Thursday, July 10, 2014

ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...

ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...


பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள்  'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் உங்கள் கட்டுரையின் பொத்தாம் பொதுவான மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய கிண்டல் ஒத்துக் கொள்ள இயலாதது. ஆங்கில(அலோபதி) மருத்துவ முறை திட்டமிட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளைக் கிட்டத்தட்ட சிதைத்து விட்டது. ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் தீர்வற்ற சில நோய்களுக்கு இந்திய பாரம்பரிய முறைகளில் தீர்வு இருப்பதை நான் நேரடியாவும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப நிகழ்வு மூலமும் உணர்ந்திருக்கிறேன்.

இது போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அமையாமல் போன 'நிறுவனப் படுத்தலில்' தான் குறை இருக்கிறதே தவிர அந்த மருத்துவ முறைகளில் அல்ல.
அலோபதியில் 5000 ரூபாய் தேவைப் படும் சிகிச்சைக்கு 500 ரூபாய்க்குள் சித்த மருத்துத்தில் தீர்வு இருக்கிறது. நமது வாழ்வியல் அறிவுக் கருவூலத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை நமது இன்றைய சமூகத்திற்கு இருக்கிறது.

எனது வகுப்புத் தோழன் மற்றும் மீடியாவில் பணியாற்றும் கௌதமின் கட்டுரையையும், மூலிகைமணி கண்ணப்பரின் நம்நாட்டு மூலிகைகள் கட்டுரைகளையும் நேரம் உண்டாக்கிக் கொண்டு அவசியம் படியுங்கள்.

தயவு செய்து உங்களைப் போன்ற 'படித்தவர்கள் தோற்றம் கொண்டவர்கள்' கூட பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதை செய்யாதீர்கள்.

இந்தியாவைத் தவிர பல ஆசிய நாடுகளில் தத்தம் பாரம்பரிய மருத்துவ  முறைகளைப் பேணி வளர்க்கிறார்கள்;அவற்றால் பயன் பெறுகிறார்கள்.

tcm மருத்துவ முறைகளைப் பற்றி இணையத்தில் தேடுங்கள்,சிறிது தெளிவும் சீன, சீனம் சார்ந்த நாடுகள் அவற்றை எப்படிப் பேணுகின்றன என்பதும் தெரியும்.

No comments:

தேட...