Thursday, July 10, 2014

ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...

ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...


பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள்  'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் உங்கள் கட்டுரையின் பொத்தாம் பொதுவான மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய கிண்டல் ஒத்துக் கொள்ள இயலாதது. ஆங்கில(அலோபதி) மருத்துவ முறை திட்டமிட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளைக் கிட்டத்தட்ட சிதைத்து விட்டது. ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் தீர்வற்ற சில நோய்களுக்கு இந்திய பாரம்பரிய முறைகளில் தீர்வு இருப்பதை நான் நேரடியாவும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப நிகழ்வு மூலமும் உணர்ந்திருக்கிறேன்.

இது போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அமையாமல் போன 'நிறுவனப் படுத்தலில்' தான் குறை இருக்கிறதே தவிர அந்த மருத்துவ முறைகளில் அல்ல.
அலோபதியில் 5000 ரூபாய் தேவைப் படும் சிகிச்சைக்கு 500 ரூபாய்க்குள் சித்த மருத்துத்தில் தீர்வு இருக்கிறது. நமது வாழ்வியல் அறிவுக் கருவூலத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை நமது இன்றைய சமூகத்திற்கு இருக்கிறது.

எனது வகுப்புத் தோழன் மற்றும் மீடியாவில் பணியாற்றும் கௌதமின் கட்டுரையையும், மூலிகைமணி கண்ணப்பரின் நம்நாட்டு மூலிகைகள் கட்டுரைகளையும் நேரம் உண்டாக்கிக் கொண்டு அவசியம் படியுங்கள்.

தயவு செய்து உங்களைப் போன்ற 'படித்தவர்கள் தோற்றம் கொண்டவர்கள்' கூட பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதை செய்யாதீர்கள்.

இந்தியாவைத் தவிர பல ஆசிய நாடுகளில் தத்தம் பாரம்பரிய மருத்துவ  முறைகளைப் பேணி வளர்க்கிறார்கள்;அவற்றால் பயன் பெறுகிறார்கள்.

tcm மருத்துவ முறைகளைப் பற்றி இணையத்தில் தேடுங்கள்,சிறிது தெளிவும் சீன, சீனம் சார்ந்த நாடுகள் அவற்றை எப்படிப் பேணுகின்றன என்பதும் தெரியும்.

Sunday, September 22, 2013

கம்பன் – மதுவும் மாமிசமும்..

கம்பன் – மதுவும் மாமிசமும்..


அன்புள்ள நண்பரே,
உலக சரித்திரத்தில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை ஆக்கிய இலக்கியகர்த்தாக்கள் எல்லோரும் தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அந்த சமூகத்தை ஆற்றுப் படுத்துவதையும் தனது கடமையாக் கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள்.

சில வெகு சிறப்பான இலக்கியங்கள்(திருமந்திரம் போன்றவை) சமூகத்தையும் தாண்டி இகவாழ்வு தாண்டிய விதயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றன.ஆனால் அவ்வித இலக்கியங்கள் உலக வரலாற்றில் வெகு சிலவே;அவற்றிலும் அவை தமிழ் மொழி தாண்டி வேறு மொழிகளில் நிலவுகின்றனவா என்பது மிகுந்த ஆய்வுக்குரியது.

உலகில் உயிர் தோன்றிய காலம் முதல் மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதனும் தன் இருப்புக்கான தேவைகளையும் கருவிகளையும் ஓயாது கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்கிறான்; அதுவே வாழ்வியல் சிறப்புகளாகவும் அறிவியல் அதிசயங்களாகவும் இன்றுவரை மனித குலத்தை தேர்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.

ஆனால் உடல் தாண்டிய விதயங்களைப் பற்றிப் பேசிய நூல்கள் இலக்கியங்கள் மிகக் குறைவே; அவ்வாறு பேசிய நூல்கள் பெரும்பாலும் இகவாழ்வில் வாழும் முறைகள் பற்றியும் அவ்வப்போது பேசிச் சென்றிருக்கின்றன.

மனிதன் உட்கொள்ளும் உணவுக்கும் அவனது சிந்தனைக்கும் விளைவான செயலுக்குமான விளைவை பல சிந்தனையாளர்கள் அறிவியலாளர்கள் இந்தக் காலத்தில் விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.

அவ்விதமான விளைவைப் பற்றிய சிந்தனைகளையும், மேற்சொன்ன பேரிலக்கியங்களில் தமிழ் பெருமகனார்கள் அவ்வப்போது தொட்டுச் சென்றிருக்கிறாரகள்.அவ்விதமான செய்திகள் தமிழில் கிடைப்பது தமிழனாகப் பிறந்தவனின் கொடை.

