Sunday, January 20, 2008

ALOPECIA- புழுவெட்டு

ALOPECIA- புழுவெட்டு

பலரும் பல விதயங்கள் சொல்வார்கள்...
மதுரைப் பக்கம் யாராவது இருந்தால்,செல்வார்களாயின் விளக்குத்தூண் பகுதியில் கடைகளில் 'காஷ்மீர் குசம்' என்ற ஒரு கலவை பாக்கெட் விற்பார்கள்;இது சுமார் 15-20 நாட்டு மருந்துகளின் கலவை,ஒரு பாக்கேட் விலை ரூ 20.க்குள் தான் இருக்கும்;ஒரு பாக்கெட் கலவையை சுமார் 300 மிலி கண்ணாடி அல்லது செராமிக் கலனில் (பிளாஸ்டிக்,மெட்டல் கலன்கள் வேண்டாம்)தேங்காயெண்ணெயில் ஊறவைத்து ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி நல்ல சூரிய வெய்யிலில் சுமார் 15 நாட்கள் ஊறவைத்து,காயவைக்கவும்.
ஒவ்வொரு நாளும் இரவில் நன்கு கலந்து மறுநாள் காயவைக்கவும்.
பின்னர் தெளிவாக வடித்துக் கொண்டு(பில்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை,தெளியவைத்து பாட்டில் மாற்றினாலே போதும்),அந்த பாக்கெட்டுடனேயே ஒரு சிறிய பாட்டிலில் வாசனைத் தைலம் கொடுத்திருப்பார்கள்,அதை ஊறவைத்து வடித்தெடுத்த எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொண்டு(சூப்பரான வாசனைத் தைலம் தயார் !) தினமும் மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து கடலை மாவு/பயத்தம் மாவு/சுத்தமான் சீயக்காய்த் தூள் போட்டு குளித்துவிடலாம்.அல்லது நாள் முழுதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் சிறிதளவாக எடுத்து,நன்றாக மசாஜ் செய்து கொண்டு,தலைக்கு நீர் விடாமல் தலை சீவிக் கொள்ளலாம்.

எப்படி இருப்பினும் வாரத்தில் ஒருநாளாவது நன்றாக மிகுதியான எண்ணை மசாஜ் செய்து தலைக்கு நீர் விட்டு அலச வேண்டியது முக்கியம்.

முக்கியமாக தவிர்க்க வேண்டியது: அனைவரும் சொல்லும் எல்லா வைத்தியத்தையும் ஒவ்வொரு மாதம் பரிசீலித்து முயற்சிப்பது ! தலைமுடியை முழுதும் போக்கடிக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை !!!!!!

பொறுமையுடன் முயற்சி செய்யவும்,குணம் உண்டு.

கோட்டக்கல் ஆர்யவைத்ய சாலையில் மகாதிக்தகஷாயம் என்ற ஒரு கஷாயம்ம் உண்டு.

அதை ஒரு பாட்டில்(250 மிலி) வாங்கி காலையில் வெறும் வயிற்றில் உணவுக்கு 3 மணி நேரம் முன் சுமார் 15 மிலி அளவில் warm watter உடன் கலந்து பருகச் சொல்லவும்.

மருந்து ரொம்ப இனிப்பாக(!) இருக்கும்,பரவாயில்லை விழுங்கி விடவும்,நாள்பட்ட உடலின் கசடுகளால் ரத்தம் கெடுவதாலேயே தோல்நோய்கள் வருகின்றன,இதை சரி செய்யும் மிகச் சிறந்த மருந்து இது.

அதிக நேரம் இரவில் விழிப்பது தவிர்க்க வேண்டும்;குறைந்தது 6 மணி நேரத் தூக்கம்,15 நாட்களுக்க்கு ஒருமுறையாவது உடல்முழுதும் நல்லெண்ணை தேய்த்து வெண்ணீரில் குளியல் ஆகியவை உடலை மேம்படுத்தும்.

1 comment:

சுந்தரவடிவேல் said...

comment or mail:

ஆமா study hourல பூசிக்கிட்டு வருவீங்களே அது இந்தச் சரக்குதானுங்களா?
:))


(குண்டா, உன் பின்னூட்டமெல்லாம் படிச்சேன். கலக்குரடா. அப்படியே. உன்னைப் பாக்குற மாதிரி சந்தோஷமா இருக்கு. நீ எழுதுறதை தங்கமணி இப்பதான் கண்டுபிடிச்சுச் சொன்னான். நல்லது. கலக்கு.)

தேட...