Friday, November 14, 2008
"ஆடவர் குணங்கள்"
பேராண்மை மிக்க ஆண்கள் பெண்களின் அனுக்கத்திற்குக் கிடைப்பதில்லை என்பது சரியான கருத்துதானா?
பேராண்மை மிக்க ஆண்கள் அனைவரும் விவேகானந்தராகவோ,பெரியாராகவோதான் இருக்க முடியும் என்பது ஒரு மூடிய சிந்தனையாகத் தோன்றவில்லையா?
அவர்கள் வெளித்தெரியாமல் போகிறார்கள் என்பதாலேயே இவ்வகை கல்யாணகுண ஆண்கள் இல்லை என்பது அர்த்தமில்லையே!வேண்டுமானால் அவர்களின் விகிதாசாரம் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
அதற்கும் பிள்ளைகளின் வளர்ப்பின் மூலம்,பெண்களே ஒரு வகையில் காரணம் என்பதுதான் வாழ்வின் விநோதம்.ஆண் என்னதான் நேரம் ஒதுக்கினாலும் பரினாம இனக் கவர்ச்சி விதிகளின் படி ஆண்குழந்தைகள் பெருமளவு தாயின் கவன ஈர்ப்பிலேயே வளர விரும்புகிறார்கள் என எண்ணுகிறேன்.
என் தாயும் கூட சிறுவயதில் என்னைத் கண்டிக்க நேர்ந்தால்,"உன் பெண்டாட்டி வந்து,பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறாள் பார் இது போல்,என என்னைத்தான் நோவாள்,எனவே இது போல செய்யாதே,என...
எனவே நல்ல கணவர்கள் உருவாவது நல்ல தாய்களாலேயே சாத்தியம் என நினைக்கிறேன்.
Note:Please remove word verificaiton in commment moderation settings
Thursday, November 13, 2008
"டோண்டு பதில்கள் - 14.11.2008"
>>1. ஒரு சொட்டு விந்து என்பது நூறு சொட்டு ரத்தத்துக்கு சமமாமே? உண்மையா? விளக்கவும்.பதில்: உண்மையல்ல. காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல. அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான், ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவைதான்.உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடுகின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான். நன்றி ஞாநி. இந்த விஷயத்தில் "Everything you wanted to know about sex, but were afraid to ask" என்ற தலைப்பில் சமீபத்தில் 1972-வாக்கில் வந்த புத்தகத்தில் இது சம்பந்தமாக இவ்வாறு கூறியிருப்பார்கள். கைமுட்டி அடிப்பவர்களை உங்கள் கேள்வியில் உள்ளதை கூறி பயமுறுத்துவார்கள். ஆகவே இது சம்பந்தமாக கைமுட்டி அடிப்பவர்கள் பயப்படத் தேவையில்லை. சக்தி எல்லாம் வீணாகாது. என்ன, அடிக்கடி கைமுட்டி அடித்தால் உங்கள் காதுகள் கீழே விழுந்து விடும். கடைசி வரிக்கான அடிக்குறிப்பு இவாறு கூறுகிறது. “பயப்படாதீர்கள் இது சும்மா விளையாட்டுக்கு கூறியது”. >>
ராகவன் ஐயா,
இது தவறான பதில்.
இன்றைய அறிவியல் விளக்க முடியாத சில விஷயங்கள் உலகில் உண்டு.
அறிவியல் ரீதியாக விந்து வீணாவதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்பது இன்றைய அறிவியல் அறிந்த ஒன்று;ஆனால் இன்றைய அறிவியல் இன்னும் அறியாத விதயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் அல்லவா?
மில்கி வே என அறிவியல் அறிந்த உண்மையை சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அண்டப் பகுதியின் உண்டப் பெருக்கம்;அளப்பரும் காட்சி எனச் சொல்லிச் சென்றார்.
அது போலவே விந்து சமாச்சாரங்களைப் பற்றியும் திருமந்திரம் பேசுகிறது;100 ரத்தத்துளிகள் சேர்ந்து ஒரு துளி விந்து உருவாகிறது என்பது விந்து வீணாக்கப் படக் கூடாது என்ற கருத்துப் பற்றியே கூறப் பட்டது.
வீணாக்கப் படாத பட்சத்தில் விந்து மீண்டும் உடலில் கலந்து உடலை உரமாக்குகிறது.
விந்து வீணாக்காதவர்களின் உடல் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டு வீரியம் பெற்று விளங்குகிறது;மாறாக கரமைதுனப் பழக்கம் இருப்பவர்களின் உடல் விரைவில் நொந்து வீரியமற்றுக் கெடுகிறது.அவர்களின் குழி விழுந்த கண்களும் பஞ்சடைத்த விழிகளும் டொக்கு விழுந்த உடலும் இதை எளிதாக உணர்த்தும்.எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற மொழிவழக்கு வந்தது.
