Monday, January 14, 2008

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

நிறைய தவறான தகவல்களை வவ்வால் சொல்லியிருக்கிறார்..

/////////

//ஓவ்வொரு பொஷிசன் மாற்றி செய்யும் பொழுதும் மூச்சை எவ்வளவு நேரம் உள் வைக்க வேண்டும், எப்பொழுது வெளியேற்ற, உள்ளிழுக்க வேண்டும் என்பதனைப் போன்றல்லாம் இருக்கிறது.//

ஆமாம் ஆனால் ஒவ்வொரு பொசிஷனிலும் எத்தனை முறை அப்படி மூச்சை இழுத்து வெளியிடுவீர்கள், அந்த நிலைக்கு போகும் முன்னர் இழுத்தால் அந்நிலை மாறும் வரை அடக்கி வைத்திருப்பீர்கள்,அதே போசிஷனில் இழுது விட்டு என்று எதுவும் செய்ய மாட்டீர்கள்.//////////

இவ்வாறான மூச்சை ஒரு யோகா நிலையில் முழுக்க அடக்கி இருக்க வேண்டுமென்றோ அல்லது முழுக்க வெளிவிட வேண்டும் என்றோ நியதி இல்லை.
பெரும்பாலும் ஒரு நிலைக்குப் போகும்போது மூச்சை உள்ளிழுக்கவும்,அந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு வரும்போது வெளிவிடவும் குறிப்புகள் இருக்கும்;பழகப் பழக இது மிக எளிதாகவே இருக்கும்.
மறாத ஒரு நிலை சொல்லப் பட்டிருந்தால்,எ-டு ஆக சிரசாசனம்,சர்வாங்காசனம் போன்றவை பழகியவர்கள் 30 நிமிடம் கூட நிற்கலாம்,அது போன்ற சமயங்களில் லேசான சாதாரண மூச்சு விடுதலே பரிந்துரைக்கப் படுகிறது.


/////////ஆனால் மூச்சுப்பயிற்சி என்பது ஒரு நிமிடத்திற்க்கு எத்தனை முறை மூச்சு இழுத்து வெளியிடுகிறீர்கள் என்பதை செய்வதே.////////
மூச்சுப்பயிற்சி என்பது இது அல்ல.1:4:1 எனபதுதான் மூச்சுப் பயிற்சியின் தாத்பரியம்.
அதாவது ஒரு பங்கு நேரம் மூச்சை இழுத்து 4 பங்கு நேரம் உள்நிறுத்தி பின் 1 பங்கு நேரம் வெளிவிட வேண்டும்.
அதாவது 3 வினாடிகள் இழுத்துக் கொண்டே இருந்து 12 வினாடிகள் உள்நிறுத்தி பின் 3 விநாடிகள் வெளிவிட வேண்டும்.
யோக மொழியில் இது ரேசகம்,கும்பகம் எனப்படுகிறது.


///////////மூச்சுப்பயிற்ச்சி என்பது யோகாவின் "precursor" யோகா செய்வதற்கு முன்னர் சிறிது மூச்சு பயிற்சி அவசியம். ஏன் எனில் ஆசனங்களில் அமரும் போது மூச்சடக்க நேரிடும் அது கடினமாக தெரியாமல் இருக்க , யோக ஆரம்பிக்கும் முன்னர் பிராணயமம் பற்றி சொல்லி அதை செய்ய வைப்பார்கள்./////////
இவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



////////ஏன் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.உடல் யோகா செய்ய தயார் ஆகும்(warm up) மேலும் மூச்சு அடக்குதல், உடல் நெகிழ்தல் எல்லாம் அப்போது தான் ஆசனங்கள் செய்ய எளிதாக வரும்./////////
இதுவும் தவறான கருத்து.உண்மையில் மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் என்பது சவாசனத்திற்கு முன் செய்ய வேண்டியது.




////////ஒருவனுக்கு பித்த நாடி ஒடுங்கி விட்டால் மரணம் அருகில் என்பது வைத்தியம் கூறும் உண்மை///////
அவசியமில்லை.வாத நோய் உள்ளவர்களுக்கு பித்தநாடி குறைவாகவே பேசும்.மரணம் வந்தால்தான் குறைய வேண்டும் என்ற அவசியமில்லை.

