பெருமைப்படுகிறேன் என்ற கூற்றில் மறைமுகமான சாதீய விதயங்கள் சுட்டப் படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்தே இக்கூற்றை முன் வைக்கிறீர்களா?

அந்தணராகப் பிறப்பதில் எந்தப் பெருமையும் இல்லை;அந்தணராக வாழ்ந்தால் அதில் பெருமை இருக்கிறது.அந்தணர் என்பவர் அறவோர் என்கிறது தமிழ்நீதி.

அந்தணராகப் பிறந்ததாலேயே நான் அறவோன் என்பதல்ல அர்த்தம்;அறவோனாக வாழ்வதால் நான் அந்தணன் என்பதே பொருள்,அவன் புலையனாகப் பிறந்திருந்தாலும் கூட!

யார் பிராமணன் புத்தகத்தில் சோவும் கூட இதையே சுட்டுகிறார்..

பலவற்றில் ஆழ்ந்து யோசிக்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை சொற்றொடரை உபயோகித்தீர்கள் என அறியேன்..

Tuesday, September 30, 2008

என்றே அண்ணா அன்றே சொன்னார்

என்றே அண்ணா அன்றே சொன்னார்
ஒரு சீரியஸ் விதயம் தொட்டிருக்கிறீர்கள்.

இதற்கான வேர்கள் சுதந்திர இந்தியாவின் தொழிற்கொள்கையிலிருந்து தொடங்குவதாக எனக்குப் படுகிறது.குரு சரன் தாஸின் இந்தியா அன்பவுன்ட் ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்...

எல்லாமே அரசு சார்ந்த தொழில்களாக மாறும் போது பெரும்பான்மை மக்கள் சம்பளக் காரர்களாக மட்டுமே மாறும் நிலை வருகிறது.

மக்கள்தொகை விகிதம் இந்த வேலையளிக்கும் விகிதத்தை மீறும் போது இல்லாமை அதிகரிக்கிறது.

வேலைகள் குறையும் போது அது சார்ந்த போட்டிகள்,பாகுபாடுகள்,இந்தப் பாகுபாடுகளை தங்களுக்குச் சாதகமாக வளைக்கும் சில கட்சிகள் என எல்லாமே ஒரு விஷ வட்டத்திற்குள் போகிறது.

இதன் விளைவே எதிர்மறை சிந்தனைகள் பலம் பெறுவதும்,கொண்டாடப்படுவதும்..

பரவலான சுயதொழிலாளர்கள் பெருகினால் இந்த நிலை இருக்காது என்பது ஒரு சிந்தனை.இதனோடு கிராமம் சார்ந்த தொழில்கள் நசிந்து போனது...

நகரங்கள் வளர்ந்த வேகத்தில் நான்கில் ஒரு பங்கு கிராமங்கள் வளர்ந்திருந்தால் இத்தகைய அவலங்கள் இல்லாதிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியவில்லை.

தேட...