மாறாத பெண்ணுடன் அளவான நீண்ட கால உடலுறவின் மூலம் ஆண் பெண்ணின் சுக்கில சுரோனிதங்கள் ஒத்திசைந்து உடல் ஆக்கம் பெறுகிறது.(உடலுறவின் போது பெண்ணின் திரவங்கள் சில சிறிய அளவில் ஆணிலும் கலக்கின்றன;எனவேதான் மேற்கூறிய கூற்று ஏற்பட்டது)
தரவுகளுக்கு திருமந்திரம்,சித்தர் பாடல்கள்,சித்பவானந்தரின் எதிர்கால இந்தியா போன்ற புத்தகங்களை நாடலாம்.
ஏற்கனவே பல பிழையான கருத்தாங்கங்களால் நொந்து வரும் இளையர்களை மேலும் நசிய வைக்கும் இது போன்ற கருத்துக்களை அறுபது வயது கடந்த நீங்கள் கூறாமலிருப்பது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒன்று.
Wednesday, October 1, 2008
"சில வெளிப்படையான எண்ணங்கள்"
நன்று ராகவன் அவர்களே..
உங்கள் இந்தப் பதிவின் அனைத்தையும் வரவேற்கிறேன்,ஒன்றைத் தவிர..
>>பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். >>
இந்த கூற்றுக்கும்,விஜய் தொலைக்காட்சியில் உளறிய அந்த அய்யங்கார் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஒரு இனத்துக்கு எதிரான அரசு ரீதியான ஒடுக்குதல்கள்,அது பார்ப்பனரோ அல்லது வேறு இனமோ,சுத்த அயோக்கியத்தனம் என்பதுதான் என் நிலைப்பாடு..
ஆனால் ஒரு சாதியில் பிறந்தேன் என நான் பெருமைப்படுகிறேன் என்ற கூற்றில் மறைமுகமான சாதீய விதயங்கள் சுட்டப் படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்தே இக்கூற்றை முன் வைக்கிறீர்களா?
அந்தணராகப் பிறப்பதில் எந்தப் பெருமையும் இல்லை;அந்தணராக வாழ்ந்தால் அதில் பெருமை இருக்கிறது.அந்தணர் என்பவர் அறவோர் என்கிறது தமிழ்நீதி.
அந்தணராகப் பிறந்ததாலேயே நான் அறவோன் என்பதல்ல அர்த்தம்;அறவோனாக வாழ்வதால் நான் அந்தணன் என்பதே பொருள்,அவன் புலையனாகப் பிறந்திருந்தாலும் கூட!
யார் பிராமணன் புத்தகத்தில் சோவும் கூட இதையே சுட்டுகிறார்..
பலவற்றில் ஆழ்ந்து யோசிக்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை சொற்றொடரை உபயோகித்தீர்கள் என அறியேன்..
Tuesday, September 30, 2008
என்றே அண்ணா அன்றே சொன்னார்
ஒரு சீரியஸ் விதயம் தொட்டிருக்கிறீர்கள்.
இதற்கான வேர்கள் சுதந்திர இந்தியாவின் தொழிற்கொள்கையிலிருந்து தொடங்குவதாக எனக்குப் படுகிறது.குரு சரன் தாஸின் இந்தியா அன்பவுன்ட் ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்...
எல்லாமே அரசு சார்ந்த தொழில்களாக மாறும் போது பெரும்பான்மை மக்கள் சம்பளக் காரர்களாக மட்டுமே மாறும் நிலை வருகிறது.
மக்கள்தொகை விகிதம் இந்த வேலையளிக்கும் விகிதத்தை மீறும் போது இல்லாமை அதிகரிக்கிறது.
வேலைகள் குறையும் போது அது சார்ந்த போட்டிகள்,பாகுபாடுகள்,இந்தப் பாகுபாடுகளை தங்களுக்குச் சாதகமாக வளைக்கும் சில கட்சிகள் என எல்லாமே ஒரு விஷ வட்டத்திற்குள் போகிறது.
இதன் விளைவே எதிர்மறை சிந்தனைகள் பலம் பெறுவதும்,கொண்டாடப்படுவதும்..
பரவலான சுயதொழிலாளர்கள் பெருகினால் இந்த நிலை இருக்காது என்பது ஒரு சிந்தனை.இதனோடு கிராமம் சார்ந்த தொழில்கள் நசிந்து போனது...
நகரங்கள் வளர்ந்த வேகத்தில் நான்கில் ஒரு பங்கு கிராமங்கள் வளர்ந்திருந்தால் இத்தகைய அவலங்கள் இல்லாதிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியவில்லை.
Wednesday, September 17, 2008
தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை
தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை
அறிவன்#11802717200764379909 said...