/////////பெரும்பாலும் கை ரேகை ஜோதிடம்ப்பார்ப்பவர்கள் நம் நாடியை வைத்து தான் நமக்கு ஜோதிடம் சொல்வார்கள்!ஆயுசுக்கெட்டி என்றெல்லாம் அதை வைத்தே சொல்வார்கள்(விரல் நுனி,மணிக்கட்டில் நாடிப்பார்க்கலாம்/////////
இது ஒரு ஜோக்.உங்கள் சொல்படி சோதிடர்கள் அனைவரும் நாடி பார்க்க கற்றுவைத்திருக்க வேண்டும்;உண்மையில் பல ஆய்ர்வேத சித்த மருத்துவர்கள் கூட சரியாக நாடி பார்க்கதெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.இந்நிலையில் சோதிடர்கள் ஒழுங்காக லக்னக் கணக்கைக் கணித்தாலே அது பெரிய விஷயம் !
மேலும் விரல் நுனியிலெல்லாம் நாடி பார்க்க முடியாது,மணிக்கட்டில் மட்டும்தான்.
நகத்தின் அடிப்பகுதியை ஆராய்ந்து ரத்தத்தின் நிலையைப் பற்றி அறியலாம்.விரல் நுனியும் இரத்த நிலையை ஆராயவே..



//////////உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது///////
முழுக்கத் தவறு.
உடற்பயிற்சி மேல்த்சைகளில் தசைநார்களில் வேலை செய்கிறது;யோகா 80 சதம் உள் உறுப்புகளை,நிணநீர் சுரப்பிகளைத் தூண்டி செயற்படுத்துகிறது.தசைகளில் செயல்பாடு மிகச் சிறிய பங்கே.



////////பொதுவாக யோகா செய்த பிறகு உடல் பயிற்சிகள், வெயிட் தூக்கி செய்யும் பயிற்சிகள் செய்ய கூடாது, ஏன் எனில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்றுக்கு எதிரான வகை சார்ந்தது.

காலையில் யோகா செய்தால் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்!////////

சரி.



////////பிராணயமம், யோகா , தியானம் இந்த வகையில் வருது தான் சிறந்த முறை!///////

தவறு.யோகா,பிராணாயாமம்,சவாசனம் அல்லது தியானம்,இதுவே சரி.
பொதுவாக தியானத்தை யோகா,பிராணாயாமத்துடன் குழப்ப தேவையில்லை.

******************************

//////!(இன்னும் சொல்லப்போனால் யோகாவல் அதிகப்பலன்)/////////

இது ஒன்றுதான் சரி(மீண்டும் !!) உங்கள் கருத்துக்கள் கன்னியாகுமரி இருக்கும் திசை என்று சொல்லிக்கொண்டு,பலர் சொல்லியும் கேளாமல்,தில்லி இருக்கும் திசை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பவன்,கடைசியில்,இல்லை நான் தில்லிக்குப் போகத்தான் ஆரம்பத்திலிருந்தே முயற்சித்தேன் எனச் சொல்வது போல இருக்கிறது.

ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன்,நான் ஒன்றும் யோக நிபுணன் என claim செய்யவில்லை;ஆனால் என் கருத்துக்களில் யோகம் பற்றிய சுமார் 20 வருடகால ,படிப்பு மற்றும் அனுபவத்தின்,வாயிலாக நான் சந்தேகமற கொண்ட முடிவுகளையே சொன்னேன்;மற்றபடி இதில் வாதம் வளர்த்து என நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.
உண்மையில் யோகம் பற்றிய மேலும் அறிய ஆசைப்பட்டால் சுந்தர யோகசிகிச்சை-யோகாச்சார்யா சுந்தரம் எழுதியது-இப்போது அச்சில் இருக்கிறதா என்றே தெரியவில்லை-படிக்கவும்...
நிறைய தெளிவடைவீர்கள் !

*****************************

நண்பர்களே,
என்னைப் பொறுத்தவரையில் எழுத்து என்பது ஆழ்ந்த,அகன்ற படிப்பும்,அவற்றின் பாலான சிந்தனையும்,இவை இரண்டும் தரும் அனுபவமும் சேர்ந்த கலவை !

இணையம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரம் புதுவெள்ளம் கொண்டுவரும் ஆற்றுநீராய் பதிவுலகில் பொங்கிவரும் எழுத்துக்களை தருகிறது.
இதில் வேண்டியது எடுக்க வேண்டியது படிப்பவர் பாடு !

யோகம் பற்றிய பல குழப்பக் கருத்துக்கள் ஏற்கனவே பலரிடம் உண்டு.அறிவியல் சார்ந்து எழுதுவதாகக் கருதும் சுஜாதா போன்ற பல மூத்த எழுத்தாளர்கள் கூட யோகம் பற்றிய மூடக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் பார்ப்பதுதான்.காரணம் அவரின் கருத்துக்களுக்கும் சரியான எதிர்வினை கிடைக்காமல் இருந்திருக்கலாம்....


படிப்பவர் சகலருக்கும் கட்டாயம் உபயோகப்பட வேண்டிய ஒரு விதயத்தில் சில சரியல்லாத கருத்துக்கள் காணக்கிடைக்கும் போது,அவற்றுக்கான மறுப்பைப் பதிவு செய்தால் கொள்பவர் சிந்தித்து வேண்டுவன கொள்ளலாம்;அல்லது தள்ளலாம்;

கருத்துக்களுக்கு சான்றாவணமாக ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன்.இந்தியாவில்,தமிழில் யோகக்கலையைப் பற்றிய எளிய,சிறந்த புத்தகம் அதுவே என்று நினைக்கிறேன்.

