Wednesday, October 1, 2008

"சில வெளிப்படையான எண்ணங்கள்"

"சில வெளிப்படையான எண்ணங்கள்"

நன்று ராகவன் அவர்களே..

உங்கள் இந்தப் பதிவின் அனைத்தையும் வரவேற்கிறேன்,ஒன்றைத் தவிர..

>>பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். >>

இந்த கூற்றுக்கும்,விஜய் தொலைக்காட்சியில் உளறிய அந்த அய்யங்கார் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரு இனத்துக்கு எதிரான அரசு ரீதியான ஒடுக்குதல்கள்,அது பார்ப்பனரோ அல்லது வேறு இனமோ,சுத்த அயோக்கியத்தனம் என்பதுதான் என் நிலைப்பாடு..

ஆனால் ஒரு சாதியில் பிறந்தேன் என நான் பெருமைப்படுகிறேன் என்ற கூற்றில் மறைமுகமான சாதீய விதயங்கள் சுட்டப் படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்தே இக்கூற்றை முன் வைக்கிறீர்களா?

அந்தணராகப் பிறப்பதில் எந்தப் பெருமையும் இல்லை;அந்தணராக வாழ்ந்தால் அதில் பெருமை இருக்கிறது.அந்தணர் என்பவர் அறவோர் என்கிறது தமிழ்நீதி.

அந்தணராகப் பிறந்ததாலேயே நான் அறவோன் என்பதல்ல அர்த்தம்;அறவோனாக வாழ்வதால் நான் அந்தணன் என்பதே பொருள்,அவன் புலையனாகப் பிறந்திருந்தாலும் கூட!

யார் பிராமணன் புத்தகத்தில் சோவும் கூட இதையே சுட்டுகிறார்..

பலவற்றில் ஆழ்ந்து யோசிக்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை சொற்றொடரை உபயோகித்தீர்கள் என அறியேன்..

தேட...