நண்பரே..உங்கள் வாதம் சரியானதுதானா?
அக்காலத் தமிழகம் கற்புமனம்,களவுமனம் இரண்டும் நிகழ்ந்த களம்.
சீதை ராமனைப் பார்க்கிறாள்;விரும்புகிறாள்..
வில் ஒடிக்கப்படுகிறது.
வில் ஒடித்தவன் யாரென்று நீலமாலை கூறுகிறாள்,கோமுனி உடன் வரு கொண்டல்' என...
சீதையும் ‘தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,ஆம் அவனே கொல்' என் ஐயம் நீங்கினாள்..
பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.
யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..
ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.
காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?
மனித மனத்தின்,எண்ணத்தின் வீச்சு அது;எண்ணுகின்ற எண்ணம் எல்லாம் செயல்படுத்தி விடுகிறோமா?
அதை பண்பாட்டுடன் முடிச்சிடுவது சற்று அதிகமோ எனத் தோன்றுகிறது.
ராமனின் நிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை;அவனும் மருகுகிறான்..
ஆனாலும் சமாதானமடைகிறான்,எப்படி?
நம் மனதில் தோன்றும் எண்ணம் கெட்டதாக இருக்க முடியாது என..ஆகும் நல்வழி,அல்வழி ஆகுமோ என் மனம் ...பைந்தொடி கன்னியே ஆகும்..எனவும் தனக்கே நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறான்.எனவே இருவர் நிலையும் மருகும் நிலைதானே??
******************************************************************************
அறிவன் சார்,
ராகவன் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.
நான் இலக்கியம் தொடர்பான பதிவுகள் போடுவது பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து அல்ல; முடிவுக்கு வருவதற்காக.
நீங்கள், குமரன், ராகவன், ரவிஷங்கர் போன்று சிலர் இருக்கிறீர்கள், திருத்த, கூடுதல் தகவல் சொல்ல, புதிய கோணம் காட்ட என்று.
//பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.
யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..
ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.
காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?//
இது எனக்குப் புதிய கோணமாகப் படுகிறது. நன்றி.
Thursday, September 11, 2008
"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"
"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"
ரத்னேஷ்,
நாளாக ஆக கலக்குகிறீர்கள்.
நீங்கள் தொட்டிருப்பது ஒரு முக்கியமான குறிப்பு.
இதற்கான சான்று/பண்பு தமிழ் மொழி/பண்பாட்டிலிருந்து வந்தது.
ஹிந்து மதம் என்ற ஒன்று பிற்காலத்தில் 'சமைக்கப்பட்டது' சமச்கிருதம் போல.
என்னுடைய தமிழும்,சிவமும்-இன்னபிறவும் தொடரில் இவற்றை முழுதாக அலசும் உத்தேசம் இருக்கிறது.
நேரமேலாண்மை பிரச்னைகளால் இத்தொடர் முடிவு படுவது தள்ளிப் போகிறது.
But,in all,an excellent posting.
Keep up your reading,than writing..you will turn to be an excellent writer & human in total.
kudos.
Tuesday, September 9, 2008
"ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்"
"ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்"
வால்பையன்,சரியான ஒரு நோக்கில் எழுதப்பட்ட ஒரு பதிவு.
நமது அரசியலில் அது திமுக வானாலும் சரி,அதிமுக வானாலும் தனி மனிதத் துதிதான் விஞ்சுகிறது.
கருணாநிதியோ,ஜெயலலிதாவோ ஒரு ஆட்சியின் தலைவர்கள்,அவர்கள் சறுக்கும் போது சுட்டவும்,குட்டவும் பத்திரிக்கையாளர் இருப்பார்,இருக்க வேண்டும்-அதுதான் ஜனநாயகம்.
ஏன் கருணாநிதியையே பற்றி எழுதுகிறார் என்றால்,அது தவிர்க்க இயலாதது-அவர்தான் ஆட்சியின் தலைவர்.
இதே ஞாநி ஜெ.ஆட்சியிலும் அவரை விமர்சித்து எழுதி இருக்கிறார்.
நீங்கள் சுட்டியபடி ஞானியின் கேள்விகளுக்கு மறுப்புகள் தான் வந்தனவே யொழிய பதில்கள் இல்லை.
இதே கதை தேசிய அளவிலும் அருண்ஷௌரியின் கேள்விகளுக்கும் ஏற்படுகிறது;நமது நிதி அமைச்சரிலிருந்து,பிரதமர் வரை யாரும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.
இவற்றை சுட்டினால் பார்ப்பனீயம்,பூணூல் நெளியும் என்று பிதற்றவே பெரும்பாண்மைக் கூட்டம் தயாராக இருக்கிறது.
60 களில் இருந்து தமிழக அரசியலின் சாபம்தான் இது !