மனிதனின் வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள் சீன மற்றும் தமிழ் இலக்கியங்கள் தவிர வேறு எவற்றிலும் பேசப் படவில்லை என்பது நான் அறிந்த வரை உண்மை.ஆனால் உடல் தாண்டிய உயிர் தாண்டிய ஆன்மாவைப் பற்றிய விதயங்களைத் தொடும் போது மட்டுமே இவ்விதமான சிந்தனைக் கொடைகள் சமூகத்திற்குக் கிடைக்கின்றன.

அந்தக் கொடையை, இலக்கியங்கள்,நிலவிய காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது என்ற பொத்தாம் பொதுவான அடைப்புக்கள் வைப்பது, நமது விளக்க அறிவுக்கு நாமே செய்து கொள்ளும் தடை என்பது எனது தாழ்மையான கருத்து.

Tuesday, June 11, 2013

செய்து காட்டுவார் மோதி - பத்ரி

செய்து காட்டுவார் மோதி - பத்ரி


நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை எழுத நினைத்த அத்தனை விதயங்களையும் தொட்டு எழுதியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள்...

பத்ரி, இதை உங்கள் தளத்திலும் பகிருங்கள்..

கடைசி மஞ்சள் வரி கமெண்ட் பத்ரியினுடையதா அல்லது இட்லி வடையினுடையதா?

ஆர்எஸ்எஸ் காரர்கள் படித்துத் தெளியவேண்டியது எதுவும் இல்லை;ஆர்எஸ்எஸ் மோடியின் தேர்வில் தெளிவாகவே இருக்கிறது; அத்வானியைச் சமாதானப் படுத்த வேண்டிய மட்டும் முயற்சி செய்வார்கள்,ஆனால் கோவா முடிவில் மறு பரிசீலனை இருக்காது..அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..

அத்வானி கடைசிக் காலத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, தனிமைப் படுத்தப் பட்டு விட்டார் என்றே தெரிகிறது..

Saturday, April 27, 2013

காந்தி எனும் மனிதர் - பிடிவாதம்



காந்தி எனும் மனிதர் - பிடிவாதம்




காந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..

ஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.

இன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது !

இந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..

1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.

2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் !

நன்றி.




| * | அறிவன்#11802717200764379909 | * |said...
காந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..

ஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.

இன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது !

இந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..

1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.

2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் !

நன்றி.

Saturday, January 19, 2013

ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்


ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்




ஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண்டும். இது தனது நண்பர்களையோ அல்லது வேண்டயவர்களையோ விமர்சிக்கும் வேளையிலும் பொருந்தும்.

நீங்கள் நடிகர் சிவகுமாருடன் பழக்கம் உள்ள, நண்பர் என்று சொல்லத்தக்க அளவில் உள்ளவர் என்பது உங்கள் பல பதிவுகளில் தெரிகிறது.உங்களது நட்பைப் பாராட்டும் நேரத்தில் ஒரு விமர்சகராக நீங்கள் சாய்கிறீர்கள் என்பதை சுட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர் சிவகுமார் ஒரு பன்முகத் திறமையாளர்;ஆனால் எந்த ஒரு துறையிலும் ஒரு சாதனையாளர் அல்ல.

நடிகர் என்று எடைபோட்டால் அவரை விட சந்திரபாபு கூடத் திறமையானவர்; ஒரு பேச்சாளர் என்று எடுத்தால் அறிவொளியின் அருகில் கூட வரமாட்டார்; ஒவியராக நீங்கள் கோபுலுவுக்கு அருகில் சிவகுமாரைக் கொண்டு செல்வது, எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.இதில் சிவகுமாரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறாயா என்று என்னைக் கேட்கிறீர்கள்..நீங்கள் கோபுலுவின் ஓவியங்களைக் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

சிவகுமாரின் ஓவியங்களை கோட்டோவிய வடிவங்களில்,நுண்மைச் சிறப்பு வகையில் சேர்க்கலாம்;கோபுலு நீர்நிறம் மற்றும் எண்ணெய்வண்ண ஓவியங்களில்-வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில்- நுண்மை வகையில் உச்சங்களைத் தொட்டவர்.(அவரது ஓவியங்களை பலவற்றைப் பார்க்க நேரிடா விட்டாலும் நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு கோபுலுவைப் பற்றி எழுதிய கட்டுரையைத் தேடி வாசியுங்கள்!). சிவகுமார் ஒரு நல்ல ஓவியர், அவ்வளவே.

ஒரு நல்ல தந்தை;ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த நடிகர் என்பதெல்லாம் 'சாதனை' என்ற வட்டத்தில் அவரைச் சேர்ப்பதற்குப் பொருத்தமானவை அல்ல.

