Friday, March 21, 2008

தில்லை நந்தனாரும் அயோத்யா மண்டபமும்

தில்லை நந்தனாரும் அயோத்யா மண்டபமும்

/////முதலில் திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்ட பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் குலோத்துங்க சோழன் எனப்படும் அநபாய சோழன் ஆட்சியில் போர் ஏதும் இல்லாததால் கலை கதை கவிதை என்கிற ஆர்வத்தில் சீவக சிந்தாமணியை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தானாம். வேளாள சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சேக்கிழாருக்கு, அரசன் படிப்பது சமண இலக்கியமாயிற்றே என்கிற உறுத்தல். அவரிடம் சைவத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற, திருத்தொண்டர்களைப் பற்றி அளந்து விட வேண்டியதாயிற்று. மேல்விவரம் அறிந்து விளக்கமாகச் சொல்ல அவருக்கு அரசன் சுற்றுப் பயண ஏற்பாடுகள் செய்து கொடுக்க, அவர் சுற்றிச் சென்று தகவல் சேகரித்து வந்து எழுதி தில்லைக் கோயிலில் அரங்கேற்றிய நூல் தான் இது.///////

சைவத்தை மீட்டெடுக்க நடந்த ஒரு நிகழ்வாகவே வைத்துக் கொண்டாலும்,அதிலென்ன தவறு இருப்பதக நீங்கள் கருதுகிறீர்கள்?
களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?


மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.

பொதுவாக ஒருவன் நம்மைக் கொல்ல வரும் போது,அவனைக் தடுக்கும்,எதிர்க்கும்,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் எதிரியைக் கொல்லவும் தயாரான சூழலில்தான் யாரும் இருப்பார்கள்.
மேலும் திருமுறை நிகழ்வுகள் பலவற்றை கட்டுக்கதை எனச் சொல்லும் நீங்கள் இதை-சமணர்களை கழுவேற்றுவதை மட்டும்- வரலாற்று சான்றாக எடுத்திக் கொள்வது எண்ண,வாதப் பிறழ்வாகத் தோன்றவில்லையா?

மற்றபடி திராவிடம்,பிராமணீயம் போன்ற விதயங்களைத் நீங்கள் தொட்டிருக்கும் விதம் சரியான பார்வையில் இருக்கிறது.

சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்,சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !

மற்றபடி நல்ல ஒரு பதிவு !

***********************************
அறிவன் சார்,

//சைவத்தை மீட்டெடுக்க நடந்த ஒரு நிகழ்வாகவே வைத்துக் கொண்டாலும்,அதிலென்ன தவறு இருப்பதக நீங்கள் கருதுகிறீர்கள்?//

தவறு என்று நான் சொல்லவே இல்லையே. இந்தப் பின்னணி உடைய கதை தான் இது என்கிற உணர்வோடு மட்டுமே அணுகச் சொன்னேன்.

//களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?//

எந்த சரித்திரத்தில்? சொல்லுங்கள்; படித்துப் பார்க்கிறேன். கொள்கைக்காகக் கொலை என்பது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.


//மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.//

கழுவேற்றல் சமாசாரங்களை எந்த வகையில் வைப்பீர்கள் ஐயா?

//மேலும் திருமுறை நிகழ்வுகள் பலவற்றை கட்டுக்கதை எனச் சொல்லும் நீங்கள் இதை-சமணர்களை கழுவேற்றுவதை மட்டும்- வரலாற்று சான்றாக எடுத்திக் கொள்வது எண்ண,வாதப் பிறழ்வாகத் தோன்றவில்லையா?//

ராமாயணம் என்கிற கதையைக் கற்பனை என்கிறோம்; அந்த நூலின் இருப்பையே மறுப்பதில்லையே! அதே போல் சம்பந்தர் ஞானப்பால் குடித்ததைக் கற்பனைப் புனைவு என்கிறோமே தவிர, அவருடைய தேவாரப் பாடல்களை மறுக்கவில்லை. கழுவேற்றல் விவகாரத்தை வெறும் பெரியபுராண அடிப்படையில் சொல்லவில்லை. சரித்திர சான்றுகள் உள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நான் பள்ளிப்பருவத்தில் கண்ட ஒரு கழுமரம் தான் முதலில் நான் இந்தப் பாதகம் குறித்து அறிய வைத்தது. அப்போது எனக்கு தேவாரம் பற்றிக் கூடத் தெரியாது.

//சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்//

ஒரு வேண்டுகோள். என்மீதான அன்பிலோ, அல்லது கடிந்து சொல்ல இருக்குமொரு கருத்தை மென்மையாகச் சொல்வதான அடிப்படையிலோ கூட இது போன்ற முத்திரைகளைத் தயவு செய்து தவிர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன். என் கருத்துக்களை எப்போது தோன்றினாலும் எந்த டிகிரியில் கடிந்து சொல்வதையும் உவப்புடனேயே எதிர்கொள்வேன்.

//சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.//

அவசரப்பட்டு தவறாகச் சொல்லி விட்டோம் என்று நீங்கள் உணரும் வண்ணம் விரைவில் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

//மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !//

அடுத்த தமிழக விஜயத்தில்?

************************************************


>>>>>>>தவறு என்று நான் சொல்லவே இல்லையே. இந்தப் பின்னணி உடைய கதை தான் இது என்கிற உணர்வோடு மட்டுமே அணுகச் சொன்னேன்.>>>>>>>>>>>

இதில் ஒரு வரலாற்றுப் பிழை இருப்பதாகவும் கருதுகிறேன்;திருத் தொண்டர் புராணம் ஒரு வழிநூல் மட்டுமே;முதநூல் அல்ல.சேக்கிழார் அரசனைத் திசைதிருப்பும் முக்கிய நோக்கில் பெரியபுராணம் எழுதவில்லை,அது நம்பியாண்டார் நம்பியவர்கள் எழுதிய திருத்தொண்டத் தொகை'யின் வழிநூல் மட்டுமே.
சேக்கிழார் தொண்டத்தொகையின் கதைகளை அந்தந்த கதை நிலங்களுக்குச் சென்று,விதயங்களை ஆய்ந்து பெரிய புராணத்தை ஒரு வரலாற்று ஆவணமாகவே படைத்தார்.
எனவே பெரியபுராண நிகழ்வுகள் கட்டுக்கதை என்று சொன்னோமென்றால்,அது நமது அறியாமையே.



>>>>>>>>>//களப்பிரர் அவர்களைத் தொட்ர்ந்த சமணர்கள் காலங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் நடந்த அக்கிரமங்களை வரலாற்றின் பக்கமும் சிறிது திரும்பிப் பாருங்கள்.
சமண்ர்களை சம்பந்தர் கழுவிலேற்றினார் என்பதை சமுதாய அழிவாகப் பார்க்கும் நீங்கள்,சமணர்கள் அவர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பாளர்களை உயிருடன் எரித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் காணக் கிடைக்கின்றனவே,அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?//

எந்த சரித்திரத்தில்? சொல்லுங்கள்; படித்துப் பார்க்கிறேன். கொள்கைக்காகக் கொலை என்பது எந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்.>>>>>>>>>>>

மகேந்திர பல்லவன் காலத்தில் மகேந்திரன் சமணப் பள்ளிகளில் தமது இளமைப்பருவம் முழுதையும் ஒரு சமணனாகவே கழித்தான்,அக்காலத்தின் வரலாற்றை அணுகிப் பாருங்கள்,நாவுக்கரசரும் மகேந்திரன் கையில் பெரும்பாடு பட்டார்,ஆயினும் இறை மாட்சி அவரைக் காத்ததை அறிந்து,பயந்து பின்னர் நயந்து சைவத்தை மேற்கொண்டான்.
அக்கால கட்டங்களின் சமணர்களின் கொலைபாதகங்களின் சான்றுகள் வரலாற்றில் இருக்கிறது.
பிற்காலத்தில் சம்பந்தரின் காலத்திலும் சமணர்கள்,களப்பிரருடன் சேர்ந்துகொண்டு சம்பந்தரை அழிக்க முயன்றார்கள்.
அவர்களை முற்றாக ஒழித்தாலே இதமான மத சூழல் நிலவும் என்ற சூழல் நிலவியதாலேயே,அனல்,புனல் வாதங்களுக்கு ஈடாக அவர்கள் உயிரையும்,தன் உயிரையும் அரசன் முன் பணயம் வைத்தார் சம்பந்தர்;அவர் வென்றதால் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்,தோற்றிருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார்.
அவரைக் காத்தது தமிழும்,சைவமும்,இறையும் மட்டுமே..
அக்கால கட்டத்தில் ஓலை வைகை ஆற்றை எதிர்த்து செல்வதும்,தழலில் வேகாமல் பச்சையோலையாக ஒளிர்ந்ததும் இறை சக்தியல்லாது நடைபெற சாத்தியமல்ல;மேலும் அதில் ஏதாவது ஏமாற்று வேலை நடக்கவோ,அதை நம்பி அவர் சொல்வதை எல்லாம் கேட்கவோ பாண்டிய அரசன் முட்டாளும் அல்ல.
மேலும் மகேந்திர பல்லவனும்,பாண்டியனும் சைவத்திற்கெதிரான மன நிலையில் வெகுகாலம் இருந்து பின் நாவுக்கரசராலும்,சம்பந்தராலும்,இறை சக்தியாலும் சைவத்தை கடைப்பிடித்தவர்கள்,எனவே சரியான,அசைக்க முடியாத காரணம் இன்றி பலம் வாய்ந்த அந்த அரசர்கள் மாறுவார்கள் என நினைப்பதும் அறிவின் பாற் பட்ட ஒன்றல்ல.



