Sunday, January 24, 2010

"அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!"

"அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!"



கிரி,உங்கள் பார்வையில் நான் வேறுபடுகிறேன்.
நான் கடவுள் உருவாக்கத்திற்காக பாலா நிறைய சிரமம் எடுத்துக் கொண்டிருக்கலாம்;மற்றபடி சமூகத்தை பிரதிபலிக்கிறேன் பேர்வழி என்று சமூகத்தின் அழுக்குகளைத் தேடிப் பிடித்து பொது ரசனைக்குள்ளாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.அதை புண்'நவீனத்துவம் என்று பலர் சொன்னாலும்!
சினிமா என்பது ஒரு கலை வடிவம்;ஒரு கலை அல்லது அதன் வெளிப்பாடு மனிதனின் நல்ல மென்மையான ரசனைகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டும்.அந்த வகையில் அகோரி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை மனிதத்தனத்தை மீறி கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பொதுப்பார்வைக்கு வைத்த பாலா நிச்சயம் ஒரு இயைந்த-balanced-மனநிலையில் இருக்கும் நபர் அல்ல என்றே நானும் நினைக்கிறேன்...மற்றும் அவரது எல்லா படங்களும் மனச்சிதைவடைந்த மனிதர்களையே சுற்றிச் சுழல்கிறது;அவருக்கே தெரியாமல் அவரது உள்ளார்ந்த மனம் எங்காவது சிதைவுற்றிருக்கலாம்...எனவே நான் கடவுளுக்கு விருது என்பது தவறான முன்னுதாரணம்;இதைவிட வன்முறை மற்றும் சமூக வன்முறைகளை முன்னிலைப்படுத்தும் படங்களை சிந்தனையில் வளர்க்க டைரக்ஷன் கனவில் இருக்கும் பல துணை இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் தயாராவதை இந்த விருது ஊக்கப்படுத்தியிருக்கிறது;இன்னும் பல அகோரி கதைகளுக்கு தமிழ்க்களம் தயாராக வேண்டும் !

இரண்டாவதான வாரணம் ஆயிரம் பற்றியது.காஷ்மீர் என்று டில்லி காட்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்(சிறுவன் கடத்தல்...தில்லிதான் என்று நினைக்கிறேன்)
வா.ஆ.படம் முழுவதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி விரவியிருந்தது.அப்பா ஒரு குடும்பப் பிணைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப் படுத்த,மகன் தன் முனைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது;அந்த முனைப்பிற்காக முயற்சியின் எந்த எல்லைக்கும் இருவரும் செல்கிறார்கள்.இந்த இரண்டு டைமன்ஷனில் அப்பாவை பல விதயங்களில் வரித்துக் கொள்ளும் மகனின் விவரிப்பில் படம் செல்கிறது.

எனக்கு மிகவும் பிடித்து ரசித்தேன்..டில்லிக்காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் எனினும் ஒரு தாங்க முடியாத இழப்பைத் தாங்குவதற்கு செய்யப்படும் மனிதனின் முயற்சியாக அதைப் பார்க்கும் போது இயல்பாகவே இருந்தது.
நினைத்தவுடன் கடன்களை அடைக்க முடிவதும்,நினைத்த உடன் ராணுவத்தில் வேலை கிடைப்பதும் லாஜிக் ஓட்டைகள் என்றாலும் அவை தரும் நேர்மறை எண்ணங்களுக்காக அவற்றை மன்னிக்கலாம்!

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கலை அனுபவம் பார்வையாளனின் சிந்தனையில் ஒரு புள்ளியாவது ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது தான் சார்ந்த சமூகத்தின் மீதான தனது பார்வையை நெகிழ்த்தியிருக்க வேண்டும்;இவை முறையே பாசிட்டிவ் சினிமா அல்லது நெகட்டிவ் சினிமா என்ற இரண்டு பரந்த வகைப்படுத்தலுக்குள் வந்துவிடும்.

ஆனால் நான் கடவுள் இரண்டாவது வகையின் போர்வையில் வந்த ஆனால் நொந்து போக வைக்கும் ஒரு படம்.

சாரி..கொஞ்சம் நீண்டு விட்டது !

No comments:

தேட...