சிவகுமாரை எனக்கும் பிடிக்கும்; ஒரு 'பேக்கேஜ்' ஆக அவர் ஒரு வியப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர். ஆனால் நிச்சயம் சாதனையாளர் அல்ல.

இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எனினும் சொல்லாமலிருக்க முடியவில்லை.

விமர்சகராக அறியப்பட முடிவுசெய்தால் அதில் உச்ச பட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது கொள்கைப்பாடு காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. நன்றி.


***********

அடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..எண் கவனகம் திருக்குறள் முனுசாமி பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா?

சிவகுமாருக்கு நினைவாற்றலுக்காக பத்ம விருது கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொடுப்பது?!

உங்களுடைய பதில்கள் சிறுபிள்ளை வாதம் போலிருக்கிறது ! 
:)

**********

முனுசாமி என்று தவறாக எழுதிவிட்டேன்; அவரது பெயர் இராமையா என்று நினைக்கிறேன்.

******


||சிலருக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் புதிதாக எதையாவது படிக்கலாம். அல்லது புதிதாக எதையாவது எழுதலாம்'என்று அடிக்கடி சுஜாதா சொல்லுவார். அது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது.||

:) மிகச் சிறந்த தப்பித்தல் மனோபாவம்..

எனக்கும் உங்களது விமர்சனப் பதிவுகளைப் பொறுத்த வரை நீங்கள் சொல்லியிருக்கும் மேற்கண்ட கருத்து சரியானதாகவே தோன்றுகிறது..நன்றி.




Tuesday, November 20, 2012

சைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்


சைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்





  • [[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.
    இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !//
    இது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே!]]

    யோகன், நான் கூறியது அசைவர்களின் வாதம் பற்றி...அசைவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை நியாயப் படுத்தவே இவ்வளவு வன்மத்துடன்(இல்லையென்று சொல்லாதீர்கள்!) வாதங்களை முன்வைக்கிறார்கள்.பெரும்பாலும் அவை தனிப்பட்ட தாக்குதலாக இல்லாவிட்டால், அவற்றிற்கு மிக அருகில் செல்கின்றன.

    சைவ உணவின் அடிப்படை உலகளாவிய அன்பு..வலி உணரும் எந்த ஒரு உயிரியையும் துன்புறுத்தக் கூடாது என்ற அன்பின் அடிப்படையில் வந்தது.

    அந்த அன்பு வளர்ந்து அருளாகும் போது ஆன்மிக முன்னேற்றமும், மனதளவில் உயர்நிலையடையும் நோக்கமும் முகிழ்கின்றன.

    ஆன்மிகமும், ஆன்ம விடுதலையும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று நினைக்கும் மக்கள் தொகை பெரும்பான்மையாகி விட்டது..அவர்களை எந்த வாதத்தினாலும் மாற்றுதல் அரிது.

    உணவு என்ற அளவில் அவரவர் விருப்பம் என்றாலும், உண்ணும் உணவின் தன்மை சிந்தனையின்,உயிரின், ஆன்மாவின் தன்மையைப் பாதிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இது பொய் என்று சொல்பவர்களைத் திருத்துவது என் வேலையல்ல.

    நான் நற்கல்வி கற்றால், நல்ல வேலையைத் தேடிக் கொண்டால் உலகாதாய அளவில் என்னுடைய முன்னேற்றம் நன்றாக இருப்பதால் அதை முயற்சிக்கிறேன். இதே போல ஆன்ம நிலைக்கான முன்னேற்றத்திற்கான சில பயிற்சிகள் அவசியம்; அவற்றில் சைவ உணவுப் பழக்கம் முதன்மையானது.

    இவற்றைக் கைக் கொள்வோர் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவது அவசியம் என்று வற்புறுத்துவது இல்லை; வேண்டுமானால் அறிந்ததை சொல்லலாம்..அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு !

    ஆனால் சைவ உணவுப் பழக்கமுடைய குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வரும் பெற்றோர்கள் மனதிற்குள் அழுகிறார்கள்..இவர்களில் பலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கிறேன்..

    குழந்தைகள் சம்பாத்தித்து ஆயிரக் கணக்கில் பணம் கொண்டு வந்து கொடுப்பதால் அவர்கள் செய்யும் எந்த செயலும் சரியானது என்பது உண்மையாகி விடாது; ஆனால் பெற்றோர்கள் வாயற்று இருக்கிறார்கள்..

    நான் சொன்னது போல அவரவருக்கான கதி அவரவரால் தீர்மானிக்கப் படுகிறது!
    Delete
  • @ அறிவன்.