>>>>>>>>>//மேலும் சைவத்தைப் பேணுபவர்கள்,சுய முயற்சியாக,ஒரு படையெடுப்பின் வழியிலோ,அல்லது மதம் பரப்பும் நோக்கிலோ எங்காவது சென்று பேரழிவுகள் நடத்தினார்கள் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் தர இயலுமா?
ஆனால் சைவம்,வைணவம் தவிர மற்ற எல்லா கடவுள் கொள்கைக் காரர்களும் இத்தகைய பேரழிவுகளை,சுயமாக- suo moto-மற்றவரின் மேல் நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் பல கானக் கிடைக்கின்றன.//

கழுவேற்றல் சமாசாரங்களை எந்த வகையில் வைப்பீர்கள் ஐயா?>>>>>>>>>>>>

இது சமணர்களின் கொலை பாதகங்களுக்கெதிரான மாற்று வினை என்றே நான் சொல்கிறேன்;ஒரு குழுவினர் அரசனைக் கைக்குள் போட்டுக் கொண்டு பல அராஜகங்களை அரங்கேற்றும் போது,அவர்களை ஒழித்தால் ஒழிய மற்றவர்கள் அமைதியாக வாழமுடியாது என்ற நிலையில்,தன் இறைசக்தி நிரூபிக்கப்பட்டால்,அவர்கள் அனைவரும் கழுவேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் படுகிறது;அதில் தோற்கும் பட்சத்தில் தன் உயிரையும் பணயம் வைக்கிறார் சம்பந்தர்.
இது ஒரு மறைமுகப்போர்;ஒருவர் தோற்றே ஆக வேண்டும்,சைவம் தோற்றிருந்தால் சம்பந்தர் இறந்திருப்பார்,வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.




>>>>>>>>>>//சொல்ல வரும் கருத்தை,வாதத்தை திறமையுடன் வைக்கும் திறம்பெற்ற நீங்கள்//

ஒரு வேண்டுகோள். என்மீதான அன்பிலோ, அல்லது கடிந்து சொல்ல இருக்குமொரு கருத்தை மென்மையாகச் சொல்வதான அடிப்படையிலோ கூட இது போன்ற முத்திரைகளைத் தயவு செய்து தவிர்த்தால் நன்றி உடையவனாக இருப்பேன். என் கருத்துக்களை எப்போது தோன்றினாலும் எந்த டிகிரியில் கடிந்து சொல்வதையும் உவப்புடனேயே எதிர்கொள்வேன்.>>>>>>>>>>>>

உண்மையைத்தான் சொன்னேன்;திறனாளர்கள் நேர்மைத்திறமும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைப்பதால் !



>>>>>>>>>//சைவம்,திருமுறை,இறைத் தத்துவம் போன்ற பலவகைகளில் பலமுறை,ஒரு சாய்வான நையாண்டிப் பார்வை,முறையையே கைக்கொள்வதிலிருந்து மாறுபட்டு,முதன்முதலில் சிறிது ஆய்ந்து விதயங்களைத் தொட்டிருக்கிறீர்கள்,அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.//

அவசரப்பட்டு தவறாகச் சொல்லி விட்டோம் என்று நீங்கள் உணரும் வண்ணம் விரைவில் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.>>>>>>>>>>>

நடந்தால் மிக மகிழ்வேன்.




>>>>>>>>//மேலும் தெளிவு பெற,'பெரியபுராணம் ஒரு ஆய்வு'-அ.ச.ஞா. எழுதியது,படித்துப் பாருங்கள்,மேலும் உங்கள் பார்வை விரிவடையலாம் !//

அடுத்த தமிழக விஜயத்தில்?>>>>>>>>>>>

வாழ்த்துக்கள்.

No comments:

தேட...