அதற்காகவே வவ்வால் எழுதியவற்றிற்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.
எவரெவர் சரியாக எழுதுகிறார்,எவரெவர் தவறாக எழுதுகிறார் எனக் கண்காணிக்கும் முடிசூடலை அவரெனக்கு அளிக்க முன்வரும் போதும்,அதைசெய்வதை விட முக்கிய வேலைகள் பல எனக்கிருக்கின்றன.

மற்றபடி வவ்வால் அல்லது எக்ஸ் அல்லது ஒய் என்ற ஒருவரை மறுத்தே எழுத வேண்டிய கட்டாயங்கள் எனக்கில்லை என்பதை அவரும் உணர்வார் என்றே நம்புகிறேன்!

அன்பும்,நன்றியும்,
அறிவன்

********************************************

http://sangappalagai.blogspot.com/2008/01/40.html

ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்; தெளிவைத் தேடும் பொருட்டு விவாதம் செய்யலாம்,ஆனால் வறட்டு விவாதம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கலாமே என்ற எண்ணமே ஒதுங்கியதன் காரணம் !
ஆர்வம்(இருக்கும் பட்சத்தில்!) கொண்டவர்களுக்கு தெளிவான தகவல் கிடைக்க ஏதுவாகவே புத்தக விவரம் குறிப்பிட்டேன்...சிறிது முயன்றால் நூலகங்களில் கட்டாயம் இருக்கும் !
**************************************************

தெகா,

உங்களின் பல நன்றிகள் என்னை பனிக்க வைக்கின்றன;உண்மையில் சில நல்ல தகவல்களை பதிவுலகத்திற்கு அளிக்க ஏதுவாக இருந்த உங்கள் பதிவுக்கே நன்றி.

//////என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் இங்கே தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்////////

குழப்பம் தீர்ந்தால் மகிழ்ச்சிதான்.

யோகம் மட்டுமல்ல,வாழ்வியல் சார்ந்த பல நுண்கலைகளிலும் எனக்கு உள்ள இயல்பான ஆர்வமே,இப்பதிவு சம்மந்தமாக எழுந்த பல தவறான புரிதல்களை நீக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

//////இதுக்கே கண்ணைக் கட்டுதுன்னா, இன்னமும் எவ்வளவோ இருக்கே... :)///////

வாங்க,வாங்க,வாழ்ந்து பாத்துடுவோம் !
*********************

இந்த அனானி முகத்துக்குப் பின்னால யாருன்னு தெரியலை,இருந்தாலும் என் கருத்தையும் சொல்றேன்.

//////ஆசனா(இப்பதிவில் யோகா என குறிப்பிடப்படுவது)//////

நான் விளக்கப் பதிவிலேயே யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும் என்றுதான் கூறியிருக்கிறேன்.இங்கு விவாதித்த அனைவருமே யோகாசனத்தைப் பற்றியே விவாதித்தார்கள் என்றே நினைக்கிறேன்,முழுமையான யோகத்தைப்(அஷ்டாங்க யோகம்,எண்குணத்திறைவன்,திருமந்திரக் கருத்துக்கள்,சமாதி நிலை என அது ஒரு பெரிய டொமைன்) பற்றி அல்ல !

//////ஆனால் ஒவ்வொரு ஆசனத்திலும் மூச்சு பயிற்சி உண்டு///////
யோகாசனத்திலும் ஒவ்வொரு நிலையிலும் முச்சைப் பற்றி சொல்வது,உள்ளிழுப்பதா,அல்லது வெளிவிடுவதா என்பதைப் பற்றியே என நான் நினைக்கிறேன்,அது logical ஆனதும் கூட.அது முழுமையான மூச்சுப் பயிற்சி ஆகாது;மூச்சு விடுதலே முச்சுப் பயிற்சிதான் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்ப விரும்புகிறேன்.

யோகாசன மொழியில் அனைத்து ஆசனங்களுக்குக் கடைசியாகத் தான் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம் பரிந்துரைக்கப் படுகிறது.
இதை அழகு தமிழ்,யோகாசன மொழியில் நாடிசுத்தி என அழைக்கிறது.

3 comments:

Thekkikattan|தெகா said...

நன்றி, அறிவன்!!

எனது முதல் பதிவில் மிகவும் விளக்கமாக நீங்கள் கொடுத்த சில விளக்கங்களை கொடுத்துள்ளேன். ஆனால், முழுமையாக அங்கு படித்து புரிந்து கொண்டமாதிரி தெரியவில்லை, எதிர் வினையாற்றியவர்கள். இப்பொழுது மேலும் நீங்கள் வந்து கூறியிருக்கிறீர்கள்.

மீண்டும் நன்றி!

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Crescenet,Thanks for your appreciations..

தேட...