    நான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி. இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள், அல்லது கத்திரிக்காயை பறிக்கும் பொது அந்த செடி வழியால் துடிக்குமே அதற்க்கு என்ன செய்வாய் என்பார்கள். முடியலை...........
  • [[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள்,]]

    கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எங்குமே மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை..

    என்னைப் பொறுத்த வரை ஆன்மிகம் வேறு..மதம் வேறு...
    இந்து மதம் என்ற ஒரு கட்டமைப்பையும் நான் புறந்தள்ளுபவன்..ஆனால் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.

    வளர்த்தினால் உங்களுக்குமே குழப்பம் வரலாம். :))
  • Sunday, October 28, 2012

    இசையறியும் பறவை


    இசையறியும் பறவை




    [[ வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.]]

    இல்லை.
    இராம காதை வால்மீகியால் எழுதப்பட்டு ஏற்கனவே புகழ் பெற்ற ஒன்று.

    கம்பன் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகியின் இராமாயணம் நாடெங்கும் படிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஒன்று;ஒரு மாபெரும் காவியம் இயற்ற வேண்டும் என்ற எண்ணதில்தான் கம்பன் இராமாவதாரத்தை எழுதப் புகுந்தான்.

    குலோத்துங்கள் உதவி செய்தாலும், ஒட்டக் கூத்தர் போன்ற அரன்மனைப் புலவர்களின் இடையூறு வேறு அவனைப் படுத்தியது.

    இந்த நிலையில், பின் வரக் கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காவியத்தை எழுதப் புகுந்த கம்பன் இராமனின் கதையை எடுத்துக் கொண்டதும், அதற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதும் சிந்தனைக்குரியது.

    அவையடக்கத்திற்காக கம்பன் மேற்கண்ட பாடல்களை எழுதியிருந்தாலும், கம்பனின் நோக்கம் வால்மீகி எழுதிய இராமனின் வாழ்க்கைக் கதையை எழுதுவது மட்டுமல்ல.

    தமிழ்ச் சமூகத்திற்கு ஒப்பற்ற ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் காவியத்தின் ஊடாகத் தரும் ஒரு பெரும் பொறுப்பை ஏற்கொண்டே கம்பன் காவியத்தைத் துவங்கியிருக்க வேண்டும்.

    சட்டம் பயில்பவர்களுக்கு எளிதில் புரியும் ஒரு தத்துவம் -இன்ப்ளிகேஷன் பிஹைன்ட் த லா- என்ற ஒன்று. ஒரு சட்ட விதியில் இரு சாரார் மல்லுக் கட்டும் போது, நீதி மன்றங்கள் சட்டம் சொல்லும் நேரடிப் பொருளைத் தாண்டி, சட்டம் இயற்றப்பட்ட நோக்கம்,தத்துவம் என்ற தளங்களுக்குள் செல்கிறது.

    அதைப் போலவே கம்பனின் காவியத்திற்கும் ஒரு நோக்கம், ஹிட்டன் அஜன்டா இருக்கிறது.

    தமிழர்களின் வாழ்வு நெறியைச் செம்மையாக்கும் பொருட்டு,கொல்லாமை,பிறன்மனை விழையாமை, தீயன பொறுக்காமை(தீயன பொறுத்தி நீ-வாலி வதைப் படலம்), இரு மாதரை சிந்தையாலும் தொடாமை( இந்த இப் பிறப்பில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய்-சுந்தர காண்டத்தின் சீதை, அனுமனிடம்), ஒரு அண்ணன், ஒரு மகன், ஒரு சீடன், ஒரு அரசன் என அனைத்து வாழ்வின் நியதிகளையும், ஒரு மனிதனாக இருந்து இராமன் மற்றும் பல பாத்திரங்கள் வாயிலாக விளக்கிச் செல்கிறான் கம்பன்.

    கம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய!!!

    (கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட்டு கம்பனைத் தொடருங்கள்)

    :))

    [[குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

    ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன்]]

    இதிலும் அரசனான குலோத்துங்கள் உங்களைப் பாடாமல், சடையப்பனைப் பாடல்களிள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன் என்று அரசனிடமும், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறைதான் உங்களைச் சொல்லியிருக்கிறான் கம்பன்,நீங்கள் செய்த உதவிகளெத்தனை, அரசனை விட கம்பனுக்கு புரவலாக இருந்து அவனை ஆதரித்த உங்களை நூறு பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டிருக்க வேண்டாமா என்ற சடையப்பரிடமும் ஏற்றி விட்டதாகக் கூறும் செவிவழிக் கதைகள் உண்டு! கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் ! என்றிருந்ததாம்.
    :))